அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

சுதந்திரத்திற்குப்பின் காங்கிரஸ், திராவிட கட்சிகள் கோவிலுக்கு எதுவுமே செய்யவில்லை என்று நான் விவாதிக்க தயார் இல்லை. எல்லோருமே ஏதோ ஒன்று முயன்றுள்ளார்கள். ஆனால் பல ஆயிரம் வருடம் காப்பாற்றப்பட்ட இந்த நிலம் – கோவில் – சிலை – கல்வெட்டுகள் எல்லாம் கடந்த 50 வருடத்தில் சூறையாடப்பட்டதன் அளவீட்டை கவனியுங்கள். இது முழுக்க முழுக்க நிர்வாக கோளாறாலும், அதிகார துஷ்பிரயோகத்தாலும் நடந்தது என்பதை பிரித்துப் பார்க்க நமக்கு ஒரு ஆய்வு தேவையில்லை. எனவே, ஜக்கி வாசுதேவ் சொல்கிற ஒரு புள்ளிக்கு நாம் வர வேண்டும். இதில் ஹிந்து பெருமக்களுக்கும், இந்த கலாச்சாரத்திற்கும் மாதேவடிகளான செம்பியன் மாதேவியார் தருகிற வலிமையான செய்தி ஒன்று உள்ளது. “அண்ணா,எங்கள் ஊருடைய பழைய பெயர் என்ன?” என கேட்டார்கள். அப்போதும் ஆநாங்கூர்தான் என்றோம். ஆனால் அவர்கள் நம்பவில்லை..

View More அரசிடமிருந்து கோவில்கள் மீட்பு – ஏன் அவசியம்?

மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

காஷ்மீருக்குள் இந்தியாவின் ஜனாதிபதி கூட ஒரு ஊசிமுனை நிலம் கூட வாங்க முடியாது. ஆனால் இந்தியாவை எதிர்க்கும் காஷ்மீர் முஸ்லீம்கள் மீனாட்சி அம்மன் கோவிலுக்குள் கடை போட அனுமதித்திருக்கிறார்கள். திருமலை நாயக்கர் கட்டிய புது மண்டபம் முழுக்க முஸ்லீம்கள் வைத்துள்ள பல கடைகளால் நிரம்பியுள்ளது. அதன் எழில் வாய்ந்த சிற்பங்களையும் தூண்களையும் விதானங்களையும் நாம் காணவே முடியாது. அந்த அளவுக்கு ஆக்ரமிப்பு செய்துள்ளார்கள். சித்திரை வீதியில் இருக்கும் பெரும்பாலான ஜவுளிக் கடைகளில் பல பட்டாணி, பாக்கிஸ்தானி என்று வடக்கத்திய உருது முஸ்லீம்கள் மற்றும் உள்ளூர் முஸ்லீம்களின் கடைகளே. பாக்கிஸ்தான் பயங்கரவாதிகள் இவற்றில் ஊடுருவியுள்ள தகவல் ஜூனியர் விகடன் போன்ற நக்சல் பத்திகைகளில் கூட வெளி வந்தது. இருந்தாலும் அரசாங்கம் கவலையின்றி உள்ளது. அங்குள்ள ஆக்ரமிப்புக்களை அகற்ற எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை… மீனாட்சி அம்மன் கோவிலைக் காக்க இன்னும் ஒரு விஜயநகரப் பேரரசு வரப் போவதில்லை. மீனாட்சி அன்னையும் சொக்கநாதரும் அரசுக்கு நல்ல புத்தி அளிக்க வேண்டும். இன்னும் ஒரு திருமலை நாயக்கரை, கம்பணரை உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்…

