Posts Tagged ‘ சாமியார்கள் ’

[பாகம் 13] திருப்பராய்த்துறை வருகை

July 19, 2012
By

ஊட்டி மக்கள் சிறு சிறு ஹட்டிகளில் வசித்து வந்தார்கள். சுவாமி எல்லா ஹட்டிகளுக்கும் சென்று சிறு சிறு கதைகளைக் கூறி அம்மக்களுக்கு அருளுரை கூறி வந்தார். சிலநேரங்களில் பகவத் கீதை வகுப்பு நடத்தினார். அந்த கால கட்டத்தில் பேருந்து வசதி, மின்விளக்கு வசதிகள் கிடையாது. ஹட்டி மக்கள் பகலில் தோட்ட வேலைக்கு சென்று விடுவார்கள். அவர்கள் தோட்ட வேலைக்கு செல்வதற்கு முன்பு அவர்களுக்கு அருளுரைகள் சென்று சேர வேண்டும். ஆகையால் கடுங்குளிரில் காலை 4 மணிக்கே கால்நடையாக மலையின் ஏற்ற இறக்கங்களையயல்லாம் கடந்து சென்று ஹட்டி மக்களுக்கு அருளுரை ஆற்றி வந்தார். தமிழ்நாட்டில் மூலை முடுக்கு... [மேலும்..»]

[பாகம் 12] சின்னு சித்பவானந்தர் ஆனார்

May 3, 2012
By

சின்னுவின் கண்களில் பட்டது, 'சுவாமி விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள்' என்னும் புத்தகம். பாஸ்போர்ட் குப்பைத்தொட்டிக்குச் சென்றது... மகேந்திரநாத் குப்தா எழுதிய 'ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசங்கள்' என்ற நூலை 1 ரூபாய் கொடுத்து வாங்கினார்... சந்நியாச தீட்ஷை பெறுவதற்கு முன்பு உயிருடன் இருப்பவருக்கும் சேர்த்து பித்ருக்களுக்குப் பிண்டம் போட வேண்டும்... "உன் தந்தையின் மரணம் சற்றுமுன் நிகழ்ந்திருந்தால் உனக்கு சந்நியாச தீட்சை தருவது 1 வருடம் தள்ளிப் போடப்பட்டிருக்கும். உன் தந்தை உடலைவிடும் போது உன் கையில் பிண்டம் பெற்றுச் சென்றது அவர் செய்த பாக்கியம்" [மேலும்..»]

[பாகம் 11] பன்றிக்கறியும் ஞான கர்மங்களும்

April 26, 2012
By

'காதற்ற ஊசியும் வாராது காண் கடைவழிக்கே!' என்ற வாசகம் பட்டினத்தாரை மாபெரும் துறவியாக்கியது. 'சும்மாயிரு!' என்ற மந்திரத்தால் ஞானியானவர்கள் தாயுமானவரும் அருணகிரியும். 'செத்துத்தொலை!' என்ற வார்த்தை வேங்கடராமனை ரமணமகரிஷி ஆக்கியது. இந்தக் கொங்கு நாட்டு இளைஞனை, சாலையோரக் கடையில் கண்டெடுத்த விவேகானந்தரின் சென்னைச் சொற்பொழிவுகள் என்ற புத்தகம் தென்னாட்டு விவேகானந்தராக்கியது... "நீங்கள் கூறுவது உண்மையானால் ஒருவேளை ஒரு குழந்தையானது கருப்பையிலேயே அழிந்தாலோ, அழிக்கப்பட்டாலோ அது ஜீவன் முக்தி அடைந்து விடுமோ?" [மேலும்..»]

இந்த வாரம் இந்து உலகம் – ஏப்ரல்-20, 2012

அதி நவீன அறிவியல் தொழில் நுட்பத்திலும் சரி, இராணுவ தயாரிப்பு நிலையிலும் சரி, தான் யாருக்கும் சளைத்ததல்ல என்று இந்தியா நிரூபித்து விட்டது.. இந்த அளவு தீர்க்கமான வரலாற்று, கலாசார பிரக்ஞையுடன் ஒரு தமிழக முதல்வர் செயல்படுவது தமிழக மக்களுக்குக் கிடைத்த வரம்!... எஸ்.பி.ஓ.ஏ. பள்ளியின் கிறிஸ்தவ ஆசிரியர்கள் பள்ளியை முழுவதுமாக கிறிஸ்தவமயமாக்கி விட்டிருந்தனர். எல்லாக் கூட்டங்களிலும் கிறிஸ்தவப் பிரார்த்தனைகள் மட்டுமே இருக்க வேண்டும் என்பதை எழுதப் படாத விதி போல... கல்வி உரிமைச் சட்டத்தில் (RTE) இருந்து மதரஸாக்கள், வேதபாடசாலைகள் இரண்டுக்கும் விதிவிலக்கு - ஏன்?.. பாஜகவின் மாபெரும் மதுரை மாநாட்டை... [மேலும்..»]

[பாகம் 10] தர்மச் சக்கரம் பத்திரிகை நோக்கம்

April 19, 2012
By

"இது திருநெல்வேலிக்குச் செல்கிறது. பக்தர்கள் அங்கு வருவார்கள்!"... நீங்கள் உயிர்வாழ அவசியம் என மருத்துவரின் கட்டாயம் இருக்குமேயானால் அசைவ உணவை உட்கொள்ளலாம். பசிக்காகவோ, ருசிக்காகவோ சாப்பிட்டால் அது பாபச்செயல்தான்... ஜாதி என்பது சமுதாய சவுகரியங்களுக்காக ஏற்பட்டது. ஜாதியில் உயர்வு, தாழ்வு கிடையாது. ஜாதி துவேஷம் கூடாது... தர்மச் சக்கரம் பத்திரிகை உயிருள்ளவர்களைப் போற்றவோ, தூற்றவோ செய்யாது. எல்லா சமயங்களிலுமுள்ள உயர்ந்த கோட்பாடுகளை இப்பத்திரிகை பிரசாரம் செய்யும். [மேலும்..»]

