Posts Tagged ‘ சிருஷ்டி ’

சங்கரரின் தக்ஷிணாமூர்த்தி தோத்திரம்: சைவசித்தாந்த விளக்கம் – 2

பிரபஞ்சம் தோன்றுவதற்கு முன், அதன் காரணத்தில், அதாவது , பிரம வித்தில், பிரபஞ்ச வேற்றுமைகள் மிகச்சூக்குமமாக இருந்தன. வித்திலிருந்து முளைத்த முளையில், வேர், அடிமரம், கிளைகள் கொம்புகள், தூர்கள் , இலைகள், முதலியன தோன்றியதைப் போல தேசம் (இடம்) காலங்களினால் வேறுபாடுகள் தோன்றின. பிரபஞ்சத்தில் காணப்படும் பொருள்களின் பெருக்கத்திற்கும் பன்மைக்கும் வேறுபாடுகளுக்கும் காலம், இடம் (time and space) ஆகிய இரண்டுமே காரணம். இந்த இரண்டயும் களைந்துவிட்டால் பொருட்பன்மையும் வேறுபாடுகளும் இல்லாதொழியும்... தன்னிச்சையால், சங்கற்பத்தால் படைப்பதற்கு எடுத்துக் காட்டு இரண்டு தருகிறார். ஒன்று, மாயாவாதி அல்லது மந்திரவாதியின் படைப்பு. மற்றொன்று சித்த யோகிகளின் படைப்பு... நேர்கோடு என்றால்... [மேலும்..»]

அத்தி மரத்தடியில்..

May 5, 2014
By

நேற்று இந்த பிரம்மாண்டமான அத்தி மரத்தைப் பார்த்தேன். அதன் நிழலில் நின்று உளம் பூரித்தேன். பெங்களூரின் பசவனகுடி பகுதியில் உள்ள அழகான, விசாலமான சிருங்கேரி மட ஆலய வளாகத்தில் ஆதி சங்கரர் சன்னிதிக்குப் பின்புறம் உள்ளது இந்தப் பெருமரம்.... ஆல், அத்தி, அரசு. இந்த மூன்றுமே மிகப் புனிதமான மரங்களாக வேதகாலம் முதல் கருதப் பட்டு வந்துள்ளன. இந்த மரங்களின் மலர்களுக்கு ஒரு தனிசிறப்பு இருக்கிறது என்று தோன்றியது. என்ன அது? இந்த மூன்று மரங்களின் மலர்களுமே மிக அபூர்வமானவை. அவற்றின் பூப்பருவம் என்பதை நாம் காணவே முடியாது. அது காய், கனிப் பருவங்களின் (fig)... [மேலும்..»]

நிலமென்னும் நல்லாள்

December 17, 2013
By

தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்... நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.... [மேலும்..»]

புருஷ சூக்தம்

March 6, 2013
By

புருஷனே ஆகுதியாக வேள்வி செய்தனர் தேவர்கள் - வசந்தம் நெய்யாக, கோடை விறகாக, சரத்காலம் அவியுணவாக ஒரு வேள்வி... பிராமணன் முகமானான் - கைகள் அரசன் - தொடைகள் வைசியன் - பாதங்களில் சூத்திரன் தோன்றினான்... பரம்பொருளே சிருஷ்டியின் கூறுகளாக வியாபித்திருக்கிறார் என்று போற்றிப் புகழ்கிறது இந்தப் பாடல். புருஷன் ஒவ்வொரு உயிரின் விழிகளாலும் பார்க்கிறான், ஒவ்வொரு உயிரின் பாதங்களாலும் நடக்கிறான். முடிவற்று விரிந்து செல்லும் விண்வெளி புருஷனின் தொப்புள் என்று கூறியது அபாரமான அழகியல்... வர்ணங்களை வைத்து உண்டான ஏற்றத் தாழ்வுகள் எதுவும் இதில் கற்பிக்கப் படவில்லை. வேதங்களில் எங்கு தேடினாலும் பிறப்பு அடிப்படையிலான... [மேலும்..»]

ரிக்வேதத்தின் சிருஷ்டி கீதங்கள் – 1

February 12, 2013
By

”அமுதம் அவன் நிழல் மரணமும் அவன் நிழல் - எந்த தேவனுக்கு அவி தருகிறோம் நாம்?...இருளை இருள் மறைத்திருந்தது ஆதியில் - பிரித்தறிய முடியாதபடி இவை எங்கும்நீராக இருந்தது - வடிவற்ற வெறுமையே எங்குமிருந்தது - அதிலிருந்து மகத்தான தவத்தால் அந்த ஒன்று பிறந்தது... தேவர்களோ படைப்பிற்குப் பின்வந்தவர்கள் - அப்படியானால் அது எப்படி உருவாயிற்று? யாரறிவார்?”... சிருஷ்டி உண்மையில் எப்படி உண்டாயிற்று, யார் அதனை உருவாக்கிய கடவுள் என்ற ஆதிக் கேள்வியையே இந்தப் பாடல் போற்றுகிறது என்று வேத இலக்கியம் குறித்து எழுதிய நவீன அறிஞர்கள் கருதுகின்றனர். பிற்காலத்தில் வளர்ந்து செழித்த இந்திய தத்துவ ஞானப்... [மேலும்..»]

