
கண்மூடித்தனமாக ஓப்பியமும், மதுவும் குடித்து எந்த நேரமும் மூளை மழுங்கி வெறியுடன் திரிந்த அக்பரின் மகன் ஜஹாங்கிர் தனக்குப் பிடிக்காதவ்ர்களுக்கு இழைத்த கொடுமைகள் கடவுளால் பொறுக்க இயலாதவை. அவருடன் இருந்த அவரது குறிப்பெழுத்தாளன் ஒருவன் அந்தப்புரத்திலிருந்த வேலைக்காரப் பெண் ஒருத்தியுடன் காதலில் இருப்பதை பொறுத்துக் கொள்ள முடியாத ஜஹாங்கிர் அவனது தோலை உயிருடன் உரித்தார் என்கிற செய்தியைப் படிக்கையிலேயே குலை நடுங்கும். வின்செண்ட் ஸ்மித், “1591-ஆம் வருடம் அக்பர் கடுமையான வயிற்றுவலியால் துடித்தார். தன்னுடைய மகனான ஜஹாங்கிர்தான் தனக்கு விஷம் வைத்திருக்க வேண்டும் என அக்பர் சந்தேகப்பட்டார்” என்கிறார்…