அஞ்சலி: பி.ஆர்.ஹரன்

தன்னலம் என்பதைச் சிறிதும் கருதாது இந்து ஒற்றுமைக்கும், இந்து விழிப்புணர்வுக்கும் அயராது உழைத்த ஒரு மகத்தான கர்மயோகியைத் தமிழ்நாட்டு இந்துக்கள் இழந்து நிற்கின்றனர். தனது எழுத்துக்களுக்காக ஹரன் ஒருபோதும் சொந்தம் கொண்டாடியதோ அல்லது அதை ஏதோ பெரிய விஷயமாக நினைத்ததோ இல்லை. தர்மத்தைக் காப்பதும் இந்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதுமான புனித வேள்வியில் தான் சமர்ப்பிக்கும் ஆகுதிகளாகவே அவற்றை அவர் எண்ணினார். எழுத்துக்களுடன் கூட, செயல்வீரராகவும் களப்பணியாளராகவும் அவரது பங்களிப்புகள் சிறப்பானவை. பசுக்கள் பாதுகாப்பு, அராஜகமாக கால்நடைகளைக் கடத்துவதற்கு எதிரான போராட்டம் ஆகியவற்றில் அவர் ஆத்மார்த்தமாக ஈடுபட்டார். துணிச்சலுடன் கடத்தல் சம்பவங்களை ஆவணப்படுத்துவது, காவல் துறையினரிடம் புகார் கொடுத்து பசுக்களை மீட்பது ஆகியவற்றிலும் பெரும் முனைப்புடன் செயல்பட்டு வந்தார்… பாரதம் முழுவதும் பல புனிதத் தலங்களுக்கு யாத்திரை செய்வதும், சாதுக்களையும் மகான்களையும் சந்திப்பதும் அவரது மனத்திற்குப் பிடித்த விஷயங்கள்…

View More அஞ்சலி: பி.ஆர்.ஹரன்

சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

சென்னையில் ஹிந்து ஆன்மீக மற்றும் சேவைக் கண்காட்சி: ஜூலை 8 முதல் 14…

View More சென்னையில் ஹிந்து ஆன்மீக, சேவைக் கண்காட்சி: ஜூலை 8-14

ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

நூற்றுக் கணக்கான பல்வேறு வகைப்பட்ட ஹிந்து சமய, சமூக, ஆன்மீக அமைப்புகள் பங்கு பெறுகின்றன. டி.ஜி. வைஷ்ணவ கல்லூரி வளாகம், அரும்பாக்கம் சென்னை. ஜனவரி 25 முதல் 29ம் தேதி வரை. கண்காட்சி நேரம்: காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை. வாருங்கள்! ஹிந்து அமைப்புகள் ஆற்றும் அளப்பரிய சேவைப் பணிகள் பற்றி அறிந்து கொள்ளுங்கள். அனுமதி இலவசம். அழைப்பிதழ் கீழே…

View More ஜனவரி 25-29: சென்னையில் மாபெரும் ஹிந்து சேவைக் கண்காட்சி !

திருப்பூரில் பாரதியார் குருகுலம்

திருப்பூரில் இயங்கி வரும் பாரதியார் குருகுலம் பல்வேறு சேவைப்பணிகளில் ஈடுபட்டு வருகிறது . இங்கு ஆதரவற்ற குழந்தைகள் தங்கிப்படிக்கும் உறைவிடமும்; வயதான பசுக்களைப் பாதுகாக்கும் பசுமடமும் ; திருப்பூர் நகரில் இலவச டியூஷன் சென்டர்களும் இயங்கி வருகிறது. [..]

View More திருப்பூரில் பாரதியார் குருகுலம்