Posts Tagged ‘ சாதி இணக்கத் திருமணம் ’

ஒரு காதல் காவியம் [சிறுகதை]

February 15, 2020
By

நாயக்கன்கொட்டாயைச் சேர்ந்த பறையர் குலத்தைச் சேர்ந்த திவ்யா என்ற பெண்ணுக்கும் சக்கிலியர் குலத்தைச் சேர்ந்த இளவரசன் என்ற பையனுக்கும் இடையில் காதல் மலர்கிறது. விஷயம் தெரிந்ததும் பறையர் குலத்தினர் ஆத்திரம் கொள்கிறார்கள்... பின்னால் திவ்யா பர்தா அணிந்தபடி இறங்குகிறார். காதலியின் தோழி அமீரின் உறவினர். திவ்யாவும், இளவரசனைப் பார்த்து, ‘நீங்களும் இஸ்லாமுக்கு மாறிவிடுங்கள். நம்மை அங்கு யாரும் பிரிக்க முடியாது’ என்று சொல்கிறாள். இளவரசனோ தடுமாறுகிறான். என்ன விஷயமென்றால் பாளையங்கோட்டையில் இருந்த அவனது நண்பர்கள் ஜெகத் கஸ்பருக்கு உறவினர்கள். அவர் இதே யோசனையைச் சொல்லி அவனை கிறிஸ்தவ மதத்துக்கு மாற்றியிருக்கிறார்... அமைதி மார்க்கமும் அன்பு மார்க்கமும்... [மேலும்..»]

சுவாமி அம்பேத்கர் [குறுநாவல்] – 4

கோவிலைச் சுற்றி வசிப்பவர்கள் வீட்டில் யாருக்கேனும் உடல் நிலை சரியில்லாமல் இருந்தால் கோவில் சார்பில் பூஜாரியும் வேறு சில பக்தர்களும் சேர்ந்து நோய்வாய்ப்பட்டவர் வீட்டுக்குச் சென்று விரைவில் உடல் நலம் பெற பிரார்த்தனை செய்கிறார்கள். கோவிலுக்கு அருகில் மருத்துவமனைகள் இருந்தால் அங்கும் சென்று பிரார்த்தனை செய்கிறார்கள். பக்தர்கள் தமது நேர்ச்சையின் ஓர் அங்கமாக கோவில்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை, பொங்கல் போன்றவற்றைத் தருவதுபோல் அக்கம் பக்கத்து குழந்தைகளுக்கு அவரவர் வகுப்புக்கான பாட புத்தகங்கள், சிடிக்களை வாங்கித் தரலாம் என்று சுவாமி அம்பேத்கர் சொல்கிறார்... கோவில்கள் என்பவை கலப்புத் திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்களுக்கு அடைக்கலம் தரும் பாதுகாப்பு மையமாகத்... [மேலும்..»]

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 3 (இறுதி)

பறையர்-பள்ளர்கள் நில உடமையாளர்களாகவும் நிலக் குத்தகைதாரர்களாகவும் இருந்திருக்கிறார்கள். எனவே, அவர்களுடைய நிலை பிற தலித்களை விடப் பல மடங்கு மேலானதுதான். நில உடமைச் சமுதாயத்தினருக்குச் சேவைத் தொழில் செய்து வந்த சக்கிலியர், நாவிதர், வண்ணார், தோட்டி, வெட்டியார் போன்றவர்களே உண்மையில் 'தலித்' (Broken) என்று சொல்லத் தகுந்தவர்கள். இந்து சாதி அமைப்பின் கடைசிநிலையில் இருந்தவர்களாக, இருப்பவர்களாக அவர்களையே சொல்லவேண்டும்... இந்த இடத்தில்தான் சாதி அமைப்புக்கு நாம் முன்வைத்த நவீனத் தீர்வின் தோல்வி பற்றி சிந்திக்க வேண்டிவருகிறது. இந்த நவீனத் தீர்வு மூன்று வகையில் பிழையுடையதாக இருந்திருக்கிறது... பிற நாடுகளில் இருக்கும் அகமண முறை சாதியாக ஆகியிருக்காத நிலையில்... [மேலும்..»]

