Posts Tagged ‘ கோயில் வரலாறு ’

பாரம்பரிய சுவரோவியங்கள் கொண்ட தமிழ்நாட்டுக் கோயில்கள்: ஒரு பட்டியல்

October 19, 2019
By

பாரம்பரியமும் பழமையும் வாய்ந்த சுவரோவியங்கள் உள்ள கோவில்கள் தமிழ்நாட்டில் எங்கெங்கு இருக்கின்றன என்று ஒரு பட்டியல்: காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவில், வீடூர் ஆதிநாதர் கோவில், குறிஞ்சி கோதண்டஸ்வாமி கோவில், நார்த்தாமலை விஜயாலய சோழீச்சுரம் கோவில், தஞ்சைப் பெரிய கோவில், திருக்குறுங்குடி நின்றநம்பி கோவில், முழையூர் ஆதிச்சிவப்பிரகாச மடம், செங்கம் வேணுகோபால பார்த்தசாரதி கோவில்.... [மேலும்..»]

காஞ்சி காமாட்சியும் சங்கரரும்

April 11, 2018
By

காஞ்சியில் ஆதி சங்கரர் காமாட்சி தேவியின் வழிபாட்டை நிலைநிறுத்தினார் என்ற குறிப்பு மாதவீய சங்கர விஜயத்தில் (பொ.பி 14ம் நூற்.) உள்ளது. இந்தக் குறிப்பில் கூறப்பட்டுள்ள கோயில் காமக்கோட்டம் எனப்படும் ஸ்ரீகாமாக்ஷி ஆலயம் தான் என்று வரலாற்று அறிஞர் முனைவர் சங்கரநாராயணன் கருதுகிறார். பாரததேசத்தின் பல பிரதேசங்களில் உள்ள கோயில்களிலும், அங்குள்ள சிவ, விஷ்ணு, சக்தி மூர்த்திகளின் வழிபாடுகள் ஸ்ரீசங்கரரால் நிறுவப்பட்டன அல்லது சீரமைக்கப் பட்டன என்ற சம்பிரதாயத்தைப் பெருமிதமாகக் குறிப்பிடுகிறார்கள்... தமிழ்நாட்டில் கோயில் மரபுகளைப் பற்றிய எந்த வரலாறானாலும், எந்த ஆதாரமுமில்லாமல் அது தொடர்பாக பிராமண சதி (அல்லது ஸ்மார்த்தர் சதி, வைணவ... [மேலும்..»]

அம்பாசமுத்திரம் பூவன் பறையன் கல்வெட்டு கூறும் செய்தி

ஒரு பாழ் நிலத்தை ஊர் சபையாரிடம் இருந்து வாங்கி, அதைத் திருத்தி ஒரு குளமும் உருவாக்கி, அந்தக் குளத்து தண்ணீரால் விவசாயம் செய்து, அதிலிருந்து தூணி நெல்லும் குளத்திலிருந்து நீர் இறைக்க ஒரு ஆளும் கொடுப்பதாகவும், இந்த நிலத்திற்கு பறையன் வசக்கல் என்று பெயரிடுவதாகவும், கோயில் விளக்கேற்ற நெய்க்கு ஒரு பசுவும் கன்றும் தானமளிப்பதாகவும், சந்திராதித்தவர் உள்ளவரை இந்த தானம் தொடரும் என்று அரையன் அணுக்கரில் பூவன் பறையன் என்பவன் தானமளித்து, தானே இந்த கல்வெட்டை வெட்டியும் இருக்கிறான்... தென் தமிழகத்தில் 17ஆம் நூற்றாண்டு வரை பறையர்கள் வெள்ளைக் குதிரை ஏறவும், பதினாறு கால் பந்தல் போடவும்,... [மேலும்..»]

“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8

“எது கருத்து சுதந்திரம்?” கருத்தரங்கம்: திருச்செங்கோடு, பிப்ரவரி 8

“மாதொருபாகன்” நாவல் தொடர்பான சர்ச்சையை முன்வைத்து, அந்த நாவல் சித்தரிப்புகளின் வரலாற்றுத் தன்மை குறித்தும், கருத்து சுதந்திரம் மற்றும் அதன் வரையறைகள் குறித்தும் தமிழகத்தின் பிரபல சிந்தனையாளர்கள், எழுத்தாளர்கள் கலந்து கொள்ளும் கருத்தரங்கம். தலைமை : தவத்திரு குமரகுருபர சுவாமிகள், கெளமார மடாலயம். முன்னிலை : கல்வெட்டு ஆய்வாளர் புலவர் திரு. இராசு, கொங்கு வரலாற்று ஆய்வு நிறுவனம் கருத்தாளர்கள்: திரு. பேரா. சாமி தியாகராசன், தமிழறிஞர் திரு . அரவிந்தன் நீலகண்டன், ஆய்வாளர் திரு. சாரு நிவேதிதா, எழுத்தாளர் திரு. ம. வெங்கடேசன், சமூகவியல் சிந்தனையாளர் திரு. பொன் தீபங்கர், மானுடவியல் சிந்தனையாளர் திரு. வீர.... [மேலும்..»]

மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

October 21, 2014
By

அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி ". அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க... [மேலும்..»]

