Posts Tagged ‘ சைவாகமம் ’

தவ முனிவனின் தமிழாகமம்

திருமுறைகள் இருக்கு முதலிய வேதங்களை பெயர் சுட்டிக் குறிப்பிடுவதும் அவை விதித்த கருமங்களை செய்யுமாறு பணிப்பதும் பல இடங்களில் காணலாம். சைவத்தின் சிறப்பு நூலான ஆகமங்களின் கருத்துக்கள் பலவற்றை திருமூலர் பெருமான் அருளிய திருமந்திரத்தில் பரக்கக் காணலாம்... ககாராதி ஐந்தும், அகாராதி ஆறும், சகாராதி நான்கும் என்றெல்லாம் இந்தப் பாடலில் உள்ளது. இப்படி எல்லாம் தமிழ் நெடுங்கணக்கில் எழுத்துக்கள் உள்ளனவா.? இல்லை. இது பிரசித்தி பெற்ற பஞ்சதசாக்ஷரி என்ற ஸ்ரீ வித்யா உபாசனையின் மஹாமந்திரமே ஆகும்... சிவாகம ஆய்வுகள் மேம்படுத்தப்பட வேண்டும். ஆகமங்கள் குறித்து நடைபெற்று வரும் ஆய்வுகள் போதுமானதாக இல்லை என்றே... [மேலும்..»]

வீரத்தின் வித்தான வீரபத்திரர் வழிபாடு

முகலாயப் படையெடுப்பாளர் கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் புகுந்தார்களாம். அங்கே தூணில் அமைந்திருக்கிற அஷ்புஜ அக்னி அகோர வீரபத்திரரின் வனப்பையும் நேர்த்தியான வேலைப்பாட்டையும் கண்டு... கர்நாடக நாட்டுப்புறவியலில் “வீரகசே” என்ற கூத்து மரபு உண்டு.. இலங்கையில் யாழ்ப்பாணத்து கட்டுவன் பகுதியில் வீரபத்திரக் கூத்து அப்பகுதியில் வதியும் தாழ்த்தப்பட்ட சமூகத்தினரால் ஆடப்பட்டு... குளிர்ச்சியான இடத்தில் மட்டுமே வசிக்கும் தேள்கள் இவருக்கு மாலையாகின்றன. சிலந்திப்பூச்சி இவருடலில் விளையாடி மகிழ்கிறது... [மேலும்..»]

மகத்துவம் மிக்க மஹாகும்பாபிஷேகம்

ஸ்வாமி ஸ்திரமாக பாலாலயத்தில் இருக்காமல் விரைவில் பணிகள் நடந்து கருவறையிலே எழுந்தருள வேண்டும் என்பதற்காக பாலஸ்தாபனக் கும்பாபிஷேகத்தை ஸரராசியிலே, தேய்பிறையிலே செய்கிற வழக்கம் இலங்கையில் உள்ளது... காப்பணிந்து கொண்ட குருமார்கள் கோயிற் சூழலை விட்டு காப்புக் கழற்றும் வரை செல்லலாகாது. சவரம் செய்தலாகாது. அதே வேளை அவர்களின் உறவுகளுக்குள் ஏற்படும் ஜனன மரண ஆசௌசமும் அவர்களை இக்காலத்தில் தாக்காது... ஆனால் அதியுன்னதமான இக்கிரியைகளைப் படம் பிடிப்பதை அனுமதிக்கக் கூடாது என்பதில் மாறுபாடான கருத்தில்லை. [மேலும்..»]