Posts Tagged ‘ சமூகம் ’

மீனாம்பா பாட்டி போயிட்டா… (சிறுகதை)

“பெரியபாட்டியையும் மெட்ராசுக்கு கூட்டிண்டு போயிட்டாரா?” “நன்னாயிருக்கே, நீ சொல்றது! கண்ணும் தெரியலை, கடையும் தெரியலை. மொசைக் தரைன்னு தெரியாம, ஏதோ கொட்டி இருக்குன்னு பொறுக்க ஆரம்பிச்சுடுவா. அவ ஆசாரம் மெட்ராசுக்கு லாயக்குப்படுமா? அதுதான்...” “எம் மனக்கொறையைத் தீர்த்துட்டேடா, கண்ணா. இந்தக் கட்டை கண்ணைமூடி, காட்டிலே என்னை எரிக்கறச்சே, என் நெஞ்சு வேகுமோ, வேகாதோன்னு நெனப்பேன். இனிமே அப்படி நெனைக்கமாட்டேன்டா. எம் மனசு நெறஞ்சுபோச்சுடா, கண்ணா! எப்ப ஈஸ்வரன் கூப்படறானோ அப்ப நிம்மதியா போய்ச்சேருவேன். ஏன்னா, என் நெஞ்சு வெந்துடும்டா.” என்றவள் தயங்கி, என்னிடம் கேட்டாள். “கண்ணா, என்னால... [மேலும்..»]

போதிசத்வரின் இந்துத்துவம் – 1

பாபா சாகேப் அம்பேத்கரை ஒரு இந்துத்துவ சார்புடையவராக சொல்வது போல கடும் கண்டனத்துக்கு ஆளாகக் கூடிய விசயம் வேறெதுவும் ‘மதச்சார்பற்ற’ இந்தியாவில் இருக்க முடியாது... அந்த கண்டனங்களுக்கு அப்பால், அம்பேத்கரின் ஒட்டுமொத்த சமூக-தத்துவ சிந்தனைகளின் அடிப்படையில், அவரது மனமண்டலத்தில் இந்துத்துவம் குறித்த கருத்துகள் நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் எப்படி அறிந்து கொள்ளப்பட்டன என்பதைக் காண்பதே இக்கட்டுரைத் தொடரின் நோக்கம்... ’பிரதியெடுக்க இயலாத பண்பாட்டு ஒற்றுமை’ என பாரதத்தின் பண்பாட்டு ஒருமையை அம்பேத்கர் குறிப்பிடுகிறார்.. இந்து சீர்திருத்த போராளிகளான வீர சாவர்க்கர், சுவாமி சிரத்தானந்தர் ஆகியோரிடம் மிக்க அன்பும் வெளிப்படையாக பாராட்டும் மனமும் கொண்டிருந்தார் பாபா சாகேப்....... [மேலும்..»]

சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)

சாதிய ஒழிப்புத் திருமண விளம்பரங்கள் (ஏப்ரல் 18, 2012)

சாதிகளுக்கு இடையில் இணக்கத் திருமணம் செய்ய விரும்புவோர் தங்கள் விளம்பரங்களைத் தமிழ் ஹிந்துவிற்கு அனுப்பலாம். இப்பகுதிக்கு விளம்பரங்கள் அனுப்ப விரும்போவோர் tamizh.hindu-at-gmail.com என்ற இமெயில் முகவரியில் தொடர்பு கொள்ளவும். [மேலும்..»]

சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்

இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: ... சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது... அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ? [மேலும்..»]

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள் (ஃபிப் 12, 2012)

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும். [மேலும்..»]

