Posts Tagged ‘ சுதந்திரப் போராட்டம் ’

அரசியல், வரலாறு, விவாதம்

தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

June 22, 2017
-
தியாகத்தை அவமதித்தல் : வாஞ்சிநாதனை முன்வைத்து

சில வருடங்களுக்கு முன் தேசதுரோக வெறுப்பு இயக்கங்களின் உள்வட்டங்களிலும் துண்டுப்பிரசுரங்களிலும் இடம்பெற்ற பொய்ப்பிரசாரம் இப்போது தமிழ் ஊடகங்களிலும் நாளிதழ்களும் வருமளவுக்கு ஆகியிருக்கிறது. வீரவாஞ்சியின் தியாக நினைவை அவமதிக்கும் இந்தக் கீழ்மகன்களை எதிர்த்துக் கேள்விகேட்க நாதியில்லையா? தமிழ்நாட்டின் எந்தத் தலைவரும், பிரபலமும் இந்த வக்கிரத்தைக் கண்டிக்க ஏன் முன்வரவில்லை?.... 1857 கிளர்ச்சி, வாஞ்சி, ஆசாத், பகத்சிங் போன்ற புரட்சியாளர்களின் செயல்கள், நேதாஜியின் ராணுவம் இவை எதுவுமே முற்றிலுமாக *தோல்வியில்* முடிந்தன என்பது சரியல்ல என்று நாம் கூறுகிறோம். அவை ஒவ்வொன்றும் தேசபக்தி என்ற ஜ்வாலை அணைந்துவிடாமல் எரிவதற்காக அளிக்கப்பட்ட ஆகுதிகள்.... [மேலும்..»]

அரசியல், வரலாறு, வழிகாட்டிகள்

காந்திஜியும் சியாமா பிரசாத் முகர்ஜியும்

காந்திஜியும்  சியாமா பிரசாத் முகர்ஜியும்

அந்நாளில் ஹிந்து மகாசபையின் தலைவராகவும் பின்னாளில் அதிலிருந்து வேறுபட்டு பாரதிய ஜன சங்கத்தை துவக்கியவராகவும் அறியப்படும் முகர்ஜி, ராஜாஜியின் இந்த திட்டத்தை கடுமையாக எதிர்த்தார். “உங்களுடைய உடல்நிலையை கவனியுங்கள். நீங்கள் ஒரு வேலையில் ஆழ்ந்துவிட்டால் அதனை முடிக்காமல் ஓயமாட்டீர்கள் என்பது தெரியும். உங்களுடைய பலமும் பலவீனமும் அது தான். நல்ல ஓய்விற்கு பிறகு மீண்டும் உங்கள் பணியை துவக்குவீர்கள் என்று நம்புகிறேன்”... காந்தியின் இந்த கடிதங்கள் முகர்ஜி அவர் மேல் செலுத்திய ஆதிக்கத்தையும் காந்தி முகர்ஜி மேல் கொண்டிருந்த அன்பையும் விளக்குகின்றன.... [மேலும்..»]

அரசியல், கல்வி, வரலாறு, வழிகாட்டிகள், விவாதம்

மண்ணுருண்டையா மாளவியா?

மண்ணுருண்டையா மாளவியா?

மதன் மோகன் மாளவியா சனாதன வைதீக இந்து மதத்தை காப்பாற்ற அகில பாரத இந்து மகாசபையை உருவாக்கியவர். அவர் வட்டமேசை மாநாட்டுக்காக கடல் கடந்து இங்கிலாந்து சென்ற போது இந்த தேசத்தின் மண்ணுருண்டையை கொண்டு சென்றார். எனவே அவர் மண்ணுருண்டை மாளவியா என அழைக்கப்பட்டார். தலித் மக்களின் ஆலய நுழைவு போராட்டத்தை எதிர்த்தார். குழந்தை திருமணத்தை ஆதரித்தார். இவர் ஏற்படுத்திய பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் ஒரு இந்து நிறுவனம் மட்டுமே. இப்படிப்பட்டவருக்கா பாரத ரத்னா கொடுப்பது? இதைத் தமக்கே உரிய வசை பாணியில் எழுதியுள்ளார்கள்... ஆனால் உண்மை என்ன? [மேலும்..»]

