ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)

ராமருடன் தான் வாழ்நாள் முழுதும் கொண்டிருந்த அன்பில் எந்த மாசு, மருவும் இல்லை என்பதே உண்மை என்பதால் தன்னை ஈன்ற பூமாதேவியே தன்னை அவள் கரங்களில் தாங்கிக் கொள்ளட்டும் என்று சீதை பிரார்த்தனை செய்கிறாள். மூன்று வரிகளில் உள்ள அந்த சீதையின் வேண்டுதல், ராமாயணத்திலேயே எவருடைய மனதையும் உருக்கி மிகுந்த இரக்கம் கொள்ள வைக்கக்கூடிய வரிகள்… உண்மையில் எல்லாவிதமான ரசங்களும் ராமாயணத்தில் இடம் பெற்றிருக்கின்றன என்றாலும், மற்றவைகளை விட சோக ரசம் முதன்மையாக இருக்கிறது. ராமாயணத்தை ஓர் இலக்கியக் கலைப் படைப்பாக மட்டுமே காண்பது சரியான பார்வையாக இருக்க முடியாது. அதை மோக்ஷத்தைத் தர உதவும் ஆன்மிகத்தைப் போதிக்கும் சமய நூலாகவே பார்க்கவேண்டும். அதில் பரவலாகக் காணப்படும் சோகத்திற்கு ஓர் ஆன்மிக முக்கியத்துவம் இருக்கிறது….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 8 (நிறைவு)

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

வானர சேனைகள் கடல் கடந்து இலங்கை போவதற்கு ராமர் கடல் அரசனிடம் வேண்டிக்கொண்டார். ஆனால் அந்த வேண்டுகோளுக்குப் பயன் ஏதும் இல்லாது போகவே, அவர் கடல் அரசனுக்கு ஓர் எச்சரிக்கை விடுத்தார். அதைக் கேட்ட அரசன் உடனே அங்கு தோன்றி கற்களால் ஆன பாலம் ஒன்றை நளன் கட்டலாம் என்று கூறி, அவரிடம் மன்னிப்பு கேட்டான். … உத்தர காண்டம் வால்மீகி ராமாயணத்தின் பிற்சேர்க்கையாக இருக்கலாம் என்றும், ராமருடைய பட்டாபிஷேகத்துடன் முடியும் யுத்த காண்டமே ராமாயணத்தின் இறுதிப் பகுதியாக இருந்திருக்க வேண்டும் என்று சில பக்தர்களின் எண்ணமாக இருக்கிறது. ஆறு காண்டங்களில் தொடராக நடக்கும் நிகழ்வுகளைக் கண்ட நமக்கு, ஏழாவது காண்டம் துயர் நிறைந்ததாக உள்ளதால் அது ஒரு இடைச் செருகல் என்று சொல்லப்படுவது ஒரு நிறைவான வாதமாக எடுபடவில்லை….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 7

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

போகும் வழியில் காணப்படும் மலைக் குன்றுகளையும், நதி ஓடைகளையும் “சீதை எங்கே? எங்கே?” என்று ராமர் கேட்டுக்கொண்டே போக, அவைகளுக்கு ராவணன் மேல் இருந்த அச்சத்தால் அவை எல்லாமே மௌனம் சாதித்தன. அவ்வாறு அவர் மான்களின் கூட்டத்தைப் பார்த்துக் கேட்கவே அவை யாவும் ராமருக்கு உதவி செய்வது போல, எல்லாமே வானத்தை பலமுறை தொடர்ந்து பார்த்துக்கொண்டே, தெற்கு நோக்கிப் பாய்ந்தோடின. அதிலிருந்து சீதை வான் வழியே, தென்திசை நோக்கிக் கொண்டு செல்லப்பட்டிருக்கிறாள் என்று லக்ஷ்மணன் புரிந்துகொண்டான்… சுக்ரீவனை விட வாலி வலிமை படைத்தவன் என்று இருந்தாலும், வாலியை விடுத்து சுக்ரீவனைத் தனது கூட்டாளியாக ராமர் ஏன் தேர்ந்தெடுத்தார்? மற்ற கரடிகள், குரங்குகள் போல வாலி, சுக்ரீவன் இருவருமே ராமரின் உதவிக்காக இறைவனால் உருவாக்கப்பட்டிருந்தபோதும், வாலியின் நடத்தை எதிர்பார்த்ததற்கு மாறாக இருந்தது….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 6