அஞ்சலி: சுவாமி நித்யானந்தர் (தபோவனம்)

April 16, 2012
By

சுவாமி: இங்கு எதற்கு வந்தாய்? சிறுவன்: நான் துறவியாக விரும்புகிறேன்; சுவாமி: அப்படியா! நீ சிறு பிள்ளையாக இருக்கிறாய். ஊருக்குச் சென்று எஸ்.எஸ்.எல்.சி. படித்து முடித்துவிட்டு சர்டிஃபிகேட் எடுத்துக்கொண்டு வா, சேர்த்துக் கொள்கிறேன்... தான் கொண்டு வந்த மதிய உணவை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். அந்தப் பாட்டி தினந்தோறும் இவர் வருகைக்காக காத்திருக்கிறார்... மாணவர்களுக்கு வார்டனாக இருந்ததால் அனைவரும் 'வார்டன் சுவாமிஜி' என்றே அழைத்து வந்தனர். தலைமை ஸ்தானத்தை அவர் தேடிச் செல்லவில்லை. அது தானே தேடி வந்தது... [மேலும்..»]

[பாகம் 9] வாழ்ந்து காட்டியவரோடு மேலும் சில சம்பவங்கள்…

March 7, 2012
By

அன்பு சகோதர்களே! நீங்கள் நன்றாக இந்து மதத்தை விமர்சனம் செய்து விட்டீர்கள். நன்றாக சாடியும் உள்ளீர்கள். அதாவது, மதத்தலைவர்களின் கருத்துக்கு எல்லோரும் வாய்பொத்தி, கைகட்டி ஏற்றுகொள்வதாக கூறுகிறீர்கள். ஆனால் இந்து மதத்தில் அப்படி ஏற்றுகொள்ளப்படுவதில்லை. உண்மைதான். முற்றிலும் உண்மைதான். என்னசெய்வது சகோதரர்களே! பகுத்தறிவும், சுயசிந்தனையும், கொள்கை தெளிவும் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் வாதம் இருக்கும்; பிரதிவாதம் இருக்கும்; மோதல்கள் இருக்கும் மேற்சொன்ன பண்புகள் இல்லாத இடங்களில் …….. [மேலும்..»]

[பாகம் 8] வாழ்ந்து காட்டியவரோடு வாழ்ந்தேன்

February 15, 2012
By

இதனை நாம் எவரிடமிருந்தும் கடன் பெறவில்லை, பெறவேண்டிய அவசியமும் இல்லை.இப்படித்தான் இருக்க வேண்டும் எனத் தீர்மானித்துக் கட்டப்பட்ட குருகுலம் இது. தவிர உழைப்பின் மாண்பினை(Dignity of Labour) இந்திய மக்களுக்க உணர்த்திய வகையில் இப்பெருமை காந்திடிகளுக்கு உண்டு. காந்தியடிகள் இதை நடைமுறைப்படுத்துவதற்கு 50 ஆண்டுகளுக்கு முன்பாகவே பரமஹம்ஸர் இச்செயலைச் செய்து காட்டியிருக்கிறார். குலத்தால் அந்தணராகிய ஸ்ரீ ராமகிருஷ்ணபரமஹம்ஸர் உண்மையான தொண்டு என்ன என்பதைத் தம் வாழ்வின் மூலமாக உணர்த்தியருளினார் [மேலும்..»]

[பாகம் 7] அறிவிலே தெளிவு, நெஞ்சிலே உறுதி

January 20, 2012
By

தம்மிடம் பயிற்சி பெற்ற கண்மணிகள் உலகுக்கு என்ன சமூக சேவை செய்கிறார்கள் என்பதை அவர்கள் வாயிலாகவே கேட்டு மகிழ்வது சுவாமிக்கு பிடிக்கும். இதனால் சமூக சேவை செய்யாதவர்கள் கூட செய்ய ஆரம்பித்தனர். ஏதோ கூடினோம்; கும்மாளம் போட்டோம்;கலைந்தோம் என்று இல்லாமல் சேவை புரியும் பயிற்சி பெற்ற பட்டாளம் இந்த முன்னாள் மாணவர் சங்க பட்டாளம் ஆகும். வெளி உலகிலேயே உள்ள முன்னாள் மாணவர் சங்கங்களுக்கும் திருப்பராய்த்துறை குருகுல பயிற்சி... [மேலும்..»]

[பாகம் 6] சித்பவானந்தரின் குணநலன்கள்

December 19, 2011
By

கொல்லாமை. ஆசையின்மை, ஒழுக்கம், சகிப்புத்தன்மை, நேர்மை, தைரியம், வைராக்கியம், தலைமைப்பண்பு ஆகிய நவநற்பண்புகள்தான் சின்னுவை சித்பவானந்தர் ஆக்கியது என்றால் அது மிகையாகாது... எம்.ஜி.ஆர் காலதாமதமாக வந்ததை சுவாமிஜி சுட்டிக்காட்டினார். அவர் வருத்தம் தெரிவித்த அடுத்த விநாடியே சிரித்து ஏற்றுக்கொண்டார் நமது சித்பவானந்தர்... [மேலும்..»]