Posts Tagged ‘ சிவாச்சாரியார் ’

கோயில்கள், சைவம், நிகழ்வுகள்

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 2

திருநாவலூர் சுந்தரர் மடம் அறநிலையத்துறை ஆவணங்களின்படி ஸ்ரீ பக்தஜனேஸ்வரர் கோயிலின் கிளை கோயிலே. எனவேதான் 2013 ஆம் ஆண்டு விழுப்புரம் இணை ஆணையர் புது மண்டபம் கட்டுதல் என்றபடிக்கே உபயதிருப்பணி அனுமதி கொடுத்துள்ளார். இந்த உபயதிருப்பணிக்கு அறநிலையத்துறை 6 நிபந்தனைகளை கொடுத்துள்ளது. அதில் முக்கியமாக இரண்டாவது நிபந்தனை ஆகமவிதிப்படி செயல்படவேண்டும் என்பது. ஆனால் இன்று அத்தனை நிபந்தனைகளும் ஆள்பலம் அரசியல் பலத்தால் மீறப்பட்டிருக்கின்றது. வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது அறமற்றதுறை... சைவவேடதாரிகள், ஆணவப்போக்கோடு, சுந்தரர் மடம் நிலைப்பெற கடந்த நூறு ஆண்டுகளில் காரணமாக இருந்த சிவாச்சாரியார்களை மிரட்டி ஒதுக்கியும், பாரம்பர்ய சைவ ஆதினங்களின் வழிகாட்டுதல் இல்லாமலும் தான்தோன்றித் தனமான... [மேலும்..»]

கோயில்கள், சைவம், நிகழ்வுகள்

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

திருநாவலூர் ஸ்ரீசுந்தரர் மடாலயம்: சூழ்ச்சியும் துரோகமும் பாரம்பரிய அழிப்பும் – 1

அக்காலத்தில் குருக்கள் நித்யபடி வாழ்க்கையே கஷ்டமானது. அந்த கஷ்டத்திற்க்கும் நடுவில், ஊருக்கு ஒரு குடியாக உள்ள குருக்கள் எல்லாம் சேர்ந்து திருப்பணி செய்வது அசாத்யமானது. ஆனால் ஸ்ரீ சுந்தரர் பெருமான் மீது கொண்ட பக்தியும் அன்பும், சுவாமி திருவருள் துணை ஒன்றையுமே நம்பிச் செய்தார்கள். அன்று அவ்விடத்தில் திருமடம் அமைக்கவில்லை என்றால், காலப்போக்கில் பல கோயில் இடங்கள் மாயமானது போன்று, ஸ்ரீ சுந்தரர் அவதார பூமியும் மயமாகி மறைந்தே இருக்கும். ஆனால், இன்றோ சுந்தரர் பூமியை அடையாளப்படுத்திய சிவாச்சாரியார்களை அவ்விடத்திற்கு வரவிடாமல் குண்டர்களை வைத்து மிரட்டும் சைவவேடதாரிகளை திருமுறை வியாபாரிகளை என்னவென்று சொல்வது? சிவாச்சாரியார்களை மிரட்டி... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கோயில்கள், சைவம்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

ஆகம வழிபாட்டில் மகத்துவம் மிக்க தீக்ஷை முறைகள்

சிவாகம தீக்ஷை சைவசித்தாந்த தத்துவ உட்செறிவு மிக்கது. இதனால், இக்கிரியையில் வெளிப்படையான சடங்குகளை விட, உள்முகமான செயற்பாடுகளே அதிகமாக இருக்கக் காணலாம்... சாந்தீத கலை, சாந்தி கலை, வித்யாகலை, பிரதிஷ் டா கலை, நிவிர்த்தி கலை ஆகிய கலைகளை குறிக்குமாறு முறையே சிரசு, நெற்றி, மார்பு, நாபி, முழங்கால் ஆகியவற்றில் பூக்கள் கட்டித் தொங்க விடப்படும். பின், மந்திர பூர்வமான ஹோமங்கள் நடந்து அந்த நூல் கழற்றி, சிவகும்பத்தின் முன் வைக்கப்படும். பிறகு இரவு யாகசாலைக்கு அருகில் சீடனை தூங்கச் செய்வார். மறுநாள் துயில் நீங்கி அதிகாலை எழுந்ததும் குருவும் சீடனும் நித்திய கருமங்கள் முடித்து, சிவபூஜை... [மேலும்..»]

ஆன்மிகம், இலங்கைத் தமிழர், கோயில்கள், சைவம், வழிகாட்டிகள்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

இலங்கை ஸ்ரீ. தா.மஹாதேவக் குருக்களுடன் ஒரு நேர்காணல்

1994ஆம் ஆண்டுக்காலப்பகுதியில் பெரும்பகுதி யாழ்ப்பாண மக்கள் இடப்பெயர்வையும் பெரும் அவலத்தையும் சந்தித்தனர். இவ்வாறான ஒரு சூழலில் மஹாதேவக்குருக்கள் குடும்பமும் அவரது பாடசாலைச்சமூகமும் கூட, இதே துயரத்தை ஏற்று தென்மராட்சியின் உசன் பகுதிக்கு இடம்பெயர்ந்தது. அங்கும் கூட, குண்டு மழைக்குள்ளும் இலவச வேத, ஆகம வகுப்புகளும், பகவத்கீதா வகுப்புகளும் நடந்தமை வியப்பானது..."பல்கலைக்கழகம் சென்று கற்க வேண்டும் என்ற ஆவலும் ஆசையும் நிரம்ப இருந்தது. ஆனால், எனது குடும்பச்சூழல் அவற்றுக்கெல்லாம் இடம்கொடுக்கவில்லை. எம்முடைய தந்தையார் சைக்கிளில் கோவில் கோவிலாகச் சென்று உழைத்த பணத்தை வைத்தே எமது குடும்பம் வாழ்ந்தமையால் வறுமை கல்வியைத் தொடர இடம் தரவில்லை... " [மேலும்..»]

