
இயக்கம் என்றாலே வெளிப்படுவது, அல்லது சக்தியின் தொழில் என்றாகிவிடுகிறது. அதனால் சக்தியிடம் சரண் புகுவதே சரியான வழி. சரணடைந்ததால் சக்தி போல் ஆகி ‘சித்’தாகிய இறைவனை அடைந்து, பேரின்பப் பெருவெள்ளமாகிய ஆனந்தத்தை அறிவுடன் இருக்கும் நிலையில் உணரலாம்… அருள் தரும் பராசக்தி ஒன்றே என்றாலும் காணப்படும் இயற்கைத் தோற்றங்களை ஒட்டி, பெண் தெய்வங்களையும் அந்த முனிவர்கள் கண்டார்கள். தன்னை அறிவதே அறியப்படும் அனைத்திலும் முதன்மையானது என்பதால் அறிவை வழங்கும் பரம்பொருளாகச் சரஸ்வதியைக் கருதினார்கள்…