Posts Tagged ‘ சொத்துக் குவிப்பு வழக்கு ’

தீர்ப்புகள் திருத்தப்படலாம்!

‘ஆயிரம் குற்றவாளிகள் தப்பிவிடலாம்; ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டுவிடக் கூடாது’ என்பதே நமது நீதி பரிபாலனத்தின் ஆதார அம்சம். அதற்காகவே நீதித் துறையில் பல அடுக்குகளாக நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கீழமை நீதிமன்றத்தில் அளிக்கப்பட்ட தீர்ப்புக்கு எதிரானதாக மேல் நீதிமன்றங்களின் தீர்ப்புகள் அமைவது ஒன்றும் புதிதல்ல. அதற்காகத் தான் மேல்முறையீடு என்ற நடைமுறையே உருவாக்கப்பட்டுள்ளது. இந்த வாய்ப்பையே ஜெயலலிதா தரப்பு தனக்கு பயன்படுத்திக் கொண்டுள்ளது. இனி மேல்முறையீடு செய்ய வேண்டியது கர்நாடக அரசுத் தரப்பின் பொறுப்பு. [மேலும்..»]

வேரை அரிக்கும் கரையான்கள்

வேரை அரிக்கும் கரையான்கள்

ஒருவழியாக 16வது லோக்சபா தேர்தலின் 6வது கட்டம் தமிழகத்தில் ஏப்ரல் 24-ல் முடிவடைந்துவிட்டது. மாநிலம் முழுவதும் 39 தொகுதிகளிலும் சராசரியாக 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருக்கின்றன; புதுவை தொகுதியில் 82 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளன. 1967-க்குப் பிறகு, அதிகபட்ச வாக்குப்பதிவு நடந்திருப்பதாக தேர்தல் ஆணைய புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. ஆயினும் நூறு சதவிகித வாக்குப்பதிவு இன்னமும் நிறைவேறாத கனவாகவே இருக்கிறது. குறிப்பாக தலைநகர் சென்னையில் உள்ள தொகுதிகளில் பதிவாகியுள்ள குறைந்தபட்ச வாக்குப்பதிவு ஏமாற்றம் அளிக்கிறது. பெரிய அளவிலான எந்த அசம்பாவிதமும் இன்றி தமிழகத்தில் தேர்தல் முடிந்துவிட்டாலும், இத்தேர்தலில் திணிக்கப்பட்டுள்ள பணப்பட்டுவாடா கலாச்சாரம், மிகுந்த அதிர்ச்சியையும் ஆயாசத்தையும் அளிக்கிறது.... [மேலும்..»]