கடவுள் என்றால் என்ன? – 1

சுவாமி தயானந்த சரஸ்வதி அவர்களின் விளக்கங்கள் - வேதம் இங்கே இருப்பது ஒரு ஈஸ்வரன் என்று சொல்லவில்லை, இங்கே இருப்பது எல்லாமுமே ஈஸ்வரன்தான் என்கிறது... ஒரு பௌதீக பேராசிரியர் சக்தி-பொருண்மை என்பதை கூறுகையில் E=mc2 என்கிறார். ஒரு எம்.எஸ்.சி. மாணவன் அவர் வகுப்பில் எழுந்து எனக்கு உங்கள்மேல் நம்பிக்கை இருப்பதால் எனக்கு அந்த சமன்பாடு பற்றி புரியாவிட்டாலும் பரவாயில்லை என்பது எப்படி முட்டாள் தனமோ அப்படித்தான் நான் கடவுளை நம்புகிறேன் என்பதுவும். இந்த அகிலமே ஈஸ்வரன் தான் என்றால் அது வெறும் நம்பிக்கை சார்ந்தது அல்ல; நாம் துருவித் துருவி ஆராய்ந்து புரிந்து கொள்ள... [மேலும்..»]

பழந்தமிழர் கண்ட வேதாந்தக் கருமணி – பகுதி 3

பெருமானே! முந்தைய மகா பிரளயத்தின்போது, பிரபஞ்சம் என்பது நாம ரூபங்களோடு இல்லாமல் இருந்தது. அப்பொழுது மாயை என்னும் மூலப் பிரக்ருதி உன்னிடமிருந்து பிரியாவண்ணம், புலன்களைக்கொண்டு நேராகவோ, அனுமானத்தாலோ அறியப்படாத ஒன்றாய் விளங்கிற்று. பிறப்பிறப்பு நிலைகளும் இல்லை; பகல் இரவு எதுவும் இல்லை. பரமானந்த சோதியாக நீ ஒருவனே பொலிந்து நின்றாய் [மேலும்..»]

ரமணரின் கீதாசாரம் – 2

February 5, 2011
By

தேகம் வேறு, ஆன்மா வேறு என்று பகுத்து அறியும் அறிவே பகுத்தறிவு. அது அனைத்து சீவராசிகளையும் ஒன்றாகவே பார்க்க வைப்பதால், அது ஒரு புண்ணியச் செயல். அப்படியில்லாது இவர் வேறு, அவர் வேறு என்ற ரீதியில் நான்-நீ என்று பகுத்துக் காட்டும் அறிவு பகுத்தறிவு ஆகாது. அப்படி பேதங்களைப் புகுத்தும் எதுவும் பாவச் செயல்களே. [மேலும்..»]

ஆபாசமும் மரபும் தமிழர் கடமையும்

நல்ல கணவன் அமைய செய்யும் ஒரு பாரம்பரியமிக்க நோன்பைப் பற்றி, மிக மலினமான காம வார்த்தைகளால் நிரப்பி ஒரு பாடலை எழுதியிருக்கிறார் இந்த நடிகர்... ஆண்டாள் பாசுரங்களில் இருப்பதாக கூறப்படும் காமத்தையும், தமிழ் சினிமா பாடல் ஆபாசத்தையும் நாம் ஏன் ஒன்றாகக் கருத முடியாது?.. ஆபாச வியாபாரிகள் கலையின் பெயரால் நம் பண்பாட்டின் மீது செய்யும் தாக்குதலைக் கண்டு, நாம் என்ன செய்ய வேண்டும்? என்ன செய்யக் கூடாது? [மேலும்..»]

சில ஆழ்வார் பாடல்கள் – 2

September 6, 2010
By

இனிய ஒலியெழுப்பும் கண்ணனின் குழலை விட, ஓங்கி ஒலிக்கும் சங்கைத் தான் ஆண்டாள் அதிகம் பாடியிருக்கிறாள்... அசுரர்களை அழித்து தன் அடியாரைக் காக்கும் பௌருஷம், அதோடு பெண்மைத் தனம் கொண்ட குறும்பு - இப்படி பெண் அணுக்கம் உள்ள அவ்வளவு எதிர்பார்ப்புகளின் லட்சியமாகவும் கண்ணன் இருக்கிறான்... உலகும் இயற்கையுமாய் அழகை விரிக்கும் படைப்பின் விதை அது என்பதால் “கொப்பூழில் எழு கமலப் பூவழகர்”என்றாள்... [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey