சங்க இலக்கியமும் சைவர்களும் – 2

சங்க இலக்கியங்களில் உலகு ,உயிர், வினை, ஊழ் , இறை முதலிய தத்துவப் பொருள்களின் சிந்தனை வளர்ச்சியே சைவ சித்தாந்தம் என மேம்போக்காகப் படிப்பவர்க்கும் விளங்கும்.. எல்லாப்பிறப்பும் என்றது எண்பத்து நான்கு இலட்சம் யோனி பேதங்களில் உள்ள ஒவ்வொரு யோனியின் எண்ணற்ற பிரிவுகளிலும். ஆதலின், அதனை யுணர்ந்த அடிகள் “பிறந்திளைத்தேன்” என்றார். அடிகள் வருந்துதற்குக் காரணமான இந்த எண்பத்து நான்குநூறாயிரம் யோனி பேதப் பிறப்பும் அவற்றின் பிரிவுகளும் ஓரிடத்தில் ஒருகாலத்தில் ஒருபருவத்தில் தோன்றுவன அல்ல. ஆகவே, நித்தமாய் என்ணிக்கையற்றவையாய் உள்ள உயிர்களில் ஒன்று எண்ணற்ற பிறவி எடுக்கும்போது ஏதோ ஒரு பிறவியில் உலகின் ஏதோ ஒரு இடத்தில் மற்றொரு உயிருடன் ஏதோ ஒருவகையில் உறவு உடையதாகும்… புறநானூற்றில், புலனழுக்கற்ற அந்தணாளன் கபிலர், நக்கீரர், பரணர், நல்லுருத்திரனார், நல்லந்துவனார் போன்றோர்களின் பாடல்களோடு, சிற்றினம் என ஆன்றோரால் கடியப்பட்டார் சூழலில் அவரோடுகூடி மதுவும் புலாலும் வுண்டு மங்கையருடன் களித்திருக்கும் புரவலர்களைப் போற்றிப் புகழும் பாடல்களும் உள்ளன. ஊரெரியூட்டுதலையும் உயிர்க்கொலையையும், பெண்களின் கண்ணீர்க்கம்பலையையும் வீரம் எனும் பெயரால் நியாயப்படுத்தலை ஆன்மநேயத்தை மக்களிடையே பரப்ப விரும்பும் துறவிகள் எங்ஙனம் ஏற்றுக் கொள்ள முடியும்? சைவப் புலவர்கள் சங்க இலக்கியங்களில் உகந்தனவற்றை ஏற்றுப் போற்றியே வந்துள்ளனர்…

View More சங்க இலக்கியமும் சைவர்களும் – 2

சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1

சங்க இலக்கியத்தைப் பேசவந்த எழுத்தாளர் சைவத்தையும் சாடியுள்ளார். ஒரு பயிலரங்கில், ‘ சைவ சமயவாதிகள் இலக்கியத்திற்கு எதிராக இருந்ததால் தான் அவ்விலக்கியங்கள் மக்களிடம் பரவவில்லை’ என்று ஒரு பேராசிரியர் உரத்துப் பேசினார். இக்கருத்து எந்த அளவுக்கு உண்மை எனத் தமிழறிஞர்கள் சிந்திக்க வேண்டும். முழுமுதற்கடவுளாம் சிவபரம்பொருளைச் சங்கப்புலவர்கள் அருந்தவத்தோன், ஆதிரைமுதல்வன், ஆலமர்செல்வன், ஆனேற்றுக் கொடியோன், கொன்றையங்கலந் தெரியலான், பைங்கட்பார்ப்பான், மணிமிடற்றந்தணன், முக்கட்செல்வன் என்று சைவர்கள் இறும்பூது கொள்ளும் அளவிற்குப் பல்வேறு சிறப்புப் பெயர்களாற் புகழ்ந்து கூறினர். இப்பெயர்களெல்லாம் சிவபரத்துவத்தை விளக்கும் காரணப் பெயர்களாம்… திருஞானசம்பந்தப் பிள்ளையார் முதலிய திருமுறையாசிரியர்கள் பலரும் சங்கத்தையும் சங்க இலக்கியங்களையும் அறிந்தேயிருந்தனர் என்பதற்கு அவர்தம் அருளிச் செயல்களிலிருந்து சான்றுகள் கிடைக்கின்றன. பத்தி இலக்கியங்கள், குறிப்பாகத் திருமுறைகள் உயர்மக்களுக்கு ஆகா என விலக்கப்பட்ட கைக்கிளை பெருந்திணைகளை பத்தியுணர்வின் பெருக்கினைப் புலப்படுத்தும் உத்திகளாக மாற்றிக் கொண்டன. உயர்குடி மக்களுக்கு ஆகா எனத் தொல்காப்பியமும் சங்க இலக்கியங்களும் ஒதுக்கிய இத்திணைகளுக்குத் திருமுறைகள் உயர்நிலை யளித்துத் தழுவிக்கொண்டன…

View More சங்க இலக்கியமும்  சைவர்களும் – 1

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்… ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்… சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே அறியலாம். ஒரு சில ஆகமங்கள் தவிர இன்னும் பல அச்சேறவில்லை. அச்சேறிய ஆகம நூல்களிலும் இருக்கிற பாடபேதம், பிற்சேர்க்கை, விளக்க குறைவு, பொருந்தாத சொற்கள் என்று நீண்ட ஆய்வுகள் நடந்ததாக அறிய முடியவில்லை…

