Tag: சீனா

மோதி – ஜின்பிங் மாமல்லபுர மாநாடு: ஒரு பார்வை

இன்றைய சீன அதிபர் ஜின்பிங் பெரும் வரலாற்றுணர்வு மிக்க மனிதர். சீனா இழந்த கலாச்சாரச் செல்வங்களை மீட்டுக் கொண்டுவருவதில் மிகவும் ஆர்வமுடையவர் ஜின்பிங். அவரை, இன்னொரு வரலாற்று ஆர்வலரான பிரதமர் மோடி மாமல்லபுரத்திற்கு அழைத்துச் சென்றது பெரும் ஆச்சரியமில்லை… மோடி-ஜின்பிங் மாமல்லபுர சந்திப்பினால் இந்திய-சீனா இடையே உள்ள பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதில்லை. எனினும் இரண்டு பழம்பெரும் நாகரிகங்கள் தங்களின் கடந்தகால வரலாற்றை உணர்ந்து கொள்ள இந்தச் சந்தர்ப்பம் உதவியிருக்கிறது. இந்திய-சீனப் பொருளாதார யுத்தம் முக்கியமான பிரசினை. சீனா இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போட எல்லா வழிகளிலும் முயல்கிறது. இன்றுவரை அதில் வெற்றியும் பெற்றிருக்கிறது என்றாலும் எதிர்காலத்திலும் இந்தியா இப்படியே இருக்கும் என்பதற்கு உத்தரவாதமில்லை. ஏனென்றால் இன்றைக்கு உலக நாடுகளுடன் சுமுக உறவு வைத்திருக்கும் வலிமையான இந்தியாவை சீனர்கள் அடக்கி வைப்பது சாத்தியமில்லை…

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்… – 1

அணு ஆயுதப்போர் இருநாட்டிற்குமே மாபெரும் கேட்டையும், அழிவையும், பல இலட்சக்கணக்கான உயிர்ச்சேதத்தையும், அணுக்கதிர்வீச்சினால் பல்லாண்டுகள் எவரும் அணுகமுடியாத நிலமையையும் விளைவிக்கும் [mutually assured destruction]. அரசு சரியாகச் செயல்பட முடியாத நிலையும் உண்டாகும். பயங்கரவாதிகள் கையில் அணு ஆயுதங்கள் சிக்க பாகிஸ்தான் காரணமாகக்கூடும் என்று டேனியல் பைமன் எழுதியுள்ளார்.

ராகுல்ஜியின் சீன தூதரக சந்திப்பு: வெளிவராத உண்மைகள் :)

எங்க தலைவரு கொதிக்காரு, ஒமக்கு ஜோக்கா இருக்கு என்னா?… சரி, மேலே… போற வழில சீன தூதரகத்தப் பாத்துட்டாரு. அதென்னா சைனீஸ்ல எழுதீருக்கான்? நிறுத்துன்னுட்டாரு… நானும் போனேனா? உள்ள போனவரு “உங்க செஃப் எங்க?”ன்னு ரிசப்ஷன்ல கேட்டாரு… அவன் சீஃப்னு நினைச்சிகிட்டு தூதரைப் பாக்க வந்திருக்காருன்னு , ஒரு ஃபார்ம் கொடுத்து ’நிரப்பு’ன்னுட்டான். அதுல இங்க்லிஷ்லயும் சைனீஸ்லயுமா எழுதியிருந்திச்சா, அண்ணன் குழம்பிட்டாரு… ஒரு வெண்பா சொல்லுங்க. அப்படியே கட்சி இதழ்ல போட்டுருதேன்… கொடுத்துருவம்…

டிராகனின் சீறலும் சிங்கத்தின் கர்ஜனையும்…

இந்திய- சீனப் போர் மீண்டும் நிகழுமானால், இரு தரப்பிலும் பலத்த சேதம் நிச்சயம். ஆனால், அது 1962 போல இருக்காது என்பது சீனாவுக்கும் தெரியும். ஆயினும் இந்தியாவைச் சீண்டுவதன் மூலமாக ஆசிய பிராந்தியத்தில் தனது வல்லாதிக்கத்தை உறுதிப்படுத்த சீனா முயல்கிறது. இனிமேல் அந்த நாடகம் எடுபடாது என்பதை மோடி அரசு வெளிப்படுத்திவிட்டது. அமைதிக்காக கைகுலுக்கும் அதேசமயம், எல்லையில் வீரர்களைக் குவிக்கவும் இந்தியா தயார் என்பது உலகுக்குத் தெரியப்படுத்தப்பட்டுள்ளது.

