Posts Tagged ‘ சிவசேனை ’

இலங்கை சிவநேயர் திருப்படையின் பணிகள்

நாள்சென்றதும், பாதிரி வீட்டுப் பூசையறையில் ஏசுவின்  படமொன்றை மாட்டச்சொன்னார்.  இதை விரும்பாவிடினும்,  பாதிரியின் வேண்டுதலுக்கிணங்க, அவ்வீராங்கனையின் கணவரும், தந்தையும் வீட்டுப் பூசையறையில் ஏசுவின் படத்தை மாட்ட இடங்கொடுத்தார்கள்.  பிறகு, பாதிரி இந்துத் தெய்வங்களின் படங்களை அங்கிருந்து நீக்கும்படி கேட்டுக்கொண்டார். ஆனால், அக்குடும்பம் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது.  நாங்கள் உடனே குறுக்கிட்டோம்.. விடுதலையடைந்த இலங்கையில் இந்து இனம், கோவில்களின்மீது பவுத்தர்களின் தாக்குதல் நடப்பது இயல்பான ஒன்றாக ஆகிவிட்டது.  அதிலும், 1972ல் இலங்கைச் சட்ட அமைப்பு அமுலுக்கு வந்து, இந்துசமயத்திற்கு மேலாகப் பவுத்தசமயத்திற்கு சிறப்பிடம் வழங்கப்பட்டவுடன் இத்தாக்குதல்கள் அதிகமாகின.... [மேலும்..»]

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

தொடரும் பாஜக-வின் வெற்றிநடை!

“வந்தால் உன்னோடு… வராவிட்டால் தனியாக… எதிர்த்தால் உன்னையும் மீறி… லட்சியம் அடையப்படும்” – வீர சாவர்க்கர். அக்டோபரில் கிடைத்த இரு மாநிலத் தேர்தல் முடிவுகளால் பாரதிய ஜனதா கட்சி மீண்டும் புத்துணர்வு கொண்டிருக்கிறது. லோக்சபா தேர்தலில் அபார வெற்றிபெற்ற பிறகு நடந்த சில இடைத்தேர்தல்களில் பாஜக எதிர்பார்த்த வெற்றி பெறாமல் போனதால் கும்மாளமிட்ட அதன் அரசியல் எதிரிகள் இப்போது வாயடைத்துப் போயிருக்கின்றனர். சறுக்கலும் எள்ளல்களும்: முதலாவதாக, சட்டசபை உறுப்பினர் பதவியிடங்கள் காலியான பிகார் (10),  பஞ்சாப் (2),  ம.பி. (3),  கர்நாடகா (3) ஆகிய மாநிலங்களிலுள்ள 18 தொகுதிகளில் கடந்த ஆக. 21-ல் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதில்,... [மேலும்..»]

“சேனைகள்” – மஹாராஷ்டிரத்தின் மராட்டிய “கழகங்கள்” – 1

February 18, 2010
By

“நான் ஒரு மராட்டியன் என்பதில் மிகவும் பெருமை கொள்கிறேன். ஆனால் நான் முதலில் ஒரு இந்தியன்” என்று நாடு போற்றும் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் கூறியதற்காக அவரையும் பழித்தனர் சிவ சேனைத் தலைவர்கள். “சச்சின் டெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடுவதோடு நிறுத்திக் கொள்ள வேண்டும். அரசியல் விவகாரங்களில் தலையிடக் கூடாது...” [மேலும்..»]