Posts Tagged ‘ சூழலியல் ’

சமூகம், சூழலியல், பண்டிகைகள், பொது

தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

தீபாவளிப் பட்டாசுக்கு எதிரான பிரசாரங்கள்: ஒரு பதிலடி

பட்டாசு வெடிப்பதால் சுற்றுப்புறச் சூழல் நிச்சயம் மாசடைந்து போய்விடாது. ஊர் முழுக்க திரியும் கார்களால், லாரிகளால், குப்பைகளால் வராத மாசு, ஒரே ஒரு நாள் பட்டாசு வெடிப்பதால் வந்துவிடாது. பட்டாசு வெடிக்கவேண்டுமா வேண்டாமா என்பதை முடிவு செய்யவேண்டியது ஹிந்து மத எதிரிகள் அல்ல. ஹிந்து மதத்தின் ஆதரவாளர்களே அதை முடிவு செய்யவேண்டும்... தெருவோரத்து நாய்க்கு ஒரு பிஸ்கட்டை வாழ்நாளில் போடாத கூட்டம்தான், ஹிந்துக்கள் பட்டாசு வெடிக்கும்போது பறவைகளுக்கும் நாய்க்கும் பொங்கிக்கொண்டு வருகிறது. மாட்டுக்கறி உண்டால் மாடு செத்துப் போகும் என்பதைப் பற்றி யோசிக்காதவர்கள்தான் நாய்க்கும் பறவைக்கும் வெடிக்கு எதிராகப் பரிந்துகொண்டு வருகிறார்கள். இந்த இரட்டைத்தனமெல்லாம் இது... [மேலும்..»]

அரசியல், சினிமா

கத்தி – திரைப்பார்வை

November 18, 2014
-
கத்தி – திரைப்பார்வை

இயக்குநர் முருகதாஸ் அவர்களுக்கு, நான் தங்களின் திரைப்படங்களின் மிகப்பெரும் ரசிகன். தங்களின் உணர்வுகளையும், கோப தாபங்களையும் முழமையாக மதிக்கிறேன். அர்த்தமற்ற சினிமாத்தனமான விமர்சனங்களை முன்வைக்க நான் விரும்பவில்லை. என்னுடைய விமர்சனம் ஆழமானது... ஆச்சரியத்தையும், அதிர்ச்சியையும் தந்த முதல் விஷயம் முருகதாஸ் புதிதாக கம்யூனிஸம் பேசுகிறார்... எதற்கெடுத்தாலும் முதலாளிகளை குறைசொல்லாமல் அவற்றால் நமக்கு வரும் இலாபத்தை எண்ணிப் பார்ப்போம். மக்கள் போராட்டங்களை பெரிதுபடுத்தி அதை ஊக்கப்படுத்தாமல் அரசாங்கத்திற்கு துணை நிற்போம். இறுதியில் சென்னைக்கு செல்லும் ஏரி தண்ணீரை முடக்கும் காட்சி தவறான முன்னுதாரணமாக ஆகிவிடுமோ என்ற எண்ணம் எனக்கு இருக்கிறது...உங்கள் படத்தின் வசனத்தையே மேற்கோள் காட்டி... [மேலும்..»]

சமூகம், சூழலியல், தேசிய பிரச்சினைகள்

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

உச்சத்தில் பிங்க் புரட்சி, அழியும் ஆவினங்கள்

தற்போது சில வாரங்களாக (பி.ஜே.பி ஆட்சி அமைத்த பின்) இங்கிருந்து கடத்தப்படும் லாரிகளின் எண்ணிக்கை ஐந்து மடங்கு அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக நாட்டுப்பசுக்களின் எண்ணிக்கை மிக அதிகம். வளர்க்க விரும்புவோர் நாட்டுப்பசுக்கள் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் வெட்டுக்கு கடத்தப்படும் லாரிகளில் மட்டும் நூற்றுக்கணக்கில் நாட்டுப்பசுக்கள் செல்கின்றன. இது தமிழகத்தின் நிலை மட்டுமல்ல, கர்நாடகா உட்பட பிறமாநிலங்களில் உள்ள பசு ஆர்வலர்களும் இந்த நிலையை உறுதி செய்கிறார்கள். ஒருபக்கம் பிங்க் புரட்சி முன்னைக்காட்டிலும் வேகமாகவும், தீவிரமாகவும் அரங்கேறி வருகிறது. மறுபக்கம் இனவிருத்தி செய்யும் நாட்டு பசுக்களின் காளைகளை சில மதமாற்ற சக்திகள் கைப்பற்ற துடிக்கின்றன... பிங்க் புரட்சிக்கு பரிகாரமாக... [மேலும்..»]