ஒரு கர்நாடகப் பயணம் – 5 (சிருங்கேரி, பேலூர்)

January 8, 2014
By

ஆதி சங்கரரின் மனம் இப்பகுதியின் இயற்கை அழகிலும் அமைதியிலும், புனிதத்திலும் தோய்ந்து ததும்பி நிறைகிறது. நீ இங்கேயே உறைந்து மக்களுக்கு அருள் பாலிக்க வேண்டும் என்று அன்னை சரஸ்வதியை வேண்டிக் கொள்கிறார். சலங்கை ஒலி நின்று விடுகிறது. சாரதை அங்கு நிரந்தரமாகக் குடி கொள்கிறாள்... கண்ணாடியில் முகம் பார்க்கும் தர்ப்பண சுந்தரிகள், வேட்டைக்காக வில்லுடன் நிற்கும் கானக அழகிகள், இசைக்கருவிகளை மீட்டும் வாதினிகள், அபிநயம் பிடிக்கும் நர்த்தகிகள் என மூச்சடைத்து, பித்துக் கொள்ள வைக்கும் சிற்பங்கள். ஒவ்வொரு அங்குலத்திலும் மகோன்னத சிற்பிகளின் உளிகளும் கரங்களும் இதயங்களும் உயிர்களும் கலந்து எழுந்திருக்கும் அற்புதக் கலைப் பெட்டகம் பேலூர் கோயில்...... [மேலும்..»]

ஒரு கர்நாடகப் பயணம் – 2 (ஹம்பி)

January 2, 2014
By

எங்கு போனாலும் கோயில்கள், மண்டபங்கள், இடிபாடுகள், அது போக பூதங்கள் போன்ற விசித்திர வடிவங்கள் கொண்ட கற்பாறைகள். ஹேமகூடம், மாதங்க கிரி என்று நகருக்குள்ளேயே இரு குன்றுகள். இது எல்லாவற்றுக்கும் சாட்சியாகவும் பட்டும் படாமலும், காலத்தின் சலனம் போல ஓடிக் கொண்டிருக்கும் துங்கபத்ரா நதி. சிதைந்து போன ஒரு மாபெரும் வரலாற்றுக் கனவுக்குள் வாழ்ந்து கொண்டிருப்பது போன்ற பிரமையை இங்கிருக்கும் கணங்கள் நமக்கு அளித்துக் கொண்டே இருக்கும்... தெருவோர சிறு பிள்ளையார் கோயிலில் கூட செருப்பைக் கழற்றி விட்டு பயபக்தியோடு செல்லும் மக்களை, இந்தக் கோயில்கள் வெறும் காட்சிப் பொருட்கள் என்று மனதில் நினைக்க வைத்து விட்டது... [மேலும்..»]

இடிக்கப் படும் புராதனக் கோயில்கள்: ஒரு கூட்டு அராஜகம்

கேட்பாரற்றுக் கிடக்கும் அந்த பல்லாயிரமாண்டு பொக்கிஷங்களை சில நாட்களில் தூக்கிச் சென்று பாலிஷ் செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து விடுவர் அல்லது அழித்து விடுவர். இங்கு கொடுமை என்னவென்றால் பல கோயில்களில் மூலவர் சிலையை கூட பின்னம் என்று சொல்லி தூக்கி ஆற்றிலோ/கிணற்றிலோ போட்டு வைத்து விடுவர். பழமைதான் கோயிலுக்குப் பெருமையே என்பதை மறந்தது போல நடித்துக்கொண்டு ‘பழசாகிவிட்டது’ என்பார்கள்... வசதி செய்து கொடுக்கிறேன் என்று கோவிலுக்குள் லாட்ஜ் போல, சுற்றுலாத் தலம் போல வேலைகள் நடந்து கோவிலின் புனித தன்மை அழிக்கப்படும்... கோவில் திருப்பணி என்று வந்தால் உடனே பணத்தை எடுத்து நீட்டாமல் என்ன வேலை... [மேலும்..»]

புதுச்சேரி: வேதபுரத்தின் வரலாற்றில் ஒரு வேதனை அத்தியாயம்

"பின்னையும் அந்தக் கோவிலிலே நடத்தின ஆபாசத்தைக் காகிதத்திலே எழுத முடியாது. வாயினாலேயும் சொல்ல முடியாது. இப்படியெல்லாம் நடப்பித்தவர்கள் என்ன பலனை அனுபவிப்பார்களோ நான் அறியேன். ஆனால் இன்றைய தினம் தமிழரெனப்பட்டவர்களுக்கு எல்லாம் லோகாஷத்தமானமாய்ப் போறாப் போலே இருந்தது. பாதிரிகளுக்கும், தமிழ்க் கிருத்துவர்களுக்கும், துரைக்கும், துரை பெண்சாதிக்கும் ஆயிசிலே காணாத மகிழ்ச்சியாய் இருந்தார்கள். இனிமேல் அனுபவிக்கப் போறத் துக்கத்தினை யோசனை பண்ணாமல் இருந்தார்கள்." [மேலும்..»]

ஸ்ரீ பத்மநாபனின் பொற்களஞ்சியம் யாருக்கு சொந்தம்?

(மூலம்: டாக்டர் ஆர்.நாகசாமி) எங்கும் நிறைந்த, எல்லாம் வல்ல கடவுளை, சட்ட வரையறைக்கு உட்பட்ட ஒரு நபர் போலக் காண முடியுமா? இத்தகைய “கடவுளால்" சொத்துக்களுக்குச் சொந்தம் கொண்டாட முடியுமா?... கடந்த சில பத்தாண்டுகளில் (அருங்காட்சியகங்களில் வைத்திருந்த) விலைமதிக்க முடியாத பல அரிய புதையல்களுக்கு என்ன நேர்ந்தது என்றும் நாம் நன்றாகவே அறிவோம்... இச்செல்வங்களின் மதிப்பல்ல, கேரளத்தின் மேன்மையே உலகமெல்லாம் அறியும்படி வெளிக்கொணரப் பட்டுள்ளது ... [மேலும்..»]