
இந்து ஊடக அமைப்பான விஸ்வ சம்வாத் கேந்திரம் கடந்த சில வருடங்களாக ஊடகங்களில் ஆக்கபூர்வமாக இந்து சிந்தனையை வளர்ப்பவர்களை கௌரவித்து ’நாரதர் விருதுகளை’ வழங்கி வருகிறார்கள். இவ்வருடம் சென்னை மையம் அளிக்கும் விருதுகளுக்கு சத்யா (துக்ளக்), ஜடாயு (தமிழ்ஹிந்து.காம்) மீனாக்ஷி (மங்கையர் மலர்), பத்மன்ஜி ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர். விருது விழா ஜூன் 10, 2017, சனிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை தி.நகரில் நடைபெறுகிறது. அனைவரும் வருக, அழைப்பிதழ் கீழே…