Posts Tagged ‘ சகஜானந்தர் ’

ஒரு தாழ்த்தப்பட்ட இந்துவின் இந்துத்துவக் குரல்

இருபதாம் நூற்றாண்டிலும், தாழ்த்தப் பட்டவர்களிடையே ஆன்மீக ஞானிகள் உருவாக முடியும் என்பதை உலகிற்கு காட்டியவர் சுவாமி சகஜானந்தர். உயர்சாதி இந்துக்களும் வெள்ளையர்களும் தாழ்த்தப்பட்டவர்களின் மனதில் பதியும் அளவுக்கு எதிர் பிரச்சாரத்தை செய்த சூழலிலும், அவர்கள் இந்துக்களே என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர்... எட்டாம் வகுப்பை தாண்டாத சுவாமிகள் தமிழிலும், வடமொழியிலும் மிக்க புலமை பெற்றிருந்தார்... 1959 வரை சிதம்பரம் தனித் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவை உறுப்பினராகவும் செயல்பட்டார்.... கோயில் நிலங்களை ஏழைகளுக்குக் கொடுப்பது குறித்தும், தாழ்த்தப் பட்டவர்கள் பெயரால் கிறிஸ்தவ மிஷன்களுக்கு அரசு எந்த நிதி உதவியும் வழங்கக்... [மேலும்..»]

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

புனா ஒப்பந்தத்தின்போது ஈவெரா அம்பேத்கருக்கு தந்தி அனுப்பினாரா?

 குடியரசு இதழில் இப்படி ஒரு செய்தி வந்தது. ‘அப்பொழுதே – புனா ஒப்பந்தக் காலகட்டத்தில் – தாழ்த்தப்பட்ட மக்கள் பிரதிநிதி அல்லது தலைவர்கள் என்பவர்களுக்கு எவ்வளவு புத்தி கூறியும், தோழர் ஈ.வே.ராமசாமி அவர்கள் ஐரோப்பாவில் இருந்து தோழர் அம்பேத்கருக்கு விஷயங்களை விளக்கி, ‘ஏமாந்து போகாதீர்கள்’ என்று அதாவது ஒரு காந்தியாரை விட 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்களின் உயிர் கேவலமானதல்ல என்றும்; 6 கோடி தாழ்த்தப்பட்ட மக்கள் உயிர் உமது கையில் சிக்கி இருக்கிறது என்பதை மறந்துவிடாதீர்கள் என்றும் நீண்ட தந்தி கொடுத்திருந்தும்…’ –குடியரசு 9-5-1937   இந்த செய்தியை அடிப்படையாக வைத்து, சுப.வீரபாண்டியன் எழுதுகின்றார் :... [மேலும்..»]

தீண்டாமைத் தீயைத் தணிக்க வந்த தவச்சீலர்

1947 ஏப்ரலில் அவரது கனவு நனவாகியது. அனைவரும் ஆலயத்திற்குச் சென்று ஆண்டவனை வழிபடலாம் என சட்டம் நிறைவேற்றப்பட்டது. அவரும் அவரது மாணவர்களும் ஆனந்த நடராஜனை ஆலயத்திற்குச் சென்று கண்ணாரக் கண்டு கண்ணீர் விட்டு அழுதனர். அன்று ஆனந்தத் தாண்டவம் ஆடியது நடராஜர் மட்டுமல்ல, 40 வருடங்களாக ஏங்கிய சகஜானந்தரது உள்ளமும்கூட. [மேலும்..»]