Posts Tagged ‘ சென்னா ரெட்டி ’

ஜெயிக்கப் பிறந்தவர்!

December 11, 2016
By

ஜெயலலிதா ஒரு பெண்; வெளிப்பார்வைக்கு இறுகிய தலைவியாகக் காணப்பட்டாலும், இளகிய மனம் கொண்ட பெண். எனவே பணிந்தவர்களை அவர் மன்னித்தார். ஆண்களின் கொடுமையை உணர்ந்த பெண் என்பதால், அவர்களின் சரணாகதியை தனது அரசியல் அதிகாரத்தின் அடையாளமாக்கினார். அது ஒரு வகையில் ஆண்களிடம் வெறுப்புணர்வையும் பெண்களிடத்தில் பெருமிதத்தையும் ஏற்படுத்தியது. ஜெ.யின் வெற்றிக்கு பெண்களின் அமோக ஆதரவு அடிப்படையானதாக இருந்ததை இந்தக் கண்ணோட்டத்தில்தான் காண வேண்டும். அந்தக் காலகட்டத்தில்தான் அவர் அன்பு சகோதரி என்ற நிலையிலிருந்து அம்மாவாக உயர்ந்தார்; உயர்த்தப்பட்டார். மழலைப் பருவத்தில் அன்புக்கு ஏங்கிய சிறுமியாகவும், குமரிப் பருவத்தில் ஆணாதிக்கத் திரையுலகில் அலைக்கழிந்த நடிகையாகவும், அரசியலின் நாற்றங்கால் பருவத்தில்... [மேலும்..»]

விவாத களத்தில் கவர்னர் பதவி

விவாத களத்தில் கவர்னர் பதவி

சில மாநில ஆளுநர்கள் மத்திய அரசால் மாற்றப்படலாம்; அந்த இடங்களில் பாஜக மூத்த தலைவர்கள் நியமிக்கப்படலாம் என்ற ஹேஸ்யங்கள் ஊடகங்களில் உலவிவரும் சூழலில்,  அதுகுறித்து விவாதத்தைத் துவக்குகிறார் இக்கட்டுரை ஆசிரியர். . இந்திய அரசியல் சட்டத்தில் ஒவ்வொரு மாநிலத்துக்கும் மத்திய அரசின் சிபாரிசின் பேரில் குடியரசுத் தலைவர் கவர்னர்களை நியமிக்கிறார். மத்திய அமைச்சரவை பரிந்துரை செய்யும் நபரே கவர்னர்களாக நியமிக்கப்படுகிறார்கள். பொதுவாக கவர்னர் என்பார் சமூகத்தில் கெளரவமான அந்தஸ்து உடையவராகவும், அரசியல் அறிவும் அனுபவமும் பெற்றவராகவும், ஏதாவது ஒரு துறையில் தலைசிறந்த நிபுணத்துவம் உடையவராகவும், பாரபட்சமின்றி மாநில அரசு நிர்வாகம் செயல்படுவதைக் கண்காணித்து மத்திய அரசுக்கும், மாநில... [மேலும்..»]