
..ஆனால் இராமரோ நியாயமான, நிரந்தரமாய் எப்போதும் உள்ள உண்மை நிலை ஒன்றையே ஆதாரமாய்க் கொண்ட வழிகளில் உறுதியாய் நிற்பவர். அவரைப் பொறுத்தவரை உண்மை ஒன்றே இறைவனாகும்; ஏனென்றால் இறைவன் ஒன்றே உண்மையுமாகும். அந்த தர்மத்தின் வழி என்பதே உள்ளத்தில் உள்ள உண்மையின் வெளிப்பாடு ஆகும். அதைச் செய்வதே ஒருவனது கடமையும் ஆகும். எவனொருவன் உண்மை வழி நடக்கவில்லையோ அவன் தனது கடமையையும் செய்யவில்லை என்றுதான் அர்த்தம். ஆக உண்மையாய் இருந்து தன் கடமையைச் செய்வதே வாழும் வழிகள் எல்லாவற்றிலும் மிகச் சிறந்த வழி…