அக்பர் எனும் கயவன் – 1

அக்பர் நீதிக்கும், நேர்மைக்கும் உதாரண புருஷனாக, மண்ணில் மலர்ந்த மாணிக்கமாக இந்திய வரலாற்றுப் புத்தகங்கள் நெடுக புகழ்கின்றன. ஆனால் உண்மை அதற்கு நேரெதிரானது. அக்பரது ஒவ்வொரு செயலும் குரூரமும், மனம் நிறைய துரோக எண்ணங்களும், கொள்ளை, கொலை செய்யத் தயங்காத எண்ணமும் உள்ள, மத அடிப்படைவாதமும், ஹிந்துக்கள் மீது பெரு வெறுப்பும் உள்ள மனிதன் என்பதினை பெரும்பாலோர் அறிந்ததில்லை…அக்பர் திருமணம் செய்ததாகச் சொல்லப்பட்ட அத்தனை பெண்களுமே போர்களில் தோற்கடிக்கப்பட்ட ராஜபுத்திர மற்றும் பிற ஹிந்து அரசர்களிடம் மிரட்டிக் கைப்பற்றிக் கொண்டு சென்ற பெண்கள் மட்டுமே. அக்பரால் தோற்கடிக்கப்படும் நிலையில் அவரிடம் பிடிபட்டு அக்பரின் காம அடிமையாக மாற விரும்பாத சித்தூர் ராணி பத்மினி போன்றவர்கள் நெருப்பில் குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்கள் என்கிற வரலாறு நமக்கு உறைப்பதே இல்லை…

View More அக்பர் எனும் கயவன் – 1

வன்முறையே வரலாறாய்…- 30

முகமது பின் காசிம் தொடங்கி அனைத்து இஸ்லாமியப் படையெடுப்பாளர்களும் கடைப் பிடித்த இந்த குரூர நடவடிக்கைகளினால் அச்சமடைந்த, பாலியல் அடிமைகளாக விரும்பாத பல இந்திய ராஜ குலத்துப் பெண்களும், பிறரும் அரண்மனைகளின் அந்தப்புரங்களில் கட்டைகளை அடுக்கித் தீ மூட்டிப் பின்னர் அதில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்கள். இதே நிலைமை அக்பரின் காலத்திலும் தொடர்ந்து நடந்தது. உதாரணமாக 1568-ஆம் வருட சித்தூர் போரில் 8,000 ராஜ புத்திர வீரர்களைக் கொன்ற அக்பர் அவர்களது பெண்களையும், குழந்தைகளையும் அடிமைகளாகப் பிடிக்கும்படி உத்தரவிடுகிறார். ஆனால் இறந்த ராஜபுத்திரர்களின் மனைவிகள் அனைவரும் தீயில் குதித்துத் தற்கொலை (ஜவுஹார்) செய்து கொண்டார்கள்… உடன்கட்டை ஏறும் வழக்கம் இஸ்லாமிய ஆக்கிரமிப்புக் காலங்களில் அதிகரித்ததற்கு இன்னொரு காரணமும் இருக்கலாம். கணவனை இழந்த இளம்பெண் மறுமணம் செய்து கொள்வதற்கு மத்தியகால இந்தியாவில் இடமில்லை. எனவே அவ்வாறான இளம்பெண்கள் முஸ்லிம்களால் தூக்கிச் செல்லப்படுவதற்கு குறிவைக்கப்பட்டார்கள். எனவே அதனைத் தவிர்க்கவும் அந்தப் பெண்கள் உடன்கட்டை ஏறினார்கள்….

View More வன்முறையே வரலாறாய்…- 30

சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]

ஏற்கெனவே பலருக்கும் இன்று ஒரே குழந்தைதான். குழந்தைகளுக்கு விட்டுக் கொடுத்துப் போவதோ, அனுசரித்தல் என்றால் என்ன என்றோ தெரிவதில்லை. அப்பா, அம்மாவும் பணத்தால் தன் குழந்தைக்கு அனைத்தையும் வாங்கிவிடலாம் என்ற நினைப்பிலேயே மிதக்கின்றனர்… தன் சொந்தப் பெற்றோரைத் தன்னுடன் வைத்துக்கொள்ள முடியாத மகன்கள் எத்தனை பேர்? அதையே பெண்ணின் உறவினர் என்றால் அந்தப் பெண்ணுக்கு உரிமை மறுக்கப் படுகிறது என்று சொல்வார்கள்… ஓர் ஆரோக்கியமான சமுதாயத்தை எதிர்காலத்திற்குத் தருவது நம்போன்ற பெண்களின் கையில் தானே இருக்கிறது?

View More சம(?) உரிமைக்குப் போராடும் பெண்கள் – 4 [நிறைவுப் பகுதி]