Posts Tagged ‘ சூட்சும மனம் ’

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 17

August 17, 2013
By

இருட்டில் திசைகளை அறியமுடியாத பிரமை சூரியன் உதித்தவுடன் நீங்குவதுபோல, இல்லாத ஒன்றான 'நான்' என்ற அகங்காரத்தையும் 'எனது' என்ற மமகாரத்தையும், உள்ள ஒன்றேயான பிரும்ம சொரூப அனுபவத்தில் தனக்குத் தானே உதிக்கும் ஞானம் அழித்துவிடும்... வண்டினால் கொட்டப்பட்ட புழு வண்டாகவே ஆவதுபோல உனது உண்மை நிலையில் நீ இருப்பாய்... சாதாரணமாக ஒருவன் காண்பது என்றால் அங்கு காண்பவன்-காணப்படுவது-காட்சி என்ற முப்புடிகள் வருகின்றன. அது ஒருவனது ஊனக் கண்ணால் காணும் காட்சி. ஒரு யோகியானவன் எல்லாம் ஒன்றே என்று காண்பது அவனது ஞானக்கண் காட்சி. ஒரு யோகிக்கு அந்த சாதாரண ஊனக்கண் காட்சி கிடையாதா என்று கேட்டால் உண்டு... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16

August 10, 2013
By
ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 16

உள்முகப்பார்வை கொண்ட ஜீவான்மாவெனும் அரணிக் கட்டையில் இப்படியாக ஆன்மத் தியானம் என்ற உள்முகக் கடைதலை ஒருவன் இடைவிடா முயற்சியோடு எப்போதும் செய்துவர, அதிலிருந்து கிளம்பும் ஞானம் எனும் தீ அறியாமை என்ற விறகுக்கட்டைகளை எல்லாம் ஒன்றுவிடாமல் எரித்துவிடும்... ஆன்மாவானது எப்போதும் நம்மால் அடையப்பட்டதே ஆனாலும், நமது அஞ்ஞானத்தினால் நாம் அதை அடையவில்லை என்று தோன்றும். தன் கழுத்திலே இருக்கும் நகையொன்று தொலைந்து போய்விட்டதே என்று எண்ணித் தேடுபவன் அது தன் கழுத்திலேயே இருப்பதைக் கண்டது போல, அஞ்ஞானம் அழிந்தவனுக்கு ஆன்மா புதிதாக அடையப்பட்டது போலப் பிரகாசிக்கிறது... இருட்டில் இருக்கும் மரக்கட்டை ஒன்று மனிதனாகத் தோன்றுவது போல, மனப்பிராந்தியால்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 15

எப்படி ஆகாயமானது நிர்மலமாக பரந்து விரிந்து எங்கும் காணப்படுகிறதோ அதே போல எல்லாவற்றிலும் பிரகாசிக்கும் ஆன்மாவை எப்போதும் தியானம் செய்வாயாக.... உள்ள பொருளான ஆன்மாவை உணர்ந்தவனாக, தான் காணும் பொருட்களின் உருவம், நிறம் முதலாக பலவிதமான வேற்றுமைகளை முழுவதுமாக அகற்றிவிட்டு, அவைகளின் உள்ளத்தில் பரிபூரணமாய் நிறைந்து ஒளிர்கின்ற ஞானானந்தமே, தன்னுள்ளும் எப்போதும் ஒளிர்கின்றதென்று தெளிவாய்.... வேற்றுமைகள் வருவது புறநோக்கு இருக்கும்போது தான். அப்போதுதான் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் உண்டு. ஆன்மாவைப் பற்றி நாம் குறிப்பிடும்போது அங்கு ஆன்மாவைப் பார்ப்பவன் என்ற ஒரு தனியன் கிடையாது. அப்படியிருந்தால் பார்க்கும் நான், பார்க்கப்படும் ஆன்மாவாகிய நான்... [மேலும்..»]

ஆதி சங்கரரின் ஆன்ம போதம் – 12

கயிற்றை ஒருவன் பாம்பாக எண்ணுவது போல, எங்கும் பரவியுள்ள ஆன்ம வடிவான தன்னை தனித்தே விடப்பட்ட ஜீவன் என எண்ணி பயப்படுகிறான். எப்போது அவன் தான் ஜீவனல்ல, பரமாத்ம சொரூபமே என்று அறிந்து தெளிகிறானோ, அப்போதே அவன் பயம் நீங்கியவனாக ஆகிறான்.... சட்டி, பானை, குடம் போன்ற ஜடப் பொருட்கள் எங்கிருக்கின்றன என்பதைப் பார்ப்பதற்கு விளக்கு ஒன்று தேவையாவது போல, ஏக வடிவாய் இருக்கும் ஆத்மாதான் மனம், புத்தி, இந்திரியங்கள் முதலானவற்றைப் பிரகாசிக்கச் செய்யும். சுய பிரகாசமற்ற ஜடமாகிய அவைகளினால் தேஜோமயமான ஆத்மா ஒருபோதும் பிரகாசிக்கப்படுவதில்லை என்பதை உணர்ந்துகொள்... “எல்லா ஒளிகளிலும் அவற்றிற்கு ஒளியாவது நீ" என... [மேலும்..»]

அறியும் அறிவே அறிவு – 2

October 23, 2010
By

பார்ப்பவனின் மனதும் காட்சியின் ஒரு பகுதியே... உலகத்தின் இயல்பை ஆராய்வதை விட்டு, இந்த உலகத்தைக் காணும் தான் யார், தனது தன்மை என்ன, தனது எல்லா நிலைகளிலும் உலகம் இப்படித்தான் இருக்கிறதா, அல்லது உலகம் என்பது உண்மையிலேயே இருக்கிறதா என்று ஆராய்ச்சி செய்தாலாவது பயன் இருக்கும். [மேலும்..»]

Josh Oliver Authentic Jersey