
பல நூற்றாண்டுகளாக நமது மாபெரும் புனிதத் தலமாக விளங்கிய அயோத்தி 1528ல் இஸ்லாமியப் படையெடுப்பாளன் பாபரால் சிதைக்கப் பட்டது. இதோ இன்று ஆகஸ்டு 5, 2020 அன்று ஸ்ரீராமனின் பேராலயம் அதே அயோத்தியில் எழப் போகிறது… ஸ்ரீராமஜன்மபூமியில் எழும் இந்தப் பேராலயம் தர்மத்தின் வெற்றியை முரசறைகிறது. ஆபிரகாமிய அதர்ம மதங்களின் ஆக்கிரமிப்பும் அராஜகமும் தொடர நாம் அனுமதியோம் என்று கட்டியம் கூறுகிறது. ஒருங்கிணைந்த இந்து சக்தி ஒளிவீசி உரம் பெற்று வேத தர்மத்தையும் இந்துப் பண்பாட்டையும் பாரதபூமியைம் அன்னிய சக்திகளின் அழிப்புத் தாக்குதல்களிலிருந்து காக்கும் என்ற நம்பிக்கையையும் உறுதியையும் பிரகடனம் செய்கிறது. இதுவே இந்த நிகழ்வின் முக்கியத்துவம். இதனை உள்ளபடி உணர்வோம். இந்த மகத்தான நிகழ்வு நிகழும் தருணத்தில் நாம் வாழ்கிறோம் என்பதே நமது பாக்கியம். இத்தருணத்தை உள்ளன்புடன், மகிழ்வுடன் நாமும் கொண்டாடி மகிழ்வோம்…