தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்

வரலாற்றுக்கு கிறிஸ்தவர், இஸ்லாமியர் என்று பாகுபாடு கிடையாது.. அகழ்வாய்வில் 50 க்கும் மேற்பட்ட முழு தூண்கள் கிடைத்திருக்கிறது. தூண்களின் பூர்ண கலசமே அவை இந்து கட்டுமானத்தின் ஒரு பகுதி என்பதன் சான்று தான். இதற்கு பிறகான 17 வரிசைகளில் இந்த தூண்கள் இருந்ததற்குரிய கட்டுமான அடித்தளங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டது. மேலும் 263 க்கும் மேற்பட்ட நாக கன்னிகைகள், நடன மாதர்கள், யட்சர்கள், கந்தர்வர்கள், வாத்தியம் இசைப்பவர்கள் , துவார பாலகர்கள் என்று இந்து ஆலய லட்சணத்திற்குரிய அனைத்து ஆதாரங்களும் அகழ்வாய்வில் கண்டறியப்பட்டு நீதி மன்றத்திலும் அதற்குரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. 1975-76 ல் நடைபெற்ற முதல்கட்ட அகழ்வாய்விலேயே கீழே நிலையான பெரிய ஆலயம் இருப்பதற்குரிய சான்றுகள் கிடைத்தது…. இங்கு ஆலயம் இருந்தது பற்றிய எங்கள் கண்டுபிடிப்பை அப்போதைய அரசிடமும் எடுத்து சொன்னோம். அப்பொழுதும் ஒரு நிரந்தர தீர்வு ஏற்பட வழி இருந்தது. இடதுசாரி வரலாற்று ஆசிரியர்கள் அப்போதும் அதை கெடுத்தார்கள். ஆர் எஸ் சர்மா, டி என் ஜா, அத்தார் அலி, சூரஜ் பென், ரொமிலா தாப்பர் இவர்களை எல்லாம் தலைமை தாங்கி வழி நடத்தும் இர்பான் ஹபீப் இவர்களே இந்த பிரச்சினைக்கு ஒரு தீர்வு வராமல் அரசியல் செய்தவர்கள். இந்திய அரசின் உயர் கல்வி , மற்ரும் பண்பாட்டு அமைப்புகளில் ஊடுருவி இருந்த எளிய மார்க்ஸிய அரசியல்வாதிகள். சுமூகமான தீர்வு எதுவும் நடந்து விடக்கூடாது என்று உறுதியாக அரசியல் செய்தார்கள். அன்று இப்பிரச்சினையை தீர்த்திருந்தால் நிறைய உயிர் சேதங்களையும், மக்களுக்கிடையே மனப்பிளவுகளையும் தவிர்த்திருக்கலாம்.
தொல்லியல் ஆதாரங்கள், வரலாற்று ஆதாரங்களின் அடிப்படையில் மட்டுமே இத்தீர்ப்பு வழங்கப்பட்டிருக்கிறதே தவிர வெறும் நம்பிக்கையின் அடிப்படையில் அல்ல…

View More தொல்லியலாளர் கே.கே. முகம்மது அவர்களுடன் ஒரு நேர்காணல்