Posts Tagged ‘ சாத்வி நிரஞ்சன் ஜோதி ’

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

சாக்‌ஷி மஹராஜ் விவகாரம்: நடப்பது என்ன?

அண்மைக்காலமாக, பாஜகவில் சில தலைவர்களின் பேச்சுக்கள் சர்ச்சைக்குரியதாகி வருகின்றன. சாக்‌ஷி மஹராஜ், சாத்வி நிரஞ்சன் ஜோதி, யோகி ஆதித்யநாத் போன்ற இரண்டாம் நிலைத் தலைவர்கள் சிலரின் எக்குத்தப்பான பேச்சுக்களால், நரேந்திர மோடியின் வளர்ச்சிக்கான ஆட்சி என்ற பிம்பம் குலைகிறது. சாக்‌ஷி மஹராஜுக்கு பாஜக அளித்துள்ள எச்சரிக்கை நோட்டீஸ், அதன் தீவிரத்தை கட்சி உணர்ந்திருப்பதை வெளிக்காட்டுகிறது. பாரதீய ஜனதா கட்சியின் வேர்கள் ஹிந்துத்துவத்தில் தான் நிலைகொண்டுள்ளன. ஹிந்து என்பதில் பெருமிதமும், தேசிய உணர்வில் தெளிவான கண்ணோட்டமும் தான் பாஜகவின் அடிப்படை. இதில் யாருக்கும் மாறுபட்ட கருத்து கிடையாது. ஆனால், ஆட்சியில் இருக்கும்போது பாஜகவின் நிலைப்பாடுகள் தேசத்தின் ஒட்டுமொத்த மக்களையும்... [மேலும்..»]

சாத்வியின் “வெறுப்பைத் தூண்டும் பேச்சு” ?

December 6, 2014
By

சாத்வி நிரஞ்சன் ஜ்யோதி தலித் சமுதாயத்தைச் சேர்ந்த பெண்மணி. உ.பியின் ஹமீர்புர் மாவட்டத்தில், கேவட் என்னும் கங்கை நதியில் படகோட்டி, மீன்பிடித்து வாழும் பிற்படுத்தப் பட்ட சாதியில் பிறந்தவர். குகனின் வழிவந்த 'நிஷாதர்கள்' என்று தங்கள் பாரம்பரியத்தைப் பெருமிதமாக உணரும் சாதியினர் இவர்கள்... இத்தகைய பின்னணி கொண்ட ஒருவரை இந்து விரோத ஊடகங்களும் அரசியல்வாதிகளும் தாக்குவதில் என்ன ஆச்சரியம்? கிறிஸ்தவ ஆதரவாளரகவோ அல்லது இந்து வெறுப்பைக் கக்கும் தலித் அரசியல்வாதியாகவோ வளர்ந்திருந்து, இதை விட மிக மோசமான "வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுக்களை" பேசியிருந்தால், அவரது பேச்சு ஒடுக்கப் பட்ட விளிம்பு நிலை சமுதாயத்தின் போர்க்குரலாக... [மேலும்..»]