என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

கோவை மாவட்டத்தில் மட்டும் கடந்த இருபதே வருடங்களில், 17 பேர்கள் (ஒரு முஸ்லீம் நபர் உட்பட) பயங்கரவாதிகளால் கொல்லப்பட்டுள்ளனர். இதோடு மட்டுமல்லாமல் கொலைவெறித் தாக்குதலுக்கு உட்பட்டு பின்னர் தெய்வாதீனமாக உயிர் பிழைத்தோரும் உண்டு… இன்னும் எவ்வளவு நாட்கள் இந்தப் போராட்டங்களும், உயிர் இழப்புகளும் தொடரவேண்டும்? தங்களுடைய தர்மத்திற்காகவும், தேச நலனுக்காகவும் உயிர் தியாகம் செய்தவர்களின் குடும்பங்கள் இன்று எந்த நிலைமையில் உள்ளன? அக்குடும்பங்களின் வாழ்வாதரங்கள் என்ன?

View More என்று தணியும் இந்து சுதந்திர தாகம்?

எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

இந்த நூறு ஆண்டுகளில் தங்களது தொடர்ச்சியான செயல்பாடுகள் மூலமாக பெண்ணுரிமை இயக்கங்கள் உலகெங்கிலும், குறிப்பாக மேற்குலகிலும் பெற்றிருக்கும் வெற்றிகள் மகத்தானவை… ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையே பகிர்தல் உணர்வும், பரஸ்பர மதிப்பும் கூடுவது குடும்பங்களுக்கும், அதன் மூலம் ஒட்டுமொத்த சமூகத்திற்குமே பெரிய நன்மை செய்யும்… மேற்கத்திய நுகர்வுக் கலாசாரம் உருவாக்கிய தினம் அல்ல மகளிர் தினம். உண்மையான சுதந்திர தாகத்தின், மானுட சமத்துவத்தின் குரலாக எழுந்த தினம் அது.

View More எங்கே பெண்ணுரிமைகள்?: சர்வதேச மகளிர் தினத்தை முன்வைத்து

மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

” ஒரு ஹிந்து என்ற முறையில் என் தேசத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம் என் தெய்வத்துக்கு இழைக்கப்பட்ட அவமானம். என் தேசத்தாயின் சேவை ஸ்ரீ ராமனின் சேவை. அவளுக்கு செய்யப்படும் சேவை ஸ்ரீ கிருஷ்ணனுக்கு செய்யப்படும் சேவை” .. சிறைக் கம்பிகளுக்குள் மரணமெனும் மணப்பெண்ணுக்காகக் காத்திருந்த அந்த இளைஞனின் பெயர் மதன்லால் திங்க்ரா. அவரது இறுதி அறிக்கையைப் பெற்றுக்கொண்டு கனத்த இதயத்துடனும் இத்தகைய தியாகக் குழந்தைகளைப் பெற்ற பாரத மண்ணில் பிறந்ததற்காக சோகத்துடனான பெருமிதத்துடனும் ..

View More மதன்லால் திங்க்ராவின் மரண அறிக்கை – நூற்றாண்டு நினைவுகள்

இன்று மலர்ந்தது சுதந்திரம்

“நீங்கள் என்ன வானத்திலிருந்து குதித்தவர்களா?” என்று நீதிபதிகளை நோக்கிக் கேட்டார் ஓர் அமைச்சர். இன்னொருவர், “நாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசைச் சேர்ந்தவர்கள். நீங்கள் இந்த வேலைக்கு அரசால் நியமிக்கப்பட்டவர்கள். எங்களை விட நீங்கள் உயர்ந்தவர்களா? கட்டைப் பஞ்சாயத்து நடத்துவது போல இருக்கிறது,” என்ற கருத்தும் தெரிவிக்கப்பட்டது. “இரண்டு நீதிபதிகள் சேர்ந்து ஒரு நாட்டின் விதியை, 120 கோடி மக்களின் விதியைத் தீர்மானிப்பதற்கு என்ன உரிமை இருக்கிறது?” என்று நம் முதல்வர் கேட்ட கேள்வி ஆணித்தரமானது. இந்திய அரசியல் சட்டம் நாடாளுமன்றத்தைத் தான் sovereign என்று சொல்லியிருக்கிறது. இது போன்ற யாரோ எழுதி வைத்துவிட்டதை வைத்துக்கொண்டு அதற்குக் கட்டுப்பட்டு நடப்பது என்பது சுதந்திரமாகாது…