இந்து மத விளக்கங்கள், கதைகள், சூழலியல், பொது

நிலமென்னும் நல்லாள்

December 17, 2013
-
நிலமென்னும் நல்லாள்

தண்டிப்பதற்காக நாணேற்றிய வில்லுடன் நின்ற ப்ருதுவைப் பார்த்து பூமி கேட்டாள் – “என்னை நீ கொன்று விட்டால், எங்கு வாழ்வார்கள் உன் மக்கள்?” ப்ருது மனம் தெளிந்தான்... சோமதேவன் கவலை கொண்டான். ஓ ப்ரசேதாக்களே, கானகத்தை அழிப்பதை நிறுத்துங்கள். மரங்கள் இல்லாமல் எப்படி உயிர் வாழ்வார்கள் உங்கள் மக்கள்? என்று வேண்டினான். அவர்களுக்குத் தங்கள் செயல் புரிந்தது. அதற்குப் பரிகாரமாக, மரங்களின் மகளான மாரீஷாவைத் திருமணம் செய்து கொண்டார்கள்... நச்சு வேதிப் பொருட்களைக் கொட்டி மண்ணை அழிக்கிறோம். விளைநிலத்தில் எரிபொருள் குழாய்களைப் பதிக்கிறோம். பொன்விளையும் பூமியைப் பெட்ரோல் கிணறுகளாக்க எண்ணுகிறோம்.... [மேலும்..»]

சமூகம், சூழலியல், தத்துவம், தொடர், வரலாறு

அதிகாரத்தின் முகமூடி

அதிகாரத்தின் முகமூடி

காந்தி தீவிர அரசியல்வாதி. அவர் ஒரு யதார்த்தவாதியும் கூட அவருடைய முக்கிய தாக்கம் கிறிஸ்தவம். அப்படி இருக்க அவரை எப்படி ஆழமான சூழலியலின் பிதாமகர் என சொல்லலாம்? அது அவருக்கு முழுக்க முழுக்க தகுதி இல்லாத ஒன்று. இப்படி காந்தியின் சூழலியல் சார்ந்த சிந்தனைகளாக முன்வைக்கப்படுபவை நிராகரிக்கப்படுகின்றன. காந்தியை குறித்து இந்துத்துவர்கள் வைக்கும் விமர்சனம் என்ன? காந்தியின் குரல் எந்த அளவு முக்கியத்துவம் கொண்டது?.... குஹா காந்தியை எத்தனை படோடபமாக முன்வைத்தாலும் அவர் உண்மையில் முன்வைப்பது நேருவைத்தான். நேரு எனும் அதிகார மைய அரசியல்வாதியின் அரசியலுக்கு குஹா அளிக்கும் ஒரு முகமூடிதான் காந்தி.... ... [மேலும்..»]

அறிவிப்புகள்

இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

இயற்கை வழி விவசாய உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா: அக்-13, கும்பகோணம்

தஞ்சை மாவட்டத்தின் இயற்கை வழி விவசாயிகள் ஒருங்கிணைந்து தாங்கள் உற்பத்தி செய்த பொருட்களை நேரடியாக விற்பனை செய்யும் முகமாக பாபா ராம்தேவ் அவர்களின் பதஞ்சலி யோக மையத்துடன் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்குகின்றனர். டாக்டர் கோ.நம்மாழ்வார் உள்ளிட்ட பல இயற்கை வேளாண் அறிஞர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொள்கின்றனர்.   இடம்:  ஜனரஞ்சனி  ஹால், கோபால் ராவ் நூலகம், காந்தி பார்க் எதிரில், கும்பகோணம்.    13 அக்டோபர் 2013 ஞாயிறு  பிற்பகல்  3.50க்கு விழா தொடங்கும்,   அனைவரும்  வருக! அழைப்பிதழ் கீழே. [மேலும்..»]

சமூகம், சூழலியல், வழிகாட்டிகள்

ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

September 30, 2013
-
ஆற்றைக் காக்க சாகும் வரை உண்ணாவிரதம் காக்கும் துறவி

ஹரித்வாரில் உள்ள சாந்தி சதன் ஆசிரமத்தில் மூன்று மாதங்களாக உண்ணா நோன்பு இருக்கிறார் அந்த 81 வயது முதிய துறவி சுவாமி ஞான ஸ்வரூப் ஸானந்த். ஒரே விஷயத்திற்காக அவர் அறிவித்திருக்கும் ஐந்தாவது கால வரையற்ற உண்ணா நோன்பு இது... கட்டுப் பாடற்ற, அசுரத் தனமான அணைத்திட்டங்களும் மின் உற்பத்தி நிலையங்களும் கங்கை நதியையும் இந்தப் பிரதேசத்தின் சூழலியலையும் முற்றிலுமாக அழித்து விடும் என்று அவர் கருதுகிறார்... சாது பழமைவாதியும் அல்ல, முன்னேற்றத்திற்கு எதிரியும் அல்ல. பூர்வாசிரமத்தில் ஜி.டி.அகர்வால் என்ற சூழலியல் பொறியாளர் (Environmental Engineer) அவர்... "2010ம் ஆண்டு எங்களது தொடர்ந்த போராட்டத்தால் மூன்று... [மேலும்..»]

கதைகள்

கரங்கள் [சிறுகதை]

கரங்கள் [சிறுகதை]

"எந்திரங்களும் மனித தன்னுணர்வும் குறித்த புரிதல் முக்கியமானது" என்றார் பண்டிட். லியோன்ஸ்கி அதை ஆமோதித்ததை பாஸு வெளிப்படையான எரிச்சலுடன் எதிர்கொண்டான். “இதற்கும் ஏதாவது வேத ஸ்லோகம் வைத்திருப்பீர்களே"... அவனது தலையிலும் நெற்றியிலும் இருந்து சென்ஸார்கள். அவற்றுடன் பல மெல்லிய பச்சையும் சிவப்புமான இழைகள் இணைந்திருந்தன. அச்சிறுவனிடமிருந்து செல்லும் சென்ஸார்களின் நீட்சிகளே அந்த இழைகள் என ஊகிக்க முடிந்தது... நல்ல காலம் சோவியத் யூனியன் இப்போது இல்லை. இல்லாவிட்டால் இந்த ஆராய்ச்சிகள் எல்லாம் பூர்ஷ்வா சதிகளல்ல என்பதை நிரூபிக்க நாங்கள் எத்தனை கட்சி கமிசார்களிடம் என்னவெல்லாம்... [மேலும்..»]

அறிவிப்புகள்

திருவாரூரில் பாரம்பரிய நெல் திருவிழா

திருவாரூரில்  பாரம்பரிய நெல் திருவிழா

மே-27, 2012 (ஞாயிறு) இயற்கை விஞ்ஞானி டாக்டர் கோ. நம்மாழ்வார் தலைமையில், மாநில அளவிலான நெல் திருவிழா, கருத்தரங்கம் மற்றுக் கண்காட்சி... பசுமைப் புரட்சியால் பெருமளவு அழிந்து விட்டாலும், சில பாரம்பரிய ரகங்கள் இயற்கை விவசாயிகளாலும், நாட்டின் தொலைதூரப் பகுதிகளிலும் இன்றும் அழியாமல் பாதுகாப்பப் பட்டு பயிரிடப் பட்டு வருகின்றன.... தமிழ்நாடு, கர்நாடகம், கேரளம், ஒரிசா, மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்கின்றனர். 63 வகையான பாரம்பரிய நெல்விதைகள் 3000 உழவர்களுக்கு வழங்கப் பட உள்ளது... அழைப்பிதழ் கீழே, அனைவரும் வருக... [மேலும்..»]

அரசியல், சமூகம், பொருளாதாரம்

புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

புதிய தேசிய நீர்க்கொள்கை – ஒரு பார்வை

குடிதண்ணீரோ, ஆற்று நீரோ, நிலத்தடி நீரோ, அதை ஒரு வரி விதிப்புக்குள்ளாகும் பொருளாக மட்டுமே பார்க்க வேண்டும் என்கிறது மத்திய அரசு... நீரை "வீணாக்கும்" விவசாயிக்கு அதிக வரியும், குறைவான நீரை உபயோகிக்கும் டாஸ்மாக் தரகருக்கும் சேல்ஸ்மேனுக்கும் குறைவான வரியும் விதிக்கப்பட வேண்டும் - இது காங்கிரஸ் நியாயம்... ஐ. நா வில், குடிக்கும் தண்ணீரை மானுடத்தின் அடிப்படை உரிமையாக்க கூடாது என்று தீர்மானம் கொண்டு வந்தன அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள். அவற்றுக்கு இணையாக, நதிகளைத் தாயாகவும் கடவுளாகவும் வழிபடும் பாரதப் பண்பாட்டில் வந்த நீங்கள் செயல்படலாமா மன் மோகன் சிங் அவர்களே?.... [மேலும்..»]