Posts Tagged ‘ சமய நல்லிணக்கம். ’

பாரதியாரின் ‘இயேசு கிறிஸ்து’ கவிதை

February 1, 2019
By

அக்கவிதையில் பாரதி சொல்லும் "உயிர்த்தெழுதல்" சமாசாரத்திற்கும் கிறிஸ்துவ மதக்கோட்பாட்டிற்கும் கிஞ்சித்தும் சம்பந்தமில்லை. உண்மையில் அந்தக் கவிதையில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு *மாண்டு போவதையும்* பின்பு *உயிர்த்தெழுவதையும்* முற்றிலும் இந்து தத்துவ சிந்தனைப் போக்கின் அடிப்படையில் குறியீட்டு ரீதியாக பாரதி re-interpret செய்கிறார். இயேசு பாவங்களை ரத்தத்தால் கழுவியதாக எல்லாம் பாரதி கருதவில்லை. சிலுவையில் அறைவது என்பது அகந்தையைக் கொல்லுதல் என்ற அளவிலேயே சித்தரிக்கிறார்... கிறிஸ்தவத்தின் கோர முகத்திலிருந்து இயேசு கிறிஸ்து என்ற ஆன்மீக ஞானியை மட்டும் தனியாகப் பிரித்தெடுக்கும் சாத்தியம் இருக்கிறது என்ற எண்ணம் கொண்டவர்களாக 19-20ம் நூற்றாண்டுகளின் பல இந்திய சிந்தனையாளர்களும், ஞானிகளும், ஆன்மீகவாதிகளும்... [மேலும்..»]

ஏன் இந்துசமயப் பண்டிகைகளைப் பழிக்கிறார்கள்?

ஞாயிறு, பக்ரி-ஈத், ரம்சான் போன்ற சமயப்பண்டிகைகளின்போது, அனைத்துச் சமயத்தோரும், சமயமறுப்பாளரும் ஒன்றுகூடி, நமது கிறித்தவ, இஸ்லாமிய உடன்பிறப்புகளை வாழ்த்துகிறார்கள்.  இப்படி வாழ்த்துவது சமயநல்லிணக்கத்தை ஏற்படுத்தும் பாராட்டத்தகுந்த  ஒரு நற்செயலே ஆகும்... ஆயினும், இந்துக்களின் பண்டிகை எனில் அப்பண்டிகை ஏன் கொண்டாடப்படக்கூடாது என்று பெரிதாக வாதங்கள் கிளம்புகின்றன.... [மேலும்..»]