Posts Tagged ‘ கேதார்நாத் ’

உத்தராகண்ட் பெருந்துயரமும், வேண்டுகோளும் …

கடந்த 16 ஆம் தேதி இந்துக்களின் வணக்கத்திற்குரிய புனித ஸ்தலமான கேதர் நாத், பத்ரி நாத் அமைந்துள்ள பகுதிகளில் பெருவெள்ளம் ஏற்பட்டு மிகப்பெரிய பேரழிவு நடைபெற்று இருக்கிறது. புனித கங்கை அன்னையும், யமுனை அன்னையும் தன் ஊழி நடனத்தை ஆடியிருக்கிறார்கள். இந்துக்களின் புனித யாத்திரைக்காலமான இந்த நாள்களில் உத்தரகாண்ட், ஹிமாச்சல் பிரதேசங்களில் பெய்த பெரு மழையால் கங்கையிலும், யமுனையிலும் பெருவெள்ளம் ஏற்பட்டு உள்ளது. வழியில்  நதியின் பாதைக்கு இடையூறாகவும் ஆக்ரமித்தும் கட்டப்பட்டிருந்த கட்டிடங்கள் விடுதிகளோடு அருகில் இருந்த கட்டிடங்களையும், வழிபாட்டு தடங்களையும்  நகர்த்தி விட்டது. தனக்கான பாதையை நதிகள் ஏற்படுத்தி கொண்டது.  அலக்நந்தா, பாகீரதி, மந்தாகினி நதிகளிலும்... [மேலும்..»]

உத்தராகண்ட் வெள்ளப் பேரிடர்: பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவுங்கள்

உத்தராகண்ட் மாநிலத்தில் ஏற்பட்ட மாபெரும் வெள்ளிப் பேரிடரினால் ஆயிரத்திற்கும் மேற்பட்ட நமது சகோதர சகோதரிகள் மரணித்துள்ளனர். அவர்களுக்கு நமது இதய அஞ்சலி. உற்றாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் நமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறோம். இமயச் சாரலில் உள்ள நூற்றுக் கணக்கான மலைக்கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளன. அம்மக்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது. பாரதத்தின் பல பகுதிகளிலும் இருந்து புனித யாத்திரைக்காக வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கேதார்நாத், பத்ரி நாத், ருத்ரபிரயாகை, உத்தரகாசி, கௌரி குண்டம் ஆகிய இடங்களில் சிக்கித் தவிக்கின்றனர். இந்திய ராணுவ வீரர்கள் வரலாறு காணாத வகையில் மாபெரும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.... [மேலும்..»]

இமயத்தின் மடியில் – 2

November 14, 2011
By

.கரடுமுரடான பாதையில் அந்தக் குதிரையில் போகும் போது காணும் காட்சிகள் எவரையும் கவிஞனாக்கிவிடும். தொலைவில் பளிச்சிடும் நீல்கண்ட் சிகரம், பனிமூடிய பல சிகரங்கள், அருகில் பசுமையான மலைகளின் இடையே சிலநாட்களுக்கு முன் பெய்த மழையினால் ஆங்காங்கே தோன்றியிருக்கும் அருவிகள், மலயின் கீழே பள்ளதாக்கில் மந்தாகினி நதி மலைக்காடுகளுக்கே உரியமணம், தீடிரென வந்து நம்மை கடந்து மிதந்துபோகும் பனிமேகங்கள்... [மேலும்..»]