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5

ஒரு வீட்டில் ஒரு விசேஷம் நடக்கப்போகிறது என்றால் வீட்டில் உள்ள அனைவரையும் தவிர மற்ற உற்றார், உறவினர்களுடன் நண்பர்களும் அதற்கு இருக்க வேண்டும் என்று அந்த வீட்டின் தலைவர் விரும்புவதுதான் சாதாரணமாக நடக்கக்கூடிய விஷயம். ராமனுக்குத் தசரதர் மனத்தில் ஒரு தனி இடம் உண்டு என்றாலும், நாட்கள் கழிந்துப் பிறந்ததால் அவருக்கு நான்கு மகன்கள் மீதுமே மிக்க வாஞ்சை உண்டு. அதேபோல மற்ற மூன்று சகோதர்களுக்கும் ராமர் பெருந்தன்மை கொண்டவர், அனைவர்க்கும் மூத்தவர் என்று மதிப்பும், மரியாதையும் அவர் மீது நிறையவே உண்டு. இவ்வளவு இருந்தும் அவசரம் அவசரமாக விழாவிற்கான ஏற்பாடுகள் நடந்ததென்றால் அதை நாம் ராமராக அவதரித்துள்ள இறைவனின் லீலையாக இருக்கவேண்டும் என்றுதான் நினைக்க முடியும்…. ராமரை எப்படியும் திருப்பி அழைத்து வருவதாகச் சூளுரைத்துவிட்டு, துயரமுற்ற மக்கள் பலரையும் அழைத்துக்கொண்டு பரதன் வனத்திற்குச் சென்றான். இவ்வாறான தனது மகன் பரதனின் உண்மை உணர்வைப் புரிந்துகொண்ட கைகேயியும் தனது இயல்பான நற்குணங்களைத் திரும்பப் பெற்றாள்…

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 5

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

தங்களது குறிக்கோளுக்காக மனிதர்களாக அவதரித்து இவ்வுலகில் கடும் துன்பங்களை இருவருமே அனுபவித்திருந்தாலும், அதில் ராமரைவிட சீதையின் பங்கே மிக அதிகமாக இருந்தது. அவர்கள் பட்ட கஷ்டங்களைப் படிக்கும்போது நமது கண்களில் கண்ணீர் தானே துளிர்க்கும். அப்படியென்றால் விஷ்ணுவும் அவரது பத்தினியும் அவ்வளவு துன்பப்பட்டார்களா என்று கேட்டால், “இல்லையே! தெய்வ நியதிப்படி தெய்வங்கள் எப்படி கஷ்டங்களுக்கு உள்ளாகும்?” என்பதுதான் பதிலாக இருக்கும். அப்படியானால் “அவர்கள் என்ன துன்பப்பட்டதுபோல நடித்தார்களா?” என்பதுதான் நமது அடுத்த கேள்வியாக இருக்கும். அலசிப் பார்த்தால் அப்படி நினைப்பதும் சரியில்லை….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 4

ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3

தேவர்களில் தொடங்கி அசுரர்கள், மனிதர்கள் வரையிலான பல நூற்றுக்கணக்கானவர்களின் மனைவிகளை ராவணன் அபகரித்துச் சென்றதே அவன் செய்த பாவங்கள் எல்லாவற்றிலும் மிகப் பெரிய பாவமாகக் கருதப்பட்டது. அவர்கள் அனைவரின் சாபமும், கண்ணீரும் காலத்தால் வீணாகப் போகவில்லை. இறுதியில் சீதை என்னும் பெண் வடிவில் அவனது முடிவிற்கான காரணம் வந்தது. ராவணனால் சிறை பிடிக்கப்பட்ட பெண்களின் மேல் கடவுளர்கள் அனைவரும் பரிதாபம் கொண்டிருந்தாலும், அவனுக்கு சீதையின் மூலம் வரப்போகும் அழிவைப் பற்றியும் அவர்கள் முன்கூட்டியே அறிந்திருந்தனர். இறுதிவரை ராவணன் தன் வழிகளைத் திருத்திக்கொள்ளவே இல்லை. ஆனால் ஒவ்வொரு முறையும் ஒரு பெண் கொடுத்த சாபத்தினால் அவன் தன் சக்தியைப் படிப்படியாக இழந்துகொண்டே வந்தான். ஒரு முறை குபேரனின் மகன் நலக்கூபரனின் மனைவி ரம்பையை ராவணன் பலாத்காரம் செய்தபோது அவள் இட்ட கொடுமையான சாபத்தினால், அவன் நிலைகுலைந்து போனான்….

View More ஸ்ரீமத் ராமாயணக் கதாபாத்திரங்களின் தெய்வீகப் பின்னணி – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

இராவணன் அரக்க வடிவத்தை எடுத்த பின்னும் சீதை கலங்கவில்லை, அவனை எதிர்த்து வாதிட்டிருக்கிறாள் என்றுதான் இரு கவிகளும் எழுதி உள்ளார்கள். எல்லா தேவர்களாலும் வணங்கப்படும் குபேரனின் சகோதரனான நீ இந்த இழிவான எண்ணத்தை ஏன் மேற்கொண்டாய் என்று கடிகிறாள் என்று வால்மீகி சொல்கிறார். வேள்வியில் (யாகத்தில்) இடப்படும் பலியை நாய் விரும்புவது போல, என்னை அடைய விரும்புவதாகச் சொல்கிறாயே என்று அவனை நாயுடன் துணிச்சலாக ஒப்பிடும் வீராங்கனையாகத் திகழ்கிறாள் சீதை என்று உச்சாணிக் கொம்புக்கே அவளை ஏற்றி விடுகிறார் கம்பர். இரு கவிச்சக்கரவர்த்திகளுமே, சீதையை, ஆணுக்கு அடங்கிப் பயந்து போகும், அடிமையாக வாழ்ந்திருக்கும் பெண்ணாகக் காட்டவில்லை. கற்புக்கே சிகரமாகவும், கற்பைக் காப்பாற்றிக் கொள்ள எத்தகைய பலமுள்ள அரக்கனையும் எதிர்த்து நிற்கும் வீரப் பெண்ணரசியாகவும்தான் காட்டி உள்ளார்கள்….

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 3

கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

உணர்வு ஓடுங்கப்பட்டுப் போன இலக்குவன் சீதையைக் கைகூப்பிச் சொன்னான். “மைதிலி, (நீ) எனக்கு தெய்வமாக ஆகிறாய். பதில் உரைக்கவும் திறனற்றவனானேன். பெண்களிடம் சொல்லத்தகாத வார்த்தைகள் (இருப்பது) என்பது வியப்பல்ல. பெண்களுடைய இப்படிப்பட்ட இயல்பு இவ்வுலகங்களில் காணப் படுகிறது. (இவ்வாறு கடும் சொற்களைச் சொல்வது) இரு காதுகளுக்கு நடுவில் (தைத்த) சுடும் அம்பைப்போல இருக்கிறது. (இதைக்) கூர்ந்து கேட்கும் காட்டில் செல்பவர் எல்லோருமே (வனம் வாழ் தெய்வங்கள் அனைவருமே) இதைக் கேட்கிறார்கள்….. “ஒரு நாள் பழகியவர்கள்கூட உயிரையும் கொடுப்பார்கள். எனவே, உயர்ந்தவன் (இராமன்) தீங்கடையும் செய்தி கேட்டும், ஒன்றும் தோன்றாமல் நீ நின்று கொண்டிருக்கிறாய். இனி வேறு என்ன (செய்ய இயலும்)? இப்போது நான் தீக்கு நடுவில் விழுந்து இறப்பேன்!” என்றாள்…..

