தியானமே நம்மை உய்விக்கும்

தினமும் நாம் செய்யும் எந்த காரியத்தையும் சீரான முறையில் செய்திடச் செய்யும் ஆழ்ந்த கவனிப்பே “தியானம்” எனப்படும். நம் கவனத்தை ஒரு வெளி விடயத்தில் செலுத்தும்போது அது புறத்தியானம் என்றும், அதே கவனத்துடன் நம்முள் நாம் வேடிக்கை பார்க்கும் எண்ணங்கள், மனக் காட்சிகள் மற்றும் அதனால் உண்டாகும் உணர்ச்சிகளை ஆராயும்போது அது அகத்தியானம் என்றும் சொல்லப்படுகிறது.

வெளியில் செய்யும் தொழில், படிப்பு அல்லது எதுவாயிருப்பினும் அதில் முழுமையான கவனிப்பு மிக அவசியம். அப்படி ஒருமைப்பட்ட மனதுடன் செய்யப்பட்ட காரியங்கள் யாவுமே வெற்றியைக் காணும். உலகம் போற்றும் விஞ்ஞான கண்டுபிடிப்புகளும் மற்றும் பல்வேறு ஆராய்ச்சிகளின் வாயிலாக வெளிவந்த பயனுள்ள பொருட்கள் யாவுமே உன்னிப்பான கவனிப்பும் சிந்தனையும் கொண்ட முயற்சியின் பயனே ஆகும்.

View More தியானமே நம்மை உய்விக்கும்

பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

இந்து மதத்தில் தொண்டுள்ளம் போதிக்கப்படுவதில்லை; மாறாக பிற மதத்தில் தொண்டு (service) என்பது முக்கியமாக உள்ளது என்று நினைக்கிறார்கள். அல்லது நினைக்க வைத்துள்ளார்கள்…. இந்து மதம் படைப்பு முதற்கொண்டு கவனம் செலுத்தி, படைப்பின் கடைசியில் உள்ள எல்லா உயிர்களுக்கும் உதவி செய்ய வேண்டும் என்பதை தினசரி கடமையாக விதித்துள்ளது… இந்து மதம் சொல்லும் தொண்டு அடியவர்க்கு அடியானாக, மிகவும் சாதாரணனாகத் தன்னை பாவித்துக் கொண்டு, இறைவன் புகழ் நிலைக்க வைக்க என்னவெல்லாம் செய்ய வேண்டுமோ அவற்றைச் செய்வதே…

View More பிரபஞ்சவியலில் உலகங்களின் தோற்றமும் உயிர்களின் பிறப்பும்

வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கர்நாடக மாநிலத்தில் தர்மஸ்தலா என்ற ஊரிலுள்ள மஞ்சுநாதர் ஆலயத்தில் தினந்தோறும் ஆயிரக் கணக்கான யாத்ரீகர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. சென்ற வருடம் அமிர்தஸரஸ் பொற்கோவிலுக்குச் சென்ற பொழுது அங்கு நடக்கும் அன்னதானம் கண்டு வியந்தேன். யாத்ரீகர்களுக்குத் தண்ணீர் கொடுக்கும் நேர்த்தியையும் சாப்பிட்ட தட்டை சுத்தம் செய்து நன்கு துடைத்துத் தருவதையும் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்

View More வாழையடி வாழையாய் வரும் நற்பண்புகள்

கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

ஒரு பெண்ணுக்கு ஆண் நண்பர்கள் இருப்பது சகஜம் என்பது இன்றைய பெண்களின் நிலை. ஆண் பெண் நட்பு நல்லது என்று பிரசாரம் செய்தவர்கள் அதன் அளவு கோலைப் பிரசாரம் செய்யவில்லை. மாறாக ஆணும் ஆணும் பழகுவதைப்போலவே பெண்ணோடு பெண் பழகுவதைப் போலவே ஆணும் பெண்ணும் பழகலாம் என்றே உசுப்பிவிட்டனர். விளைவு கேவலமான பத்திரிக்கைச் செய்திகள் நாறும் அளவிற்கு இன்றைய குடும்ப கலாச்சாரம் சீரழிந்து போய்விட்டது. ஒரு மதிப்பிற்குரிய பெண்மணியிடம் இந்த நட்பு நாகரீகத்தில் எது அளவு என்றும் நீங்கள் எப்படி சமாளிக்கிறீர்கள் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். அவர் வரிசையாக சில விஷயங்களை அடுக்கினார்…

View More கலாசாரத்தை அழிக்கும் நாகரீக மாற்றமும், முறையற்ற உறவுகளும்

பெரிது பெரிது பெண்மையின் சக்தி!

பெண் என்பவள் ஆதாரசக்தி, வாழ்வின் ஆதாரம். பெண் இல்லை எனில் சிருஷ்டியே இல்லை. அவளை முன்னிறுத்தியே சிருஷ்டி நடந்து வருகின்றது… குடும்பத்தைத் தாங்கும் ஒரு பெண், தன் தனி ஒரு குடும்பத்தை மட்டுமின்றி இந்த சமூகத்துக்கேப் பெரிய உதவி புரிகின்றாள். நல்மக்களை வளர்ப்பதன் மூலம் நாட்டையே உயர்த்துகின்றாள்.

View More பெரிது பெரிது பெண்மையின் சக்தி!