Posts Tagged ‘ சேவை மனப்பான்மை ’

அஞ்சலி: பி.ஆர்.ஹரன்

July 7, 2018
By

தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம்... [மேலும்..»]

சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14 வரை நடைபெறுகிறது.  இருநூறுக்கும் அதிகமான பல்வேறு  வகைப்பட்ட இந்து  அமைப்புகள் பங்கு பெறுகின்றன.  தமிழ்ஹிந்து இணையதளமும் ஒரு அரங்கு அமைத்துள்ளது. கண்காட்சி நேரம்: காலை 9.30 முதல் இரவு 8 மணி வரை. இடம்:  ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவப் பல்கலைக் கழக மைதானம்,  திருவான்மியூர். அனைவரும் வருக! ஆதரவு தருக! அழைப்பிதழ் கீழே.     [மேலும்..»]

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே... [மேலும்..»]

திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [மேலும்..»]