சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..

சந்திரயான்-3 மென்மையான தரையிறக்கம் (ஃசாப்ட் லேண்டிங்) செய்யும் அந்த தருணத்தை நேற்று இந்தியா முழுவதும் பார்த்து பரவசப் பட்டார்கள். இதுவே ஒரு சாதனையாக சொல்லலாம்.. சில அடிப்படையைப் புரிந்துகொண்டால் சந்திரயானை நன்கு அனுபவிக்கலாம். இந்தக் கட்டுரையின் நோக்கமும் அதுவே… மேலே செல்லும்போது, அதன் உள் இருக்கும் எரிபொருள் குறைவாகி, புவி ஈர்ப்பு மாறும். அப்போது அதன் வலிமையைச் சரியாகக் கணக்கிட்டு அதைக் கீழே இருந்து சரி செய்ய ஆணை பிறப்பிக்க வேண்டும்… கவருக்குள் இருக்கும் இன்னொரு முதல் கவருக்கு பேலோட் அதற்குள் இருக்கும் இன்னொரு கவர் அதற்கு பேலோட்…. இப்படி. சந்திரயான்விலும் இப்படித்தான் பல பேலோட் இருக்கிறது… நாம் வெள்ளையரைப் பார்த்தால் நம்மைவிட அவர்கள் ஒரு படி மேலே என்ற மனப்பான்மை நம்மையும் அறியாமல் நம்மிடம் இருக்கும். கடந்த சில வருடங்களாக நம் பாரதப் பிரதமர் மோடியின் ஆட்சியில் அந்த மனப்பான்மை படிப்படியாகக் குறைந்து வருகிறது. நேற்று நிலவை மென்மையாக முத்தமிட்ட போது அந்த மனப்பான்மை முழுவதும் மறைந்து ’மதி நிறைந்த நன்னாளானது’….

View More சந்திரயான் – கோல் முதல் கோள் வரை..

ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

பாரதம் செவ்வாய்க்கு முதல்தடவையே கோள் மங்கல்யானை அனுப்பி வெற்றிகண்டிருக்கிறது; விண்ணில் பறந்துசெல்லும் செயற்கைக்கோளை மிஷன் சக்தி ஏவுகணைமூலம் தாக்கியழித்திருக்கிறது; கண்டம்விட்டுக் கண்டம்தாவும் ராக்கெட்டுகளை வெற்றிகரமாகச் செலுத்தியிருக்கிறது; அணுகுண்டுத் தயாரிப்பிலும் தன்னிறைவு பெற்றிருக்கிறது. ஆகவே, பாரத்த்தின் விஞ்ஞானிகள், தொழில்நுட்ப வல்லுனர்கள் திறமையில், ஆய்வுத் திறனில் உலக வல்லரசுகளுக்குச் சளைத்தவர் அல்லர் என்று கண்கூடாகத் தெரிகிறது.

View More ராஃபேல் போர்விமானமும், பாரதப் படைத்தலைமையும்.. – 7

செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்

மங்கள்யான் விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப் பட்டது என்பது இந்திய மக்களிடம் மட்டும் இன்றி உலக அளவிலும் இந்தியாவை இனி நிமிர்ந்து பார்க்க வைத்துள்ள ஒரு நிகழ்வு. குறைந்த காலத்திற்குள் வெகு குறைவான நிதியில் இந்தியா இதைச் சாதித்துள்ளது. இது சாதாரண சாதனை அல்ல… இந்தியாவில் கக்கூஸ் இல்லை, பள்ளிக் கூடம் இல்லை, குடிநீர் இல்லை, இந்த லட்சணத்தில் செவ்வாய்க் கிரகத்திற்கு கோள் அனுப்புவது தேவையா என்றெல்லாம் இடது சாரிகளும் ஞாநி சங்கரன் போன்ற அணு சக்தி விஞ்ஞானிகளும் ஒப்பாரி வைக்க ஆரம்பித்து விட்டார்கள். இந்தியா அறிவியல் ஆராய்ச்சிகளில் செய்யும் சொற்ப முதலீட்டைக் கூட அவதூறு செய்யும் இந்த புரட்சிகளின் பிரச்சினைதான் என்ன? இந்த நிர்மூடர்களின் கேள்விகளுக்கான எனது எளிய பதில்கள்…. என் அப்பா தான் குடியிருக்க வீடு வாங்கிய பின்னர்தான், தனக்கு ஒரு ஸ்கூட்டர் வாங்கிய பின்னர் தான், என் அம்மாவுக்கு நகைகள் வாங்கிய பின்னர் தான், எங்களுக்கு எல்லாம் நல்ல துணிமணிகள் வாங்கிக் கொடுத்த பின்னர்தான், எங்களைப் படிக்க வைக்க வேண்டும் என்று நினைத்ததில்லை. அப்படித் தள்ளிப் போடவும் முடியாது. இதைத்தான் ஒரு அரசாங்கமும் செய்யும்….

View More செவ்வாய் செயற்கைக் கோளும் கழிப்பிடங்களும்