புத்தகம், வரலாறு

ஆகஸ்ட் 15

ஆகஸ்ட் 15

மிக முக்கியமான ஒன்று இப்புத்தகத்தில் உள்ளது. மகாத்மாவின் கடைசி பேட்டி: காந்தி தன் அஹிம்சை வாதத்தை ஒரு அபத்த எல்லை வரை எடுத்துச் செல்கிறார். அணுகுண்டுக்கு எதிராக உங்கள் அஹிம்சையை எப்படி பயன்படுத்துவீர்கள் என்று மிஸ் வொய்ட் கேட்கிறார். ”நான் என்ன பதில் சொல்ல இயலும்?” என்று உடன் சொன்ன காந்தி, சற்றுக் கழித்து ”பிரார்த்தனை செய்வேன்” என்கிறார். ”அணுகுண்டை ஏந்தி விமானம் மேலே பறந்து கொண்டிருந்தால் பிரார்த்தனை செய்வீர்களா?” என்று கேட்கிறார் மிஸ் வொய்ட். ’விமானத்தைப் பார்த்ததும் நான் திறந்த வெளிக்கு வருவேன். என்னிடம் தீய எண்ணம் ஏதும் இல்லையென அந்த விமானி அறிந்து... [மேலும்..»]

கதைகள்

தமஸோ மா… – 1

தமஸோ மா… – 1

"மிகவும் அப்பாவியாக இருக்கிறீர்கள் சாமுவேல்… இது ஞாயிற்றுக்கிழமை விவிலிய வகுப்பு கதை அல்ல. இது சரித்திரம். எல்லா பிரிட்டிஷ் வன்முறைக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் இருக்கும் அல்லது கற்பிக்கப்படும்… பெருமளவு உலகத்தின் வரலாற்றை, சர்வ நிச்சயமாக இந்த தேசத்தின் வரலாற்றை எழுதும் கடமையை கர்த்தர் நம்மிடம்தான் கொடுத்திருக்கிறார். இதோ இந்த பாவப்பட்ட இந்திய மக்களின் வரலாற்றையும் நாம்தான் எழுதி அவர்களுக்கு அளிப்போம்.. பஞ்சாபின் இந்த கிணற்றுக்கும் ஒரு பண்பாட்டு நியாயம் உண்டு. அதை நாம் அவர்களுக்கு சொல்வோம்… பின்னர் அவர்களின் வரலாற்றாசிரியர்களே அதை அவர்களின் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு கற்பிப்பார்கள்… இதுவும் விவிலிய வகுப்புகளின் கதைகளாகும் நாள்... [மேலும்..»]

கதைகள்

தமஸோ மா… – 2

தமஸோ மா… – 2

“நான் ராஜபுதனத்தை சார்ந்தவள் சாம்… மீராவின் ஊர்… ஆனால் என் பள்ளியில் பாதிரிகள் பக்த மீராவை பித்து பிடித்த ஒரு காமாந்த காரி என சொல்லி கொடுத்தார்கள்… என் வீட்டிலோ இந்துக்கள் அஞ்ஞானிகள் என்று சொன்னார்கள்… அதை நம்பி வளர்ந்தவள் நான் … சாம்… முதன் முதலாக மீரா பஜன்களை நான் கேட்ட போது எதனை நான் இழக்க வைக்கப்பட்டேன் என்பதை உணர்ந்தேன்… எனவே எனக்கு கிடைத்த விசுவாசம் அதை விட மேலானது என எனக்கு நானே சொல்லி கொண்டேன்… என் மேல் சுமத்தப்பட்ட விசுவாசத்தை கர்த்தருக்கான சிலுவையாக என் வாழ்நாளெல்லாம் சுமந்து கொண்டிருப்பேன் என எனக்கு... [மேலும்..»]

