Posts Tagged ‘ குஜராத் ’

அரசியல், நிகழ்வுகள்

குஜராத் 2017 பாஜக வெற்றி: இரு பார்வைகள்

குஜராத் 2017 பாஜக வெற்றி:  இரு பார்வைகள்

தொடர்ந்து 22 ஆண்டு கால ஆட்சி செய்ததின் காரணமாக மக்களிடம் ஏற்படும் இயல்பான எதிர்பார்ப்பு ஏமாற்றங்கள், காங்கிரஸ் கட்சியினால் தூண்டி விடப் பட்ட ஜாதிப் பிர்வினைகள், பாக்கிஸ்தானின் சதித் திட்டங்கள், உள்கட்சி பூசல்கள் திறமையின்மைகள், மூன்று முதல்வர்கள் மாறியது என்று கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கான எதிர்மறை காரணங்களையும் வலுவான எதிர்ப்புகளையும் மீறி குஜராத் மாநிலத்தில் பிஜேபி வெற்றியடைந்திருக்கிறது... கணக்கீடுகளை வைத்து பார்க்கும்போது தலித்துகள் பாஜகவுக்கு எதிராக வாக்களிக்கவில்லை என்பதை உணர முடியும். மொத்தம் உள்ள 13 தனித்தொகுதிகளில் 8 இடங்களையும் (61 சதவீதம்), பழங்குடி தொகுதிகளில் 11 இடங்களையும் பாஜக வென்றிருக்கிறது.... [மேலும்..»]

ஆன்மிகம்

அனைத்து சாதி அர்ச்சகர்கள்: கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

அனைத்து சாதி அர்ச்சகர்கள்:  கேரளம், பீகார், குஜராத்…. தமிழ்நாடு

பாஜகவும், ஐக்கிய ஜனதாதளமும் ஆண்ட பீகார் மாநிலத்தில் 2007ஆம் ஆண்டே பெருமை வாய்ந்த பல நூற்றாண்டுகள் பழமை மிக்க கோயில்களில் தாழ்த்தப்பட்ட பட்டியல் சாதியினர் பூசகர்களாக வந்து விட்டனர். இன்று இடதுசாரிகள் ஆளும் கேரளாவில் புதிதாக அதிசயம் ஒன்றும் நடக்கவில்லை. வட இந்தியாவின் சாதிய பிரிவினைமிக்க மாநிலங்களில் எல்லாம் தலித்துகள் முதல்வர்களாகவும், அமைச்சர்களாகவும், பூசகர்களாகவும் ஆகிவிட்டனர். தமிழ்நாட்டில் தான் கோயிலில் திருநீறு பெறவும் அவர்கள் கொடுத்தால் மற்றவர்கள் பெற்றுக்கொள்ளவும் உரிமை கேட்டு போராடுகிறார்கள்.... என் எண்ணம் என்னவென்றால் சோழ மண்டலத்தில் ஆயிரம் ஆண்டுகள் பழமை மிக்க பல கோயில்கள் ஒருகால பூஜைக்கும் வழி இல்லாமல் இருக்கிறது.... [மேலும்..»]

அறிவியல், சமூகம், பொருளாதாரம்

புல்லட் ரயில் எனும் பெருங்கனவு

September 14, 2017
-
புல்லட் ரயில் எனும் பெருங்கனவு

நம்மூரிலே இருக்கும் ஆகச்சிறந்த அறிவாளிகள் ராக்கெட் விட்ட போதும் இதையே தான் கேட்டார்கள். இப்போது புல்லட் ரயிலுக்கும் இதையே தான் கேட்கிறார்கள். சீனா எப்போது புல்லட் ரயிலை ஆரம்பித்தது? 2007 இல் தான். ஆமாம். பத்தே பத்து வருசம் முன்பு தான்...சென்னை மும்பை விமான வழியாக 2 மணி நேரம் ஆகும். அதுவே அதிவேக ரயில் வழியாக 4 மணி நேரம் தான் என்றால்? அதுவும் கட்டணமும் விமானக் கட்டணத்தைவிட மூன்று மடங்கு குறைவு என்றால்? இதைவிடவும், புல்லட் ரயில் புதிய அறிவியல், தொழில்நுட்ப சாதனைகளுக்கான கனவை தூண்டிவிடுமல்லவா? டெல்லி மெட்ரோ கட்ட 7 வருடங்கள் என்றால்... [மேலும்..»]

அரசியல்

மொழிவாரி மாநிலங்கள்: உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

மொழிவாரி மாநிலங்கள்:  உரிமை கோரலும், நிறைவேறாத கனவும்

கடந்து வந்த பாதையில் நாம் திரும்பிச் செல்ல முடியாது. மொழிவாரி மாநிலங்கள் ஒரு சரித்திர நிகழ்வு. அதன் தோல்வி, நமது உள்ளார்ந்த கலாச்சார ஒருமைப்பாட்டை வலுப்படுத்த வேண்டியதன் தேவையை உணர்த்துகிறது. வீக்கமல்ல, அனைவருக்கும் சமச்சீரான வளர்ச்சியே அடிப்படைத் தேவை என்பதும் உணரப்படுகிறது. இவ்விரண்டையும் வலுப்படுத்துவதே, ஒரு நாடு என்ற முறையில் பண்பட்டு வரும் இந்தியாவை மேலும் உறுதியானதாக்கும். [மேலும்..»]

