சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

நாடாளுமன்றத்தில் பிடிவாதமாக எப்.டி.ஐ. அனுமதியை அரசு நிறைவேற்றி இருப்பதில், அந்நிய நிறுவனங்களின் ‘கோடிக் கரங்கள்’ நீண்டிருக்கவும் வாய்ப்புகள் உள்ளன. இந்தக் கழிசடைகளை நம்பித் தான் சிறு வணிகர்களும் விவசாயிகளும் இருக்கிறார்கள்…. எப்.டி.ஐ.யை இறுதிவரை எதிர்த்த பா.ஜ.க, தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகள், இடதுசாரிகள், அதிமுக, திரிணாமூல், தெலுகு தேசம் ஆகிய கட்சிகளுக்கு நாடு நன்றிக் கடன் பட்டிருக்கிறது.. லோக்சபாவிலும் சரி, ராஜ்ய சபாவிலும் சரி, எப்.டி.ஐ.யை எதிர்ப்பவர்களின் எண்ணிக்கை ஆதரிப்பவர்களின் எண்ணிக்கையை விட அதிகம். ஆயினும் எதிர்க்கட்சிகளின் தீர்மானம் ‘ஏதோ ஒரு முறையில்’ தோற்கடிக்கப்பட்டுவிட்டதால், அரசு நெஞ்சை நிமிர்த்திக் கொள்கிறது. இது கையாலாகாதவன் பீம புஷ்டி லேஹியம் சாப்பிட்டது போலத் தான் இருக்கிறது…

View More சில்லறை வர்த்தகமும் சில்லறை மனிதர்களும்

சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை

லோக்பால் மீதான மக்களின் கவனத்தைத் திசை திருப்ப அரசு ஆடிய நாடகம் இது. அடுத்ததாக, வெளிநாடுகளில் உள்ள கறுப்புப் பணம், விலைவாசி உயர்வு, பெட்ரோல் விலை மீதான கட்டுப்பாடின்மை, ஸ்பெக்ட்ரம் ஊழலில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு உள்ள தொடர்பு, தெலுங்கானா பிரச்னை உள்ளிட்ட பல சங்கடமான விஷயங்களிலிருந்து நாடாளுமன்ற மக்கள் பிரதிநிதிகளின் கவனத்தைத் திசை திருப்ப இதை விட நல்ல உபாயம் வேறில்லை, எனவேதான் நாடாளுமன்றம் நடக்கும்போது, கொள்கை முடிவுகளை மக்களவையில் தான் வெளியிட வேண்டும் என்ற இலக்கணத்தை வேண்டுமென்றே மீறினார் முகர்ஜி.

View More சில்லறை மனிதர்கள் திருந்துவதில்லை