Posts Tagged ‘ சனாதன தர்மம் ’

சபரிமலை ஐயப்பன் வழிபாட்டுத் தத்துவம்

இல்லறத்தில் இருப்பவர்கள் மோக்ஷமே வாழ்வின் இறுதியான நோக்கம் என்பதை மறவாமல் இருக்கவும், அதற்காக படிப்படியாகத் தன்னைத் தகுதிப்படுத்திக் கொள்ளவுமே ஐயப்ப தெய்வ வழிபாடு அமைக்கப்பட்டிருக்கின்றது. ஆணும் பெண்ணுமாய், கணவன் மனைவியாய், தாயும் தந்தையுமாய் குடும்பமாய் இறைவன் எழுந்தருளியிருக்கும் கோலம் எல்லா கோயில்களிலும் நாம் காணுவது. அது இல்லற வாழ்க்கைத் தத்துவத்தைக் காட்டுவது. ‘ஆரா இயற்கை அவாநீப்பின் அந்நிலையே பேரா இயற்கை தரும்’ எனும் துறவியல் தத்துவத்தைக் காட்டுவது சபரிமலை ஐயப்பன் எழிற்கோலம்.. முறைப்படுத்தப்பட்ட காமம் ஆக்கசக்தியாகிறது. கட்டுப்படுத்தப்படாத காமம் அழிவுசக்தியாகிறது. ஆண்கள் உடலையும் மனத்தையும் காமத்தையும் வெல்லும் பயிற்சியாகவே ஐயப்ப விரதம் இருக்கிறது. இது ஆண்களுக்கு... [மேலும்..»]

ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…

ஹிந்துப் பண்பாடு: நேற்று, இன்று, நாளை…

எந்த விளக்கமும் அளிக்காவிட்டாலும் சூரியன் தான் உலகின் மைய இயக்கு விசை. அதுபோலவே, விளக்கங்கள் அளிக்கப்படாவிட்டாலும் ஹிந்துப் பண்பாடு மேன்மையானதே. ஆயினும், தொலைக்காட்சியில் தோன்றி முட்டாள்தனமாக வாதிடும் ஹிந்து விரோத அறிவிலிகளுக்காக சில விளக்கங்களை அளிப்பது நமது கடமையாகிறது. அவர்களுக்குப் புரியும் வகையில், ஹிந்துப் பண்பாடு நேற்று எப்படி இருந்தது? இன்று எப்படி இருக்கிறது? நாளை எப்படி இருக்கும் என்று சுருக்கமாகவும், பொட்டில் அடித்தாற்போலவும் சொல்ல வேண்டியிருக்கிறது. இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே. [மேலும்..»]

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ? [மேலும்..»]

தொடரட்டும் சீர்திருத்தம்

இந்தச் சாதியவாதிகள், இந்த மெக்காலேயின் கள்ளப் பிள்ளைகள், அவர்களது முதலாளிகளான ஆபிரகாமிய சாக்கடைப் புழுக்களோடு கள்ளத் தொடர்பில் பிழைப்பை நடத்துகிறார்கள். இந்தச் சாதியவாதிகளில் சில சாதியார் நடத்தும் பொது அமைப்புக்களில், பள்ளிகளில், சாதி அடிப்படையில் தனிப் பந்தி இன்னமும் நடக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா? [மேலும்..»]

அச்சுதனின் அவதாரப் பெருமை

August 26, 2010
By

பிரம்மத்தின் மேன்மையை மனதில் வைத்துக் கொண்டாலொழிய பிரம்மம் எடுக்கும் அவதாரங்களின் மகிமை புரிவது கடினம். நிற்க, இங்கு ஒரு நியாயமான ஐயம் எழக்கூடும். "நமக்கு எட்டாத இந்த பிரம்மத்தைப் பற்றித் தெரிந்துக்கொள்வதால் ‘நமக்கு என்ன பயன்? அப்படி ஒரு பொருள் இல்லை' என்று கூறிவிட்டு நிம்மதியாக இருக்கலாமே?" என்று கேட்கலாம். [மேலும்..»]