View More மீனாட்சி அம்மன் கோயில் கடைகளும் தொடரும் அபாயங்களும்

ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

ஜனவரி முதல் தேதியன்று கோவில்களைத் திறந்து வைத்து, நள்ளிரவு பூஜைகள் செய்யப்பட்டுப் பொதுமக்கள் கடவுள் தரிசனம் செய்வது இந்தியாவில் பல கோவில்களில் நடைமுறையில் உள்ளது. இது, வேத நாகரிகத்திற்கும், ஆகம விதிகளுக்கும், ஹிந்து கலாச்சாரத்திற்கும் விரோதமான செயலாகும். ஆயினும் ஹிந்துக் கோவில்கள் பெரும்பாலும் அரசுகளின் கட்டுப்பாட்டில் இருப்பதால், அரசுகளின் அற்நிலையத்துறைகள் இந்த வழக்கத்தைக் கடைப்பிடித்து வருகின்றன. ஹிந்து மக்களும் இதன் விபரீதத்தைப் புரிந்துகொள்ளாமல் ஆங்கிலப் புத்தாண்டு பிறக்கும் நடுநிசி நேரத்தில் கோவில்களுக்கு வந்து, வரிசையில் நின்று தரிசனம் செய்கின்றனர். ஆனால் விவரம் அறிந்த ஹிந்துக்களும், ஹிந்து அமைப்புகளும், மிகவும் வருத்தமுற்று இந்த வழக்கத்திற்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.. பிரச்சாரம் செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். ஆயினும் வருமானத்தை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு இயங்கும் அரசு அறநிலையத்துறைகள், ஆகம விதிகளைப் புறந்தள்ளி, ஆங்கிலப் புத்தாண்டைக் கோவில்களில் கொண்டாடும் வழக்கத்தைக் கடைப்பிடிக்கின்றனர்….

View More ஆங்கிலப் புத்தாண்டும் ஆலய வழிபாடும்

சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

2004ல் பிடிபட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டுமே 16 கோடி. அது கோயிலுக்கு திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டதா என்பது போன்ற தகவல்களை எல்லாம் கேட்பது, வாசகர்களின் அறிவுக்கு அதீதமான விஷயம். எனவே, நாங்கள் அதையெல்லாம் சொல்ல மாட்டோம். 2004ல் தப்பித்த தீனதயாளன் 1965லும் பிடிபட்டு தப்பித்தவர். இப்போதும் அவர் பிடிபடவில்லை.
93 சிலைகள் கண்டெடுக்கப்பட்டு உள்ளன. ஆனால், இவை அனைத்தின் மதிப்பும் 50 கோடிகள் மட்டுமே… கரப்ஷன் தடுப்பதற்காக இந்திய அரசால் இந்தியாவில் உருவாக்கப்பட்ட துறைகள், சிலைகடத்தலின் போது சேர்த்து கடத்தப்பட்டதால் அவை எதுவும் இந்தியாவில் இல்லை. அதனால்தான் செல்வக் குவிப்பு குறித்துக் கேள்விகேட்க எந்தத் ‘துறையும்’ இல்லை…

View More சிலைக்கடத்தல் குற்றவாளியும் ஆனந்த விகடன் ரிப்போர்ட்டும்

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்… வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்… கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை செய்கிறீர்கள்..? என்னவெல்லாம் செய்யப்போகிறீர்கள் ? என்று நூறு கேள்விகள் கேட்டு உறுதி செய்து கொண்ட பின்னரே பணம் தர வேண்டும்….அரசு- மக்கள் என அனைத்துத் தரப்பும் கைகோர்த்து, போர்க்கால அடிப்படையில் இந்த சதித்திட்டங்களை நிறுத்தப் பாடுபடுவது மிக அவசியம்….

View More இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]

•அற நிலையத் துறைக்கு “வானளாவிய’ அதிகாரங்கள் உள்ளனவா? சட்டங்களும், உச்ச நீதிமன்ற, உயர்நீதி மன்றத் தீர்ப்புகளும் அத்தகைய அதிகாரம் ஏதும் கிடையாது என்பதைக் தெளிவாக எடுத்துக் கூறியும், இச்சட்டங்களையும், தீர்ப்புகளையும் சிறிதும் மதியாமல், தான் செய்வது சட்ட மோசடி என்று தெரிந்தே ஆயிரக்கணக்கான கோயில்களை இந்தத் துறை எடுத்துக் கொண்டு வருவதே இந்தத்துறையின் மிகப்பெரிய மோசடிகளில் ஒன்றாகும்… ‘சமுதாயச் சீர்திருத்தம்’ என்ற பெயரில் கோயிலின் எந்தப் பழக்கவழக்கத்தையும் மாற்றவோ, குறைக்கவோ, புதிதாய்ச் சேர்க்கவோ அதிகாரம் இல்லை…

View More தமிழ்நாடு இந்துசமய அறநிலையத் துறையினரின் பகற்கொள்ளை.. [புத்தக அறிமுகம்]