View More கம்பனும் வால்மீகியும்: இராமாயண இலக்கிய ஒப்பீடு – 2

கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமகாதையைத் தமிழில் வடித்தெடுக்கும் பொது, கற்பிற் சிறந்த சீதையும், ‘பிறன் மனை நோக்காப் பேரறிவாளனும்’, ஒரு மனைவி உறுதியாளனுமான இராமனும், ஒருவரிடத்தில் மற்றொருவர் உள்ளத்தைப் பறிகொடுத்தால்தான் தமிழ் மரபுப்படி வடிவமைக்க இயலும் என்று களவியலையும், கம்பர் தனது இராமகாதையில் புகுத்தினார். முழுமையான களவு நடந்த பின்னர்தான், மாற்றுக் குறையாத கற்பு இருவரிடமும் நிலைக்கும் என்று கம்பர் முடிவு செய்திருக்க வேண்டும். அதுதான் இராமன்-சீதையின் முதற் சந்திப்பையும், கண்டதும் கொண்ட காதலையும் விவரித்து, இருவரின் கற்புக்கும் அடித்தளம் அமைத்திருக்க வேண்டும். மேலும், கடவுளர்களின் அவதாரங்களாகக் கம்பரால் எண்ணப்பட்ட இராமனும், சீதையும், மனித உருவில்தான் காதல் என்ற நுட்பமான உணர்வைப் பெற இயலும் என்ற எண்ணமும் அவருக்கு இருந்திருக்கக் கூடும். அதுவும் இன்னொரு காரணமாக இருந்திருக்கலாம் அல்லவா? மூலத்தை மாற்றினாலும், கவிச்சக்கரவர்த்தி கம்பன் எந்த உயர்வான எண்ணத்துடன் அவ்வாறு செய்தார் என்று நம்மால் பகுத்து அறிந்து கொள்ள முடிகிறது.

View More கம்பனும், வால்மீகியும் – இராமாயண இலக்கிய ஒப்பீடு

இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)

இராமர் எங்கிருக்கிறாரோ அதுதான் அயோத்தி. ஆக அயோத்தி போகவேண்டும் என்பது இறைவனை அடைய வேண்டும் என்பதைத்தான் குறிக்கிறது. அப்படிப் போய் இறைவனை அடைவதற்கு, வானரர்கள் இராமரைத் தவிர வேறு யாரிடம் போய் வேண்டுவது? இறைவனுக்கு நாம் வேண்டிக்கொள்வதில், “இறைவா! நாங்கள் உன்னை அடைவதற்கு வழி காட்டு” என்பதைத் தவிர வேறு எந்த கோரிக்கை அதை விடச் சிறந்ததாக இருக்கிறது?… வால்மீகி ஒவ்வொரு இன்னல்களிலும் மனிதனான இராமர் எப்படி தன் நிலைப்பாடை எடுக்கிறார் என்பதைக் காட்டும்போது, அந்தக் காலத்தைய அவல நிலைச் சூழல்களையும் படம் பிடித்துக் காட்டுகிறார். இப்படியும் ஒருவனால் இருக்க முடியும் என்று காட்டுவதே இந்த இலக்கியத்தின் இலக்கு. அதைக் கேட்டு ரசித்து, அது சொல்லும் வழியில் நடக்க நமக்கு அந்த இராமரே வழி காட்டட்டும்….

View More இராமன்: ஒரு மாபெரும் மனிதகுல விளக்கு – 31 (இறுதி பகுதி)