சாதிய மறுப்பு ஹிந்து திருமண விளம்பரங்கள்

சாதிகளை கடந்து வரதட்சிணை வாங்காமல் திருமணம் செய்ய விரும்புவோர் இங்கு தங்கள் விளம்பரங்களைத் தரலாம். இங்கு வெளியிடப் படும் விளம்பரங்கள் குறித்து தமிழ்ஹிந்து இணையதளம் எவ்வித பொறுப்பு ஏற்க இயலாது. தொடர்பு கொள்வோர் தாங்களே தரவுகளை முழுமையாக சரி பார்த்து கொள்ளவும். [மேலும்..»]

இந்த வாரம் இந்து உலகம் (ஜனவரி – 27, 2012)

வருடாந்திர ஹிந்து ஆன்மீகம் மற்றும் சேவைக் கண்காட்சி (Hindu Spiritual and Service Fair) துவங்கியது. சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி! விஸ்வ இந்து பரிஷத்தின் பெரும்பான்மை உறுப்பினர்கள் பங்கேற்ற பொதுக்குழு கூட்டத்தில், புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப் பட்டனர். வேலூர் மாவட்ட இந்து முன்னணி பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. சல்மான் ருஷ்டி விவகாரம் - அரசு கை விரித்தது சரியா? இந்தியாவில் பேச்சுரிமையின் நிலை மோசமடைந்துள்ளது. இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான பாபுலர் பிரன்ட் ஆப் இந்தியா, திருச்சூரில் கோவில் நிலத்திலேயே மாநாடு நடத்தி இருக்கிறது... மேலும் பல செய்திகள். [மேலும்..»]

இந்திய பாரம்பரிய அறிவியல்

இந்தியாவில் எல்லாம் இருந்தது என்று சொல்லாதீர்கள், இந்தியாவில் ஒன்றுமே இல்லையென்றும் சொல்லாதீர்கள்.ஒரு நாகரிகம் எல்லாவற்றையும் கண்டுபிடித்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.உண்மையிலேயே இங்கே என்ன இருந்தது என்று தெரிந்துகொண்டு அதை மட்டும் சொல்லுங்கள்!... நமது ரிஷிகள் தெளிவாகவே இவை அனைத்தும் வெறும் செவிவழிச் செய்தியல்ல, உலக நன்மைக்காக அனுபவத்தாலும், பயனை திரும்பத்திரும்ப பரீட்சித்துப் பார்த்தும், முறையாக வளர்த்தெடுக்கப்பட்ட அறிவு என்று தெரிவிக்கிறார்கள்... வெவ்வேறு சொற்களைக் கொண்டு எண்களைக் குறிப்பது சுலபம். கூடுதலாக கவியுணர்வும், அழகியல் உணர்வும் இருக்கும். படித்து மனனம் செய்யவும் ஏதுவாக இருக்கும்... [மேலும்..»]

இனி நாம் செய்ய வேண்டுவது…

இயல்பான ஹிந்து எண்ணப் போக்கிற்கு இணங்கச் சிலர் கிறிஸ்தவரும் முகமதியரும் மத மாற்ற வேலைகளில் ஈடுபடுவதால் நாமும் ஏன் அவ்வாறு செய்ய வேண்டும்? அவரவரும் அவரவர் மதத்திலேயே நீடிக்கட்டுமே, என்ன பிரச்சினை? மத மாற்றம் கூடாது என்று மட்டும் சொன்னால் போதாதா? பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் சொல்வதை ஒரு கிறிஸ்தவரிடமோ, முகமதியரிடமோ சொன்னால் அதை அவர் எப்படிப் புரிந்து கொள்வார்? [மேலும்..»]

புரிய வைத்தல் அல்ல, திரும்ப வைத்தலே நமது வேலை

ஹிந்து சமயத்தின் இறைச் சக்தி பற்றிய கருதுகோளும் முகமதிய சமயத்தின் கருதுகோளும் வெவ்வேறாக இருக்கையில் பகவத் கீதையில் அல்லா என்று எழுதுவதும் அல்லாஹோ அக்பர் என முழக்கம் எழுப்புவதும் எப்படிப் பொருத்தமாக இருக்க முடியும் ? [மேலும்..»]