View More தவ முனிவனின் தமிழாகமம்

சைவசித்தாந்தத்துக்கு வித்து

‘அபேதம்’ என்பதற்கு மாற்றாகச் சைவசித்தாந்தம் ‘ஒன்றாயிருத்தல்’ என்று கூறும். கலப்பினால் ஒன்றாயிருத்தல். மெய்கண்டார் ஒன்றாயிருத்தலுக்குக் கூறும் எடுத்துக்காட்டு, ‘உடலுயிர்’ என்பதாம். ஒருவன் என் பெயரைச் சொல்லி அழைக்கிறான். நான் அவன் அழைப்பை ஏற்றுப் பதில் கூறுகிறேன். அந்தப் பெயர் உடலுக்கு உரியதா? உயிருக்கு உரியதா? இரண்டும் இல்லை. ஆனால் உடலும் உயிரும் கலந்து ஒன்றாக இருக்கும் அந்த நிலைக்கு உரியது. உயிரின் கலப்பு இல்லையேல் உடல் இல்லை; உடல் அழியும். அதுபோல, சிவமாகிய முதல்வன், உலகு உயிர்களுடன் கலப்பினால் ஒன்றாக இராதபோனால் அவற்றிற்கு இருப்பு (existence) இல்லை…. மெய்கண்டார் அகரமும் ஏனைய எழுத்துக்களும் போல வேறாய் என்றார். அகரவுயிரின்றேல் ஏனைய எழுத்துக்கள் இல்லை. ஆயினும் அகரம் வேறு; ஏனைய எழுத்துக்கள் வேறு…

View More சைவசித்தாந்தத்துக்கு வித்து

பேயம்மை

தமிழில் பேய் என்ற சொல் முற்றிலும் தீய பொருளைக் கொண்டிருக்கவில்லை. பேய் என்பது உடல் கடந்த ஒரு நிலை.. தொங்கிய முலைகளும், குழி வயிறும், சிவந்த சடை மயிரும் கொண்ட பெண் பேய் இங்கு ஓர் பித்து நிலையின் குறியீடாக வருகிறது. உலகின் முட்டாள் தனங்களை எல்லாம் பார்த்து சிரித்து, உன்மத்தம் கொண்டு ஆடும் பித்து… அவள் உலகெங்கும் கல்வியின் ஒளியை எடுத்துச் செல்வாள். பார்த்தன் வில்லேந்தி அக்கிரமக் காரர்களை ஒழித்தது போல, அநீதியைக் கண்டு சீறி அநியாயம் செய்பவர்களை ஒழிப்பாள். ஆம், சத்தியத்தின் மீது, நீதியின் மீது, கல்வியின் மீது, போர்க் குணத்தின் மீது வெறி கொண்டவள். அந்தத் தாயின் சன்னதம்…

View More பேயம்மை

சைவத்திருமுறைகள் தொடரட்டும்…

இன்று எமக்குக் கிடைத்துள்ள அரும்பெருm சொத்தான சைவத் திருமுறைகள் பன்னிரெண்டும் ஒரே நேரத்தில் தொகுக்கப் படவில்லை என்பது தெளிவு… பதின்மூன்றாம் நூற்றாண்டுடன் முற்றுப்பெற்ற திருமுறைத் தொகுப்பை ஏன் தொடரக் கூடாது? இடையில் இருக்கிற எழுநூறாண்டுகளில் எத்தனையோ, சைவத்திருநூல்கள் மலர்ந்துள்ளன. அவற்றில் தகுதி கண்டு ஏன் திருமுறைகளாக இணைத்து வகுத்தலாகா? என்பதே இன்றுள்ள வினா. இத்திருமுறைத் தொகுப்பு காலத்தின் தேவையாக, சிவப்பணியாக மேன்மேலும் சிறப்புறுமா என்று சிந்திக்க வேண்டியிருக்கிறது… சைவத்தில் புரட்சிக்கும் புரட்சியாளர்களுக்கும் குறைவே இருக்கவில்லை. சேக்கிழார் அவ்வாறான ஒருவரே….

View More சைவத்திருமுறைகள் தொடரட்டும்…

அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

நாகப்பட்டிணம் மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள திருவாவடுதுறை ஆதினம் 23வது பட்டம் குருமகாசந்நிதானம்…

View More அஞ்சலி: திருவாவடுதுறை ஆதீனம்

பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை

சிவபெருமானின் இரு புதல்வர்களாகச் சிறப்பிக்கப்படுபவர்கள் விநாயகரும் முருகனும், இதில் முருகன் விஷ்ணு வடிவினராகக் கொண்டால், விநாயகர் பிரம்மாவின் வடிவம். விநாயகப்பெருமான் நரசிம்மப்பெருமானைப் போல, தேவ மனித பூத மிருக சகல ஜீவ இணைப்பை தனது திருவுடலில் காண்பிக்கும் அழகுடையவர் [..] எப்போதும் தீமைக்கு எதிராகப் போராடுகிற கடவுள். நடனம் கூட ஆடவல்லவர். இந்தக் கடவுளை பெருந்தீனி உண்பவர் என்றும் சோம்பலானவர் என்றும் நினைப்பதே பெரிய தவறு..[..]

View More பிள்ளையார் வணக்கம் ஒரு பார்வை