ஆன்மிகம், இந்து மத விளக்கங்கள், சைவம்

தவ முனிவனின் தமிழாகமம்

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்... ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்... சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே... [மேலும்..»]

அனுபவம், ஆன்மிகம், கோயில்கள்

அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்

அரிசோனாவில் அருள்மிகு ஆனைமுகன் ஆலயம்

உற்றுப் பார்த்தால், அந்தக் குன்றே ஆனைமுகக் கடவுள் வடிவில் நம்மைப் பார்த்து ஆசி நல்குவது போலத் தென்படுகிறது. இத்தகைய அற்புதத் தோற்றம் தென்படுவது அமெரிக்காவிலிருக்கும், அரிசோனா மாநிலத்தில், பீனிக்ஸ் மாநகரத்திலிருந்து நாற்பது மைல் தொலைவில் உள்ள மகாகணபதி ஆலய வாசலில் நின்றுகொண்டு பார்க்கும் பொழுதுதான்.... 7400 சதுர அடிப்பரப்பில் ஒரு பெரிய கட்டிடம் எழுந்தது. தமிழ்நாட்டிலிருந்து வந்து தங்கி இருந்த நான்கு சிற்பிகள் கர்ப்பக்கிரத்தில் சுதைச் சிற்பங்களை வடிவமைத்தார்கள். திருப்பணி செய்ய வாய்ப்பிற்காக, செங்கல் ஆதரவாளர்களாக பக்தர்கள் திரண்டார்கள். விமானங்களிலும், சன்னதிகளிலும் கட்டப்படும் செங்கல்களில் தங்கள் பெயர்களை எழுதி, காணிக்கைகளைச் செலுத்தினார்கள்... [மேலும்..»]

இந்து மத மேன்மை, கலைகள், பொது, வரலாறு

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

தஞ்சைப் பெரிய கோயில்: ஆயிரம் ஆண்டு அற்புதம்

ராஜராஜனுடைய பெருந்தன்மையை விளக்கும் ஒரு செய்தி, இவ்வாலயம் எழுப்ப அவனுக்கு உதவிய அத்தனை பேருடைய பெயர்களையும் கல்வெட்டில் எழுதி வைத்திருக்கிறான்.. வளர்ந்து வருகின்ற நந்தி, 80 டன் ஒரே கல் ஏற்றப்பட்டது போன்ற பல செய்திகள் பொய்... துவாரபாலகரின் காலடியில் ஒரு மலைப்பாம்பு யானை ஒன்றை விழுங்கிக்கொண்டிருக்கிறது. இது ஓர் அரிய உட்பொருளை விளக்குகிறது..பணிபுரிவோர் தூயவர்களாக இருத்தல் அவசியம் என்பது உணரப்பட்டது. அரசாங்க சேவையில் தூய்மைக்கும் நாணயத்துக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது... [மேலும்..»]

சைவம், நிகழ்வுகள்

தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை

தஞ்சை சைவமரபு பாதுகாப்பு மாநாடு: ஒரு பார்வை

தொன்மையான சைவ மரபினைப் பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துதலும் சைவ சமயத்தை இழிவு படுத்துபவர்களுக்கு கண்டனம் தெரிவித்தலும் கழகத்தின் முக்கிய கொள்கைகள் என கூறினார்... மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் - தமிழகத்தில் பூசையே நடைபெறாத சிவாலயங்களை ஆங்காங்கே சைவப் பெருமக்கள் தத்தெடுத்து நித்திய பூசைகள் சிவாகம முறைப்படி நிகழ... வேத ஆகம பாராயாணத்தைக் கண்ட அன்பர்கள் மிகுந்த பரவசமடைந்தனர். பெங்களூர் அன்பர்கள் நடத்திய ஸ்ரீசண்டேச நாயனார் மற்றும் ஸ்ரீகண்ணப்ப நாயனாரின் நாடகங்கள் காண்போர்களின் மனதை பறித்தன... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கலைகள், பண்டிகைகள், பொது

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடியேற்ற விழா என்னும் தெய்வீக நிகழ்வு

கொடிப்படம் நமக்கு அஞ்சேல் என்று அபயம் காட்டும் இறைவனைக் குறிக்கிறது. பதாகை முத்திரை வடிவமாய் இறைவன் தனது வலது கரத்தை விரித்துக் காட்டினாற் போல இது அமைந்துள்ளது... எந்த நாட்டில் கொடிமரம் இருக்கிறதோ அங்கு அரசு விருத்தியாகும்.. சர்வ வாத்திய கோஷம் முழங்க மண் வெட்டியால் மண்ணை மும்முறை எடுத்து தாம்பாளத்தில் சேர்த்து யாகசாலையில் கொண்டு சென்று வைப்பார்... வீதியின் ஒன்பது திசைகளிலும் சந்தியாவாஹனம் செய்யப்படும். இதனால் இதை “நவசந்தி ஆவாஹனம்” என்பது வழக்கு. [மேலும்..»]