Posts Tagged ‘ குழந்தை விளையாட்டு ’

ஆட்டிஸம்: தேவை பரிதாபமல்ல, முழுமனதுடன் ஏற்பு

அந்தப் பெண் அந்தச் சிறுவனை அணைத்துத் தூக்கி அவசரமாய் வெளியில் கிளம்ப முயன்றார். அந்தப் பையன் தரையில் படுத்துக் கொண்டு பிடிகொடுக்காமல் கையையும் காலையும் ஆட்டியபடி புரண்டு அழுது கொண்டிருந்தான்.... ”உலகம் உன்னையும் என்னையும் நார்மல்-னு சொல்லுது. ஆனால் நீயும் நானும் ஒரே மாதிரியா இருக்கோம்? இந்தக் குழந்தைகள் தலையில் ஒரு வார்த்தையைக் கட்டி, அதனாலேயே அவங்களை ஒதுக்கத் தேவையில்லை... ஆட்டிஸம் இருக்கற எல்லாரையும் குறைபாடு இருக்கறவங்களாப் பார்க்க வேண்டியத் தேவையில்லை. மேற்கத்திய நாடுகள் இப்ப ஆட்டிஸமை குறைபாடு-னு பார்க்காம வேறுபாடு-னு பார்க்கத் துவங்கியிருக்காங்க...." [மேலும்..»]

பாதுகாப்பான தீபாவளியே ஆனந்தமான தீபாவளி !

தீபாவளி! குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை அனைவரும் ஆனந்தமாக எதிர்பார்த்து, காத்திருந்து வரவேற்க்கும் திருநாள்! தீபாவளி என்றாலே உடனே நினைவுக்கு வருவது புத்தாடைகள், புது மகிழ்ச்சி, பலவகைப் பலகாரங்கள், ரொம்ப முக்கியமானது பட்டாசுகளும் மத்தாப்புகளும் தான்! ஒவ்வொரு வருடமும் தீபாவளிக்கு முன்பும் தீபாவளியன்றும், அதனைத் தொடர்ந்து வருகின்ற நாட்களிலும் பட்டாசு விபத்துகளின் காரணமாக பலர் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக வருகிறார்கள். அதிலும் கண் மருத்துவமனைகளுக்கு வருகின்ற நோயாளிகள் எண்ணிக்கை அதிகம். அதனாலே தீபாவளி ஹாப்பி அண்ட் சேஃப் தீபாவளியாக அமைய உங்களுக்கு சில முக்கியமான டிப்ஸ்கள் : 1. முதலில் அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமே பட்டாசுகளை வாங்கவும். தரமற்ற போலியான... [மேலும்..»]

பட்டாசுடன் கொண்டாடுங்கள்!

உலகெங்கும் பெரும் அளவில் விளையாட்டு நிகழ்வுகள் என்றாலும் புத்தாண்டுக் கொண்டாட்டம் என்றாலும் மாபெரும் வான வேடிக்கைகள் அவ்விழாக்களின் அடையாளமாக இருக்கின்றன. ஆனால் வெகுமக்கள் தாங்களாகவே ஒவ்வொரு இல்லத்திலும் வானவேடிக்கை நடத்தும் சிறப்பு உலகிலேயே தீபாவளித் திருநாளுக்கு மட்டுமே உரித்தானது. இதை நாம் இழக்கலாமா...உண்மையில் பட்டாசுகளும் மத்தாப்புகளும் விளைவிக்கும் ஒலி ஒளி அளவுகளுக்கு மிக மிகச்சிறிய அளவிலேயே வேதிப் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. குழந்தைகளை பணிக்குப் பயன்படுத்துவது ஒரு சமூக அவலம். இதற்கான தீர்வு தயரிப்புப் பொருட்களை தவிர்ப்பதால் நிச்சயம் வந்துவிடாது... [மேலும்..»]

சிவபிரான் சிதைத்த சிற்றில்

சிறுமி மீனாட்சி சிற்றில் இழைக்கின்றாள்; எட்டுத் திக்கிலும் எட்டு மலைகளை சுவர்களுக்குப் பொருத்தமான அடைசுவர்களாக நிறுத்துகிறாள். அடுத்து மேருமலை எனப்படும் தூணை நடுவில் நிலை நிறுத்துகின்றாள். ஆகாயமாகிய விண்ணின் உச்சியை மூடி, சூரியன், சந்திரன் ஆகிய இரண்டு ஒளி விளக்குகளைப் பொருத்தி விடுகிறாள்... வழக்கமாக இத்தருணத்தில் சிறுமியர் என்ன செய்வார்கள்? "எமது சிற்றிலைச் சிதையேலே," என வேண்டுவார்கள். ஆனால் மீனாட்சி என்ன செய்கிறாளாம்? இவ்வாறெல்லாம் செய்யும் கூத்தனான சிவபிரானை வெறுக்காது, நாள்தோறும் மீண்டும் மீண்டும் அவற்றை எடுத்துப் பொறுமையாக வரிசையாக அடுக்கி, பெரிய பழைய அண்டத்தை மூடுகின்ற சிறுவீடு கட்டி விளையாடிய வண்ணம் இருக்கிறாளாம்... [மேலும்..»]