கதைகள், சிறுவர், வழிகாட்டிகள்

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

ஆசிர்வதியுங்கள் அனந்த் பை

அமர்சித்திரகதை அவை அனைத்துக்கும் மணிமகுடம். காமிக்ஸ் என்கிற சித்திரகதை வடிவத்தையும் இந்திய பண்பாட்டின் சிறந்த பொக்கிஷங்களையும் இணைத்துக் கொடுத்த ஒரு புத்துயிர்ச்சி அற்புதம். இதன் பின்னணியில் இருந்த மனிதர் அனந்த் பை. அல்லது ’பை மாமா’ (Uncle Pai) என அழைக்கப்பட்டவர்... ஒரு காமிக்ஸ் இப்படி தொடர்ந்து பல்வேறுபட்ட ஆராய்ச்சிகளுடன் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டது இதுவே முதல்தடவையாக இருக்கும்... அங்கிள் பை, இந்த நாட்டில் தலைமுறை தலைமுறையாக எங்கள் சந்ததிகள் உங்களுக்கு கடன் பட்டிருக்கின்றோம். [மேலும்..»]

கதைகள், வழிகாட்டிகள்

சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

சுப்ரபாதம் – பாரதி பிறந்தநாள் சிறப்புச் சிறுகதை

'ஸுப்ரபாதம் என்றால் என்னன்னு கேழ்க்கறானே இந்தப் பிள்ளையாண்டான்! அப்புறம் என்ன பெரிய பாட்டுக்காரன் இவன்? எப்பப் பார்த்தாலும் பாரதி, பாரதின்னுண்டிருக்கையே, பூ, இவ்வளவுதானா ஒன்னோட பாரதி?'...அவள் விழித்தெழுந்துகொள்வதோடு, அடிமை வாழ்வே பரம சுகம் என்று மயங்கிக் கிடக்கிற தனது விவரங் கெட்ட பலப்பல பிள்ளைகளையும் தட்டி எழுப்பியாக வேண்டும். ஆகையால் இதோ, நான் பாடுகிறேன்... [மேலும்..»]

அரசியல், வரலாறு

சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

சுதந்திரத்துக்கு முன் காங்கிரஸ் கடந்து வந்த பாதை

1916இல் மீண்டும் லக்னோவில் அம்பிகாசரண் மஜூம்தார் தலைமையில் கூடியது. இந்த மகாநாட்டில் ஒரு வேடிக்கை நடந்தது. இங்கு நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கான தேர்தலில் காந்தி திலகரிடம் தோற்றார். ஆனால், வெற்றி பெற்ற திலகர் காந்திஜி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவித்தார். [மேலும்..»]

அனுபவம், வரலாறு

அகமதாபாதில் ஒரு நாள்

August 19, 2010
-
அகமதாபாதில் ஒரு நாள்

ஒரு கிணறு அதிகபட்சம் எவ்வளவு அழகாகவும்,கலைநயமிக்கதாகவும் இருக்கமுடியும்? இது பற்றிய கற்பனைகளை எல்லாம் விஞ்சுவதாக இருந்தது அது... முற்றிலும் கருங்கல் மற்றும் மஞ்சள் கற்களால் (yellow stone) கட்டப்பட்ட அவ்வளவு பெரிய மசூதிக்குள் யாருமே இல்லை. ஒரு அசாதாரணமான அமைதி நிலவியது.அப்படியே ஒரு தூணில் சாய்ந்து உட்கார்ந்து அந்த ஆழ்ந்த அமைதியை... சபர்மதிக்கு ஒருபுறம் சிறைச்சாலையும், மறுபுறம் மயானபூமியும் இருந்தன. ஒரு சத்யாகிரகி தன் வாழ்நாளில் கண்டிப்பாக இந்த இரண்டில் ஏதாவது ஒரு இடத்துக்குத் தான் போயாக வேண்டும் என்று காந்தி கருதினாராம்... [மேலும்..»]