Posts Tagged ‘ சிலிகா ஏரி ’

பாரத தரிசனம்: நெடும் பயண அனுபவம் – 4

ஒரு கட்டத்தில் நம்மை சுற்றிலும் வெறும் நீர் பிரபஞ்சம், வான் உள்ளிட்ட அனைத்தும் நீரால் நிறைந்து இருப்பதான தோற்றம். எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் நீர் என்ற உருவகம் தான் வருணனை முழு முதற்கடவுளாக வழிபடும் மரபு தோன்றியிருக்க காரணமாக இருக்க கூடும் . கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீரால் சூழ்ந்த இடமாக இருக்கிறது.சிலிக்கா ஏரியின் பிரமாண்டம் அபூர்வமானது. நடுவில் ஆச்சரியப்படுத்தும் சில நீர்பறவைகள் இளைப்பாறும் சதுப்புகள், . மீன்பிடிக்கும் படகுகள், பாரம்பரிய பாய்மரங்களில் பயணிக்கும் மீனவர்கள். நடுவில் உள்ள தீவுக்கு சாமான்களை ஏற்றிச்செல்லும் படகுகள் என்று அங்கங்கே தென்படுகிறார்கள். சுற்றுலா பயணிகள் படகுகளில் முழுக்க நிரம்பி... [மேலும்..»]