நான் ஏன் தலித்தும் அல்ல: புத்தக விமரிசனம் – 1

தலித் என்ற அடையாளத்துடன் தன்னை இணைத்துக்கொள்வதை ஆசிரியரின் ஒரு மனம் மறுக்கிறது. ‘அதன் அர்த்தம் என்னைத் துன்புறுத்துகிறது! எனது துன்பக்கேணி இதுதான். அது என்னை கும்பலில் ஒருவனாக அடையாளப்படுத்துகிறது. அது ஒரு கூட்டு அடையாளம். அதை நான் மறுப்பதை விடவும், அதுதான் என்னை மறுத்துக் கொண்டிருக்கிறது’ என்று கூறுகிறார். இது முழுக்கவும் நியாயமான வாதமே... நிஜத்தில் காதலர்கள் எந்தவித அரசியல் சிந்தனைகள் இல்லாமல் காதலுக்காகவே காதலிப்பவர்களாகத்தான் இருக்கிறார்கள். அரசியல் செய்பவர்கள்தான் சாதி கடந்த காதல்களை சாதிப் போரின் ஓர் அங்கமாகப் பார்க்கிறார்கள். இரு தரப்பு அரசியல் சக்திகளும் களத்தில் இறங்காத இடங்களில் இந்த சாதி கடந்த திருமணங்கள்... [மேலும்..»]

அம்பேத்கரின் “சாதி ஒழிப்பு”: ஓர் மீளாய்வு – 2

சாதிக்கொடுமைகள் கலப்பு திருமணத்தால் தீருமா என்பது கேள்வி. அமெரிக்க, தென்னாப்பிரிக்க நாடுகளில் நடைபெற்ற அடிமை ஒழிப்பு, உரிமையெடுப்பு இயக்கங்கள் கலப்பு திருமணத்தை முன்வைத்தா உரிமைகளை வென்றெடுத்தன? அமெரிக்க கறுப்பின உரிமை போராளியான மார்ட்டின் லூதர் கிங் கலப்பு திருமணத்தை முன்னிறுத்தினாரா?.... இந்துக்கள் யார் யார் என்றால் யாரெல்லாம் முஸ்லீம்கள் இல்லையோ, கிறிஸ்துவர்கள் இல்லையோ பார்சிகள் இல்லையோ அவர்கள் எல்லோரும் இந்துக்கள் என முன்வைத்தது அம்பேத்கர் தான். மேலும் இந்துவாக மதம் மாறலாம் எனும் சட்டக்கருத்தை முன்வைத்ததும் அம்பேத்கர் தான்... இந்துக்கள் பழங்குடியினரிடம் சமயப் பரப்புரை செய்தால் கேலி பேசுவதும் அதை தடுப்பதுமாக ஒரு பக்கமும், இன்னோர்... [மேலும்..»]

தர்மபுரியில் தலித்களுக்கு எதிரான கூட்டு வன்முறை

கலப்பு காதல் திருமணங்களில் மணமகன் / மணமகள் ஆகியோரில் ஒருவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில், அது ஒரு குடும்ப ரீதியான கசப்புணர்வு என்பதையும் தாண்டி, கடும் சாதிய வெறுப்பு விஷமாக மாறி விடுகிறது.... ஒரு குடும்ப சோகத்தை, தற்கொலையை முகாந்திரமாக்கி அதன் மூலம் இன்னொரு சமூகத்தினருக்கு எதிரான கடும் வெறுப்பை கூட்டு வன்முறை மூலம் வெளிப்படுத்துவது என்பது ஒரு ஜனநாயக நாட்டில், நாகரீக சமூகத்தில் ஏற்க முடியாத செயல்... இந்து இயக்கங்கள் இந்த விஷயத்தில் மௌனம் காப்பது மிக மோசமான வரலாற்றுத் தவறாகும். ஒவ்வொரு இந்துவும் தன்னில் தலித் சகோதரர்களின்... [மேலும்..»]

சாதி இணக்கத் திருமணங்கள் குறித்து இந்து சான்றோர்கள்

இந்தியாவில் சாதி இணக்கத் திருமணம் செய்வதற்கு ஒரு நல்ல காரணம் இருக்கிறது: ... சாதி இணக்கத் திருமணங்கள் செய்யாமல் இருப்பதால் இந்திய சமூகம் நாளுக்கு நாள் உடலளவில் பலகீனம் அடைந்து வருகிறது... அதன் தொடர்ச்சியாக அனைத்துவிதமான வியாதிகளும், ஏனைய தீமைகளும் வரவேற்கப்படத் தயாராக இருக்கின்றன என்பது உனக்குத் தெரியவில்லையா ? [மேலும்..»]