Posts Tagged ‘ சோழர்கள் ’

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 3

குலசேகர பாண்டியனுக்கு எதிரான வெற்றிகள் அனைத்திற்கும் சிங்கள தளபதிகளே காரணமாக இருந்தார்கள். இருப்பினும் பாண்டிய அரியணை ஏற்றப்பட்ட வீரபாண்டியன் தனது ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்ளவும், பாண்டிய பிராந்தியங்களின் மீது அதிகாரம் செலுத்தவும் முடியாதவனாக இருந்தான். குலசேகர பாண்டியன் தனது உறவினர்களான இரண்டு கொங்கர்களின் உதவியைப் பெற்றதாக மஹாவம்சமே கூறுகிறது.... [மேலும்..»]

தமிழகத்தின் மீதான சிங்களப் படையெடுப்பு – 2

வெற்றி பெற்ற சிங்களப்படை பின்னர் மதுரையை நோக்கிச் சென்று அதனைக் கைப்பற்றுகிறது. கொலையுண்ட வீரபாண்டியனின் மகனை பாண்டிய நாட்டுக்கு பொறுப்பாளனாக்குகிறது சிங்களப்படை. அதனைத் தொடர்ந்து, குலசேகர பாண்டியனுக்கு உதவிகள் செய்த பாண்டிய நாட்டுத் தலைவர்கள் சிங்களப்படைகளுக்கு அடிபணிகிறார்கள்.. லங்கபுரவின் மாபெரும் வெற்றியைக் கவுரவிக்கும் பொருட்டு பராக்கிரமபாகுவே நேரில் வந்து அவரை வரவேற்கிறான். இப்படியாக இலைங்கைப் போர் வெற்றிகரமாக முடிந்ததாகக் கூறுகிறது இலங்கை மஹாவம்ச வரலாறு. எனினும், இந்த வரலாறு முழுமையான ஒன்றல்ல. இலங்கையரின் நோக்கில் எழுதப்பட்ட ஒருதலைப்பட்சமான இந்த வரலாறு ஒரு பெரும் காதையைப் போல எழுதப்பட்ட ஒன்று. அதனைக் குறித்து தொடர்ந்து காண்போம்....... [மேலும்..»]

மேட்டு மருதூர்: காணச் சகியாத நிலையில் சோழர் கலைக்கோயில்

October 21, 2014
By

அது போன்ற ஒரு கோயிலை நான் இதுவரை பார்த்ததில்லை. 10 அடி கருங்கல் அடித்தளத்திற்கு மேலே சுமார் 20 அடி உயர செங்கல் விமானம் விண்ணை முட்டிக்கொண்டு நின்றுகொண்டிருந்தது. அந்த அற்புததை தேடி அருகே ஓடினோம், மக்கள் அந்த இடத்தை கழிப்பிடமாக பயன்படுத்துவதால் கால் கூட வைக்க முடியவில்லை! இது என்ன இறைவா உனக்கு வந்த சோதனை... வாசலில் இருந்த நிலைக்காளில் கல்வெட்டுகள் தெரிந்தது, தூசு தட்டிப் பார்த்தேன். "சாலைக்கல மறுத்த கோவி ராஜராஜ சேகரி ". அடடா ராஜராஜனின் கல்வெட்டு! தஞ்சை கோயிலை எழுப்பிய ராஜ ராஜனின் 11 ஆம் ஆண்டில் இந்த கோயில் எழுப்பட்டிருக்க... [மேலும்..»]

பாரத தரிசனம் : நெடும் பயண அனுபவம் – 2

ஒரு கட்டத்தில் அனைத்து ஆண்களும் களத்தில் மாண்டு விட பெண்கள் ஆயுதமேந்தி போராட வருகிறார்கள். மனம் வெதும்பும் அசோகன் போரை கைவிடும் முடிவை எடுக்கிறான் . இவை எல்லாம் மிக நேர்த்தியான புடைப்புச் சிற்பங்களாக செதுக்கப் பட்டுள்ளது... இஸ்லாமிய படையெடுப்பில் கலிங்கத்தின் தொன்ம அடையாளங்கள், முக்கியமான வரலாற்று ஆவணங்கள், குறிப்புகள் அனைத்தும் அழித்து ஒழிக்கப்பட்டு இருந்திருக்கிறது... இஸ்லாமிய படைத்தலைவர்கள் ஊர்களை எரியூட்டி அழித்தும், ஏராளமான பெண்களை கற்பழித்தும் , நகரங்களை நாசம் செய்தும், தீ வைத்தும் இருக்கிறார்கள். பொய்யை மட்டுமே சொல்வதற்காக பிறப்பெடுத்திருக்கும், இடது சாரி வரலாற்று ஆய்வாளர்கள் இவைகளை எல்லாம் சொல்வதற்கு வசதியாக மறந்து... [மேலும்..»]