Posts Tagged ‘ சமூக அந்தஸ்து ’

மீன் வாசம் [சிறுகதை]

January 27, 2014
By

"அடே!" என்று திடீரென்று பீஷ்மர் கத்தினார். தலைமைப் பரிசாரகன் ஓடிவந்தான். "மீன் எங்கே? மீன் இல்லாமல் அரசியாருக்கு உணவு செல்லாது என்று உனக்கு எத்தனை முறை சொல்லி இருக்கிறேன்?" என்று கோபப்படுவது போல கேட்டார். சத்தியவதி தலையைக் குனிந்து கொண்டாள்...... சரி என்னவோ அரண்மனை, நாகரீகம், பாரம்பரியம் என்கிறீர்களே, அவன் அம்மா ஏழு பிள்ளைகளைக் கொன்றது நாகரீகமா? எங்கள் குலத்தில் இப்படி ஒரு பெண் நடந்துகொண்டிருந்தால் அவளை எப்போதோ துரத்திவிட்டிருப்போம். கொலைகாரியின் பிள்ளை நாகரீகம், மரியாதை என்கிறான், போய் அவன் அன்னைக்கு கற்றுக் கொடுக்கச் சொல்லுங்கள் இந்த மரியாதையை எல்லாம்!.... [மேலும்..»]

பூனைக்கு யார் மணி கட்டுவது?: மதுவிலக்கு குறித்து சில எண்ணங்கள்

இறைவன் படைப்பில் ஓரறிவு படைத்த உயிரினங்கள் தொடங்கி ஆறறிவு படைத்த மனிதர்கள் வரை பல்வகை உயிரினங்கள் இருக்கக் காண்கிறோம். வாரியார் சுவாமிகள் சொல்வது போல மனிதரில் சிலருக்கு ஆறறிவு என்பதும் ஏற்றுக் கொள்ளக்கூடியதுதான். சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும்பாலார் போதைக்கு அடிமைகளாக ஆகி, சமூக அந்தஸ்து, கெளரவம், பெருமை அனைத்தையும் தெருவோரக் குப்பைமேட்டில் எறிந்துவிட்டு அங்கேயே விழுந்து கிடக்கக் காண்கிறோம். பேருந்தில் அவசரமாக ஏறி ஏதோவொரு இடத்தின் பெயரைச் சொல்லி பயணச்சீட்டை வாங்கிவிட்டு, அந்த இடம் வந்ததும் நடத்துனர் எத்தனை முறை சொல்லியும் இறங்காமல் தடுமாறும் இளைஞர்களைப் பார்க்கிறேன். சாலையோரம் நல்ல உடையணிந்த மனிதன் அவை... [மேலும்..»]