Posts Tagged ‘ கும்பகர்ணன் ’

இராமாயணம் சாதி உயர்வை முன்னிறுத்துகிறதா?

September 10, 2017
By

தென்னகத்தில் அரக்கர் எவரும் வாழ்ந்ததாக வால்மீகி சொல்லவில்லை. காவிரி/பொருநை நதிதீரங்கள் எழிலார்ந்த அமைதி தவழ்ந்த பகுதிகள். பாண்டியரின் செம்பொற் கபாடம் இராமாயண விவரிப்புக்குள்ளாகிறது. தொடக்கத்திலிருந்தே இராமபிரான் ஒருவகையான வலிமையைச் சமப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்பதே இராமாயணத்தின் உட்பொதிந்த பொருள். [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 27

February 20, 2013
By

தன் உடன் பிறந்தவர்களின் சாவுக்குப் பழி வாங்க வேண்டும் என்று அதிகயா துடித்துக்கொண்டு இருந்தான். அவன் தேரில் ஏறிப் போர்க்களத்துக்குப் போகும் வழியிலேயே பல வானரர்களை வெட்டிச் சாய்த்துக்கொண்டே போனான். லக்ஷ்மணன் அவனைத் தடுத்து நிறுத்தித் தன்னுடன் மோதுவதற்குச் சவால் விட்டான். போர் புரிய வக்கில்லாச் சிறுவன் என்று லக்ஷ்மணனை ஒதுக்கிவிட்டு அதிகயா போனான். மேலும் லக்ஷ்மணன் உடலைத் தன்னுடைய அம்புகளால் துளைத்து அவன் நிற்கும் பூமியை ரத்தக் களம் ஆக்குவேன் என்றும் அவன் சொல்லிக்கொண்டே போனான். வெறும் வார்த்தைப் பந்தல்களே   அதிகயாவை வீரனாக்கிவிடாது என்று அதற்கு லக்ஷ்மணன் பதிலடி கொடுத்தான். ஒரு சண்டையில் எதிரியை வெல்ல... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 26

January 30, 2013
By

ராவணன் ஒரு மகாவீரன் மட்டும் அல்லாமல் ஒரு கைதேர்ந்த போர்த் தலைவன் ஆனதால், அரக்கர்களின் மூர்க்கமான தாக்குதலால் வானரர்கள் பக்கம் சரிவு ஏற்பட்டு பலத்த இழப்பு நேர்ந்தது. ஒரு கட்டத்தில் இராமரே வானரர் படையை முன்னின்று இயக்கி, ராவணனையும் நேருக்கு நேர் சந்திக்கலாமா என்று யோசித்தார். ஆனால் ராவணனுடன் நேரடித் தாக்கலில் தானே ஈடுபட விரும்புவதாக லக்ஷ்மணன் தெரிவித்தான். அதற்கு ஒத்துக்கொண்ட இராமர் எதிரியின் பலவீனத்தை பயன்படுத்தவும், தன் பலவீனத்தை எதிரி பயன்படுத்தாது இருக்குமாறும் போர் புரிய வேண்டும் என்று லக்ஷ்மணனுக்கு அறிவுறுத்தினார். எதிர்பாராமல் இருக்கும்போது எதிரிக்கு அடிகொடுக்கும் அதே சமயம், எதிரி எளிதில் தாக்கவோ, காயப்படுத்தவோ... [மேலும்..»]

இராமன்: ஒரு மாபெரும் மனித குலவிளக்கு – 23

November 10, 2012
By

சீதையின் அழகில் மயங்கி இருந்த ராவணனுக்கு விபீஷணன் சொன்னது பிடிக்கவில்லை; அவனது அறிவுரையை ஏற்க மறுத்தான். விபீஷணன் சொன்ன எதற்கும் அந்தக் குழுவில் இருந்த எவருமே எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை என்பதையும் அவன் உணர்ந்தான். அதே சமயம் குழுவில் இருந்த மற்றவர்கள் ஆரவாரமாகத் தாங்கள் தனியாளாக ராமனிடம் போர் புரிந்து வெற்றி பெறுவோம் என்று கை உயர்த்தி, மார் தட்டிப் பேசியதையும் அவன் வெறும் திண்ணைப் பேச்சு என்றும் புரிந்துகொண்டான். சிலரே இருந்த அந்தக் குழு என்றில்லாமல், பொது மக்களில் பலரும் இருக்கும் பெரியதொரு வட்டத்தில் தனக்கு வேண்டிய பக்கபலம் கிடைக்குமா என்று பார்க்க, அத்தகைய கூட்டத்தைக்... [மேலும்..»]

அவ்வரங்கள் இவ்வரங்கள்

இராமகாதை வரங்கள் காரணமாகவே வளர்கிறது... கைகேயி இராமனை, 'உங்கள் மகன்' என்றோ, 'கோசலை மகன்' என்றோ கூடச் சொல்லாமல் யாரோ மூன்றாம் வீட்டுப் பையனைச் சொல்வது போல 'சீதை கேள்வன்' என்று குறிப்பிடுகிறாள்... இராமன், 'என் தாய்' என்று கூடச் சொல்லாமல் அதற்கும் ஒருபடி மேலே போய், 'என் தெய்வம்' என்கிறான்... "இராமபிரான் எனக்கொரு வரம் தந்தார். அதை அவருக்கு நினைவுப்படுத்த வேண்டும்," என்கிறாள் சீதை... கைகேயி கேட்ட இரு வரங்களில் தொடங்கிய இராமகாதை இராமன் கேட்ட இரு வரங்களோடு முடிவடைகிறது. [மேலும்..»]

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

கம்பனின் கும்பன் – எதிர்வினைகள்

"அற்புதமாக, உருக்கமாக எழுதியிருக்கிறீர்கள். கம்பனையே முக்கியமாகப் பேசவிட்டு தேவையான இடங்களில் மட்டும் உங்கள் மணியான விளக்கங்களைத் தருகிறீர்கள்.. அருமை. இந்தக் கட்டத்தில் வரும் முக்கியமான ஒரு பாடலைக் குறிப்பிடுவீர்கள் என்று பார்த்தேன். .. தங்களை அது கவரவில்லையோ.." [மேலும்..»]

கம்பனின் கும்பன் – 3

கம்பனின் கும்பன் – 3

"அதுதான் அவன் கும்பனுக்களித்த standing ovation. கம்ப இராமாயணம் முழுவதிலும் வேறெங்கும் பார்க்க முடியாத இராமனின் மெய்ப்பாடு. ஒரு போர்வீரனாக, கடமையே கண்ணினாகத் தொண்டாற்றிய பிறகு, இராம பக்தனாகவே காட்சியளிக்கிறான் கும்பகன்னன். " [மேலும்..»]

கம்பனின் கும்பன் – 2

கம்பனின் கும்பன் – 2

" அண்ணனே, இந்த உலகினைப் பேர்த்து எடுக்கலாம். அல்லது உலகைச் சுற்றி ஒரு வேலி போடவும் செய்யலாம். ஆனால், இராமனை வெல்வது என்பது எளிதா? " [மேலும்..»]

கம்பனின் கும்பன்

கம்பனின் கும்பன்

"வான்மீகியின் படைப்பில் முரடனாகவும் ஒரு சில வெற்றிகளைப் பெற்ற போதினும், தூங்கித் தூங்கியே தன் ஆயுளைக் கழித்தவனாகவும் சித்திரிக்கப்படும் கும்பகருணன், கம்பன் கைகளில் தனிப் பொலிவும் உயர்வும் பெறுகிறான். " [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey