
பாக்கிஸ்தானிலே அகமதியாக்கள் எனப்படும் ஒரு பிரிவினர் சட்டப்படி அவர்களை முஸ்லீம்கள் என சொல்லிக்கொள்ள முடியாது. சொன்னால் சிறைத்தண்டனையிலே இருந்து தூக்கு வரை உண்டு… பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டத்திலேயே முஸ்லீம்கள் மட்டும் தான் பிரதமர், ஜனாதிபதி, ராணுவ தளபதி போன்ற பதவிகளுக்கு வரமுடியும் என இருக்கிறது. பாக்கிஸ்தான் அரசியலமைப்பு சட்டம், குற்றவியல் சட்டம் என எல்லாவற்றிலும் முஸ்லீம் சட்டங்களை பின்பற்றியே இருக்கிறது. ஹுடூட் சட்டம் என முஸ்லீம் மத சட்டத்தை முழுமையாக பின்பற்ற வழிசெய்யும் சட்டம் தனியே உண்டு… விபத்திலே இந்துக்களோ சீக்கியர்களோ கிறிஸ்துவர்களோ இறந்தால் சவப்பெட்டியை தனியே வைத்து காபிர் என அடையாளமிடுவது தான் பாக்கிஸ்தானிய வழக்கம். எல்லா கட்சிகளுமே தீவிரவாத கட்சிகளாக மதவாத அமைப்புகளாக இருக்கும்போது எதற்கு தனியே தீவிரவாத கட்சிகள் தேவைப்படும்?…