Posts Tagged ‘ சசிபெருமாள் ’

ஒரு மரணமும், மதுவுக்கு எதிரான எழுச்சியும்…

மதுவிலக்கை நீக்கியதுடன், மது விற்பனையை நிறுவனமயமாக்கியதும் திமுக தான். அக்கட்சியே மதுவிலக்குக்கு ஆதரவாக கருத்துக் கூறியவுடன், பல கட்சிகளும் இப்போது இக்கோரிக்கையை ஆதரிக்கத் துவங்கி உள்ளன. அதை சசிபெருமாளின் மரணம் தீவிரப்படுத்தி உள்ளது... இக்கட்சிகள் சுயலாப நோக்குடன் மதுவிலக்கை ஆதரித்தாலும், வரவேற்கத் தக்கதே. ஆனால், இந்த மது எதிர்ப்புணர்வு உண்மையானதாக இருக்க வேண்டும். வாய்ச்சொல்லில் வீர்ர்களாக, மதுவை எதிர்ப்பதாக நடித்துக்கொண்டே தனது தொண்டர்கள் மதுவில் கும்மாளமிடுவதைத் தடுக்க இயலாதவர்களாக அரசியல் கட்சித் தலைவர்கள் இருப்பது தான் உண்மையான வேதனை.... [மேலும்..»]

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

மதுவை எதிர்ப்பது நமது உரிமை!

காந்தி ஜெயந்தி சிறப்புக் கட்டுரை “கண்ணிரண்டும் விற்றுச் சித்திரம் வாங்கினால் கைகொட்டிச் சிரியாரோ?” -என்று பாடுவார் மகாகவி பாரதி,  ‘சுதந்திரப் பெருமை’ என்ற பாடலில். சுதந்திரத்தின் மகிமையை விளக்க அவர் எழுதிய இவ்வரிகள், மதுபோதையில் தள்ளாடும் தற்போதைய தமிழகத்தின் அவலநிலைக்கும் பொருந்துவதாக உள்ளன. நாட்டிலேயே தமிழகத்தில் தான் மாநில அரசே மதுவிற்பனையை ஊக்குவித்து மக்களைக் கொன்று குவிக்கிறது. குஜராத் தவிர வேறெந்த மாநிலத்திலும் மதுவிலக்கு இல்லாதபோதும், பிற மாநிலங்களில் தமிழகம் போல மதுவிற்பனைக்கென்றே  ‘டாஸ்மாக்’ (TASMAC) போன்ற அரசு நிறுவனம் இயங்குவதாகத் தெரியவில்லை. தமிழகத்தில் மட்டுமே மது விற்பனையை அதிகரிக்க அரசே இலக்கும் நிர்ணயிக்கிறது. இதில் நகைமுரண்... [மேலும்..»]