வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

1925ல் வீர சாவர்க்கருக்கும் கிலாஃபத் இயக்கத் தலைவர்களில் ஒருவரான ஷவுக்கத் அலிக்கும் இடையே நடந்த இந்த உரையாடல் முக்கியமானது. இந்த 2021ம் ஆண்டில் தாலிபானின் எழுச்சியை இந்திய முஸ்லிம்களில் கணிசமானவர்கள் வரவேற்றுள்ளனர் என்ற செய்தியின் பின்னணியில் வாசித்தால் இது நமக்குப் பல விஷயங்களை உணர்த்துகிறது. உரையாடல் நடந்தபடியே வருமாறு… “நேற்று வரை எல்லோரும் நல்லவரே என்று எங்கள் வீட்டுக் கதவுகளைத் திறந்து வைத்திருந்தோம். உலகின் வேறு பகுதியிலிருந்து வந்த திருடர்கள் எங்கள் சொத்தைக் கொள்ளையடித்து விட்டனர். இன்று புத்தி வந்து, சற்றே ஜாக்கிரதையாக வீட்டைப் பூட்டுகிறோம். சில கொள்ளையர்கள் வந்து, “நாங்கள் பல காலமாகக் கொள்ளையடித்து வந்துள்ளோம். நீங்கள் வீட்டைப் பூட்டுவது அநியாயம். இது நம் உறவை பாதிக்கும்” என்றால் நாங்கள் என்ன சொல்வது? அப்படிப்பட்ட அபாயகராமான உறவை முறிக்க வேண்டிய நேரம் இது… ”

View More வரலாற்றின் பாடங்கள்: வீர சாவர்க்கர் – ஷவுக்கத் அலி உரையாடல்

சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்

இந்த பாரத மண்ணுக்கு , அதன் விடுதலைக்கு , அதன் நெடிய பண்பாட்டுக்கு – தன்னுடைய உடல் , பொருள் மற்றும் வளமான எதிர்காலம் முதலியனவற்றை ஆகுதியாக அளித்த மகத்தான ஒரு செயல் வீரரின் தியாகத்தை என்னுடைய எழுத்திலே கொண்டு வர இயலாது என்ற அவநம்பிக்கையை இந்த நூல் என்னுள் தோற்றுவித்தது.. அருமையான இந்த நூலினை எழுதியவர் விக்ரம் சம்பத். பன்முகத் திறன்கள் பெற்ற ஆளுமையுள்ள ஒரு வரலாற்று அறிஞர் . இந்த நூலில் ஏரளாமான தரவுகள் / ஆவணங்கள் கொண்டு அற்புதமான இதனை வடிவமைத்து உள்ளார்.. பிரிட்டிஷ் காலனிய ஏகாதிபத்திய ஒடுக்குமுறை, சாவர்க்கரை மிகவும் துன்புறுத்தி விட்டது . இந்தக் கொடுமை “ மகாத்மா ” காந்திக்கும் “ பண்டித ” நேருவுக்கும் கூட நிகழவில்லை. ஒன்றன்பின் ஒன்றாக இரு ஆயுள் தண்டனைகள் பெற்ற ( 50 ஆண்டுகள் ) சாவர்கர் ஒரு கைதி என்ற முறையிலும் , ஓர் ஹிந்து என்ற முறையிலும் , ஓர் சித்பவன் பிராமணர் என்ற முறையிலும் எவ்வாறு தன்சிறைவாசத்தை எதிர்கொண்டார் ?…

View More சாவர்க்கர்: வரலாற்றின் இருட்டறையிலிருந்து ஓர் எதிர்க் குரல் – நூல் வாசிப்பு அனுபவம்