View More இன்று மலர்ந்தது சுதந்திரம்

வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

… இன்று வரலாறு அந்த நீதிபதியை மறந்துவிட்டது, இந்த வழக்கு நடந்த மும்பை உயர்நீதிமன்றத்தில், அந்த தீர்ப்பு வழங்கப்பட்ட அறையில் அந்த “குற்றவாளியின்” வார்த்தைகள் பொறிக்கப்பட்டு விளங்குகின்றன. அந்த குற்றவாளிதான் சுதந்திர கோஷத்தை இந்த தேசத்துக்குத் தந்த மகான்…. அவரது உற்ற நண்பராகவும் சீடராகவும் விளங்கிய ஜின்னா, அவரது மறைவு வரை அப்பழுக்கற்ற தேசியவாதியாகவே இருந்தார், அதன் பின்னரே பாதை தடுமாறி பிரிவினை வாதியானார்….

View More வேர்க்கடலைத் தோல்கள், வேதத்தின் காலம், விடுதலை வேள்வி …

வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

விரும்பிய தொழிலை விரும்பிய வகையில் செய்வதுதான் மனித விடுதலை என்று முழங்கிய மார்க்ஸ் அது எப்படி நெடுங்காலத்துக்கு எந்த சமூகத்திலும் கிட்டாத ஒரு சுதந்திரம் என்பதை அறியாமல் இல்லை. தெரிந்தும் ‘புரட்சி’ செய்ய மனிதரை உந்தியது (சுய?) வெறுப்பின் பால், வாழ்வுக் கோணலை ஒரே முயற்சியில் நிமிர்த்தி விடும் அவசரத்தில் எழுந்த குரோத முயற்சி. அதை இனம் காணாமல் அவரை ஒரு தீர்க்கதரிசி என்று விழுந்து தண்டனிடும் லட்சங்கள் தாமாக எதார்த்தத்தைத் தரிசிக்க முடியாத மந்தை ஆடுகள். உண்மையில் இருந்து அன்னியமான ‘மனிதர்’கள் ….

View More வேலை, அன்னியமாதல், படைப்பாளிகள்: சில எண்ணங்கள்

ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

“எது எப்படியானா என்ன? அவனவன் சோத்துக்கே லாட்டரி அடிக்கான். இதில வேலை வெட்டி இல்லாமல் இந்த இந்துத்துவாதிகள் அயோத்தி கோயிலுக்கும், ராமர் பாலத்திற்கும், திருப்பதி கோயிலுக்கும், தென்காசி கோயில் நிலத்திற்காகவும் எதற்காகப் போராட்டம் நடத்துகிறார்கள்? விட்டுக்கொடுத்து வாழவேண்டியதுதானே?”

View More ஊர்வம்பு – மல மல மல மல்லே மல்லே..

ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

எல்லோரும் ஒண்ணா நிண்டு தொழலாம், சொடலை இல்லை. உம்பேரு சுலைமான். எப்படி இருக்கு என்று ஆசை காட்டுகிறார். மீன் தூண்டிலில் சிக்கிவிட்டது என்று நாணாவுக்கும் சந்தோஷம். புது கைலி, சட்டை, தொப்பி எல்லாம் வருகிறது. நூறு ரூபாய் நோட்டு ஒன்றும் அவன் கையில். நாளைக்கு குளிச்சிட்டு புது சட்டை கைலி கட்டீட்டு வந்துரு பள்ளி வாசலுக்கு என்கிறார் நாணா. ஊரில் ஒரே பரபரப்பு. சுடலை சுலைமானாகப் போகிறான் என்று.

View More ஜாகிர் ராஜாவின் ‘செம்பருத்தி பூத்த வீடு’

மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி

… ஏனெனில், உலகிலுள்ள அனைவருக்கும் பொது உரிமையான கருத்துச் சுதந்திரத்திற்கு ஆதரவாக நான் மன்றாடுகிறேன். கருத்துச் சுதந்திரத்தின் பகுத்தறிவுத் தன்மையைவிட, அது மனித இயல்பின் இதயமாக இருப்பதே எனது செயல்களுக்குக் காரணம் என்று என் மனசாட்சி சொல்லுகிறது. (”மிட்நைட் டையஸ்பரா: என்கவுண்டர்ஸ் வித் சல்மான் ருஷ்டி” புத்தகத்தில் இருந்து சில பகுதிகள்)

View More மருளர்களோடு மன்றாடுதல்: சல்மான் ருஷ்டி