
“மோதியை எப்படி வேண்டுமானாலும் எதிர்த்துக் கொள்ளுங்கள். ஆனால் எனது சாதியை வைத்து, கீழ் சாதிகளில் பிறக்க நேர்ந்து விட்ட மக்களை (நீசீ ஜாதி மே பைதா ஹுயே லோக்) அவமதிக்காதீர்கள்” என்று மோதி பதிலடி கொடுத்தார்.. பிரியங்கா நேரடியாக சாதியைக் குறிப்பிட்டு எதுவும் சொல்லாத போது, மோதி வலிந்து இதில் சாதியை நுழைக்கிறார் என்பது தான் எனது தனிப்பட்ட அபிப்பிராயம்.. “நீச்” என்ற சொல் உடனடியாக ஹிந்தி பேசும் பாமர ஜனங்களிடம் ஏற்படுத்தும் உணர்வு எப்படிப் பட்டது என்பதை மேல்தட்டுகளிலேயே புழங்கிய பிரியங்கா அறிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், மக்களோடு மக்களாக புழங்கிய மோதி உடனடியாக அறிந்து கொண்டு, தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டார்…