அஞ்சலி, அரசியல், சமூகம், விவாதம்

ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…

ஒரு மரணமும்,  மதுவுக்கு எதிரான எழுச்சியும்…

மதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது... இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.... [மேலும்..»]

அரசியல், உடல்நலம், சமூகம்

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]

அரசியல், சமூகம், பொருளாதாரம், வழிகாட்டிகள்

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

மோதியும் சிறுதொழில் வளர்ச்சியும்: ஒரு நேரடி அனுபவம்

இந்த வருடம் குஜராத் பட்டத் தொழில் எழுநூறு கோடி ரூபாய் அளவு வளர்ந்துள்ளது. 2003 ஆம் ஆண்டு வாக்கில் சுமார் ஒரு இலட்சம் சாமானியக் குடும்பங்களே ஈடுபட்டிருந்த ஒரு குடிசைத் தொழிலை எடுத்துக் கொண்டு, அதைப் பத்து வருட காலத்தில் திரு.மோதி பிரம்மாண்டமானதாக மாற்றியிருக்கிறார். இந்துக்களும் முஸ்லிம்களும் இணைந்து செய்து வரும் இந்தத் தொழிலில், தயாரிப்புப் பணிகளில் சாமானிய முஸ்லிம் மக்கள், குறிப்பாக பெண்களே பெருமளவு ஈடுபட்டுள்ளனர். 2003ல் பட்டத் தொழில் சம்பந்தமான பலவிதமான பிரச்னைகளையும் விவாதிக்கும் வகையில் மூன்று வெவ்வேறு குழுக்கள் அமைக்கப் பட்டன.... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 2

பாஜகவுக்கு பெரிய அளவில் நிதி வழங்கும் கார்பரேட்கள் கூட, அவர்களது செயல்பாடுகள் அரசின் தொழில் கொள்கைகளுக்கு விரோதமாக இருக்கும் பட்சத்தில் மோதியிடம் இருந்து எந்த சலுகைகளையும் பெற்று விட முடியாது என்று உதய் மாஹூர்கர் தனது நூலில் பதிவு செய்கிறார். இதே கொள்கையை மோதி மத்திய அரசிலும் கடைப்பிடிக்கும் போது, தில்லி தர்பாரில் அரசியல் “நட்புகள்”, சலுகைகள், பிரத்யேக கவனிப்புகளின் வாயிலாகவே ஊதிப்பெருத்து வந்த ஊழல் சாம்ராஜ்யம் நிலைகுலைந்து அழியக் கூடும். அதனால் தான் மோடி பிரதமராக வருவதைக் குறித்து ஏற்கனவே அங்கு பெரிய கிலி பிடித்திருக்கிறது.... கடந்த எட்டு ஆண்டுகளில், குஜராத்தின்... [மேலும்..»]

அரசியல், தேசிய பிரச்சினைகள்

மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

April 19, 2014
-
மோதியின் குஜராத் மாடல்: ஓலங்களும் உண்மைகளும் – 1

ஜெயலலிதா சொல்லும் வளர்ச்சிக் கதைகளுக்கும் குஜராத் மாடல் வளர்ச்சிக்கும் அடிப்படையிலேயே வித்தியாசம் உள்ளது. அந்த வளர்ச்சிக் கதைகளின் ஸ்கிரிப்டில் டாஸ்மாக் கடைகள், இலவசங்கள், எதேச்சாதிகாரம், மின் பற்றாக்குறை, விவசாய அழிவு, சகிக்க முடியாத ஊழல்கள் என்று பல மசாலாக்களை சேர்த்து வீழ்ச்சிக் கதையாக மாற்றிக் கொண்டிருக்கும் இயக்குனர் கதாசிரியர் ஹீரோயின் தான் ஜெயலலிதா. மோதியின் குஜராத் மாடல் குறித்து பொதுவாக எழுப்படும் கேள்விகளையும் குற்றச் சாட்டுகளையும் சுருக்கமாக இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.... சிறுகுழந்தைகள் மரண விகிதம் (Infant Mortality Rate), பேறுகாலத் தாய்மார்கள் மரண விகிதம் (Mother Mortality Rate) ஆகியவற்றில் குஜராத் தேசிய அளவிலான... [மேலும்..»]

அரசியல், இந்து மத மேன்மை, சமூகசேவை, சமூகம், தொடர், பொது, வரலாறு, வழிகாட்டிகள்

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

குஜராத்தின் இந்துத்துவ மகாராஜா

உதாரணமாக மிகக் கொடுமையான சாதிய சூழ்நிலை தாண்டவமாடிய திருவிதாங்கூரை எடுத்து கொள்வோம். எல்லாவிதமான சாதிய வக்கிரங்களும் நிலவிய பிரதேசம் அது. சுரண்டல், ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரான சாதிய வன்கொடுமைகள் எல்லாம் நிலவியது மிக தெளிவாக ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் ... [மேலும்..»]