Posts Tagged ‘ சமணர் கழுவேற்றம் ’

சமணர் கழுவேற்றம்: புத்தக விமரிசனம்

December 4, 2017
By

சமணர் கழுவேற்றம் ஒரு வரலாற்று நிகழ்வு என்பதற்கு சிறிதும் ஆதாரமில்லை என்பதே உண்மை. வரலாற்றாசிரியர்களும் தமிழறிஞர்களும் பெரியபுராணமும் திருவிளையாடற்புராணமும் கூறும் செய்திகள் இலக்கிய மிகைக் கூற்றுகள் மட்டுமே என்று தங்கள் நிலைப்பாட்டைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளனர். இதற்கு மாறாக, சைவ பாரம்பரியவாதிகள் முற்றிலும் உண்மையாக நடந்த சம்பவமே என்று வாதிட்டிருக்கின்றனர். சமணர் தரப்பில் இந்த நிகழ்வு எங்கும் பதிவுசெய்யப் படவில்லை என்பது ஏற்கனவே சுட்டிக்காட்டப் பட்டுள்ளது. இது தொடர்பான ஒட்டுமொத்த விவாதங்களையும் கோர்வையாக சான்றுகளுடன் இந்த நூலாசிரியர் எடுத்துக் காட்டுகிறார்..... [மேலும்..»]

அடியெடுத்துக் கொடுத்த அம்பலவாணன்

பொன்னம்பலத்துப் பிரகாரத்துக் கீழ்ச் சுவரில் நுணுக்கமாகச் செதுக்கப்பட்டிருக்கும் புடைப்புச் சிற்பங்களைக் கவனிக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார்.  சமணர்கள் கழுவேற்றப்பட்டதை காட்டும் சிற்பத்தைக் கண்டதும் அவர் முகம் சற்று சுருங்குகிறது. “சை! இந்தச் சிற்பம் இங்கு இருக்கவேண்டுமா?” என்று அவரையும் அறியாமல் அவரது வாய் முணுமுணுக்கிறது. “என்ன ஓய், சிவாச்சாரியாரே! எந்தச் சிற்பம் இங்கு இருக்கக் கூடாது என்று நீர் அருவருப்பு அடைகிறீர்?” என்ற சேக்கிழார் பெருமானின் குரல் அவரைத் திருப்பிப் பார்க்கச் செய்கிறது. “வணக்கம், சேக்கிழார் பெருமானே! திடுமென்று தாங்கள் இங்கு எப்படி?” என்று இழுக்கிறார் பாலசுப்பிரமணிய சிவாச்சாரியார். “அது இருக்கட்டும், எந்தச் சிற்பம் உம்மை அருவருப்படையச்... [மேலும்..»]