சீறும் சிங்கம்… திகைக்கும் உலகம்!

  ஜூன் 9-இல் மியான்மர் நாட்டின் எல்லைக்குள் புகுந்து இந்திய ராணுவம் நடத்திய அதிரடித் தாக்குதலில், இந்தியாவின் மணிப்பூர் மாநிலத்தில் பயங்கரவாதத் தாக்குதலை (ஜூன் 4) நடத்திய பிரிவினைவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் 38 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். (இந்திய ராணுவத் தாக்குதலில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை நூறைத் தாண்டியிருக்கும் என்றும் தகவல்கள் உள்ளன). இதன் எதிரொலி அரசியல்…

வளரும் பாரதத்தின் உலக மேலாண்மை

நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவுக்குப் பிறகு வெளியுறவுக் கொள்கையை முன்னிலைப்படுத்தி தேசத்தின் கௌரவத்தை உயர்த்தும் முயற்சியில் ஈடுபட்ட பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் மட்டுமே. அவரது அடியொற்றி நரேந்திர மோடியின் வெளியுறவுப் பயணங்கள் அமைந்து வருகின்றன. ‘வசுதைவ குடும்பகம்’ என்ற குறிக்கோளுடன் செல்லும் இந்தியத் தலைவரின் எண்ணங்கள் பலிதமாகும் நாள் வரும்போது, உலகிற்கே வழிகாட்டும் திறனும் இந்தியாவுக்கு வாய்க்கும்.

எல்லையில் மீண்டும் போர்மேகம்

கார்கில் போரில் மண்ணைக் கவ்விய பாகிஸ்தான் மீண்டும் இந்திய எல்லையில் வாலாட்டத் துவங்கி இருக்கிறது.  பாகிஸ்தானில் அரசியல் நிலையற்ற தன்மை ஏற்படும் காலகட்டங்களில் எல்லாம் இந்தியப் பகுதியில் பாக். ராணுவம் அத்துமீறுவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. பங்காளி நாடுகளான இந்தியாவும் பாகிஸ்தானும் மத அடிப்படையில் பிரிந்தபோதே, இரு நாடுகளிடையிலான பிரச்னைக்கும் கால்கோள் இடப்பட்டுவிட்டது. இந்திய மாநிலமான…

பிரிக்ஸ்: அமெரிக்காவை முந்துகிறது பாரதம்!

இதற்குமுன் படிக்க வேண்டிய, தொடர்புடைய இடுகைகள்: பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!   உலகம் ஒரு குடும்பம்: பிரேசிலில் பிரதமர் மோடி உரை   வல்லான் வகுத்ததே வாய்க்கால் என்ற பழமொழி உண்டு. அதற்கு உலக அரசியலில் மிகப் பொருத்தமான உதாரணம் அமெரிக்காவின் எதேச்சதிகாரம். யு.எஸ்.ஏ. என்று குறிப்பாகவும் அமெரிக்கா என்று பொதுவாகவும் அழைக்கப்படும் அமெரிக்க ஐக்கிய…

பிரிக்ஸ்: சாதித்தது பாரதம்!

பிரேசிலில் நடந்து முடிந்துள்ள ஆறாவது பிரிக்ஸ் உச்சி மாநாடு சர்வதேச அரசியலில் பெரும் மாற்றங்களுக்கான கால்கோளை இட்டுள்ளது. குறிப்பாக, பிரிக்ஸ் மாநாடு இந்தியாவின் முக்கியத்துவத்தை வெகுவாக உறுதிப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் தன்னிச்சையான போக்கிற்குக் கடிவாளமாக உருவான சிந்தனையே பிரிக்ஸ். 2006-இல் உருவான இக்கரு 20089-இல் ரஷ்யாவின் எகடிரன்பர்க் நகரில் கூடிய முதல் உச்சி மாநாட்டில் நனவானது. ஆரம்பத்தில்…