
பல ஊர்களில் பக்தர்கள் வரவும் பொங்கல் வைத்து வழிபடவும் உருவாக்கப்பட்ட, ஹிந்து சமுதாயத்திற்கு சொந்தமான, குறிப்பாக தலித் சமூகத்திற்கு சொந்தமான பரந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டு பஸ் நிலையங்களாக மாற்றப்பட்டன… வடபழனி கங்கை அம்மன் கோயில் ஒரு காலத்தில் கிராம கோயிலாக இருந்து, ஆக்கிரமிப்பிற்குள் தள்ளப்பட்டு ”தெருக்கோயிலாக” ஆக்கப் பட்டு விட்டது.. கோயில் துவஜ ஸ்தம்பத்திற்கும் கோயிலுக்கும் நடுவே சாலை போடுகின்றனர் பொதுத் துறையினர், பிறகு அந்த துவஜ ஸ்தம்பத்தை ஆக்கிரமிப்பு என்று அழிக்கின்றனர்… இரவோடு இரவாக யாருக்கும் தெரியாமல் அஷ்டலக்ஷ்மி கோயில் தல மரம் வெட்டப்பட்டு அந்த கோயிலிலேயே எரிக்கப்பட்டது..