பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

கோலி என்னும் தாழ்த்தப்பட்ட வகுப்பை சேர்ந்த கோவிந்த் அதை ஒரு பொருட்டாக எண்ணாமல் உழைத்தவர் இன்று நாட்டின் உயர்ந்த பதவியை அலங்கரிக்க இருக்கிறார். இந்திய குடிமை பணியில் வெற்றி பெற்றவர் தான் விரும்பிய துறை கிடைக்காததால் சட்டம் படித்து வழக்கறிஞர் ஆனவர். அரசியல் சாசன சட்டத்தில் மிக தேர்ச்சி உள்ளவர் என்று சொல்லப்படுகிறது அதோடு பெரும் அறிஞர். இந்திய கலாச்சாரத்திலும் பண்பாட்டிலும் மிகுந்த நம்பிக்கை உடையவர்…. அப்துல் கலாம், பி.ஏ. சங்மா, இப்போது ராம்நாத் கோவிந்த் – பாஜக அடுத்தடுத்து சிறுபான்மையினர் மற்றும் தலித்களையே உயர்பதவிகளுக்கு முன்நிறுத்துகிறது. இது சந்தர்ப்பவாத , தாஜா அரசியல் அல்லவா என்று நம்மவர்களே சிலர் கேட்கிறார்கள். உண்மையில் இவர்களுக்கு இன்னும் நம் தேச அரசியல் பிடிபடவே இல்லை….

View More பாஜகவின் ஜனாதிபதி தேர்வு ராம்நாத் கோவிந்த்: சில கண்ணோட்டங்கள்

அஞ்சலி: அப்துல் கலாம்

ஒரு சாதனையாளராக கலாமின் வெற்றிக் கதை லட்சக்கணக்கான கிராமப்புற ஏழை மாணவர்களிடையே மகத்தான தன்னம்பிக்கையையும், கல்வியின் மீது பெரும் பற்றையும் உண்டாக்கியது நிதர்சனமான உண்மை… தன்னளவில் மிக அமைதியான, ஆன்மீகமான, மனிதநேயராக இருந்த கலாம் தான், ஒரு கர்மயோகியாக ஏவுகணைகளையும் அணு ஆயுதங்களையும் தேசத்திற்காக உருவாக்கினார். கூடங்குளம் உள்ளிட்ட அனைத்து பிரசினைகளிலும், சமரசமின்றி நவீன அறிவியலின், “வளர்ச்சியின்” பக்கம் நின்று பேசினார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஒரு துறவியாக, மிகக் குறைந்த தேவைகளுடன், மிக எளிய வாழ்க்கை வாழ்ந்த கலாம் தான், அனைத்து மக்களும் அனைத்து வசதிகளையும் பெறும் வகையில் இந்தியா 2020ம் ஆண்டுக்குள் “வளர்ந்த நாடாக” ஆக வேண்டும் என்பதை ஒரு இலட்சியக் கனவாக வலியுறுத்தி வந்தார்…

View More அஞ்சலி: அப்துல் கலாம்

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

முதல் விவாதத்தின் பொழுது ஆரம்பம் முதலே ஒபாமா சுரத்தில்லாமல் இருந்தார். 6 கோடி பேர்களின் அபிமானத்தைப் பெறும் அற்புதமான ஒரு வாய்ப்பை தவற விட்டு விட்டார். ஆனால் அடுத்து நடந்த இரு விவாதங்களிலும் ஒபாமா சுதாரித்துக் கொண்டு தன்னை பலமாக நிலை நிறுத்திக் கொண்டார்… ஜனாதிபதி தேர்வு தவிர ஏராளமான தொகுதி சார்ந்த பிரச்சினைகளுக்கும் தேர்தல் வாக்குகள் மூலம் முடிவுகள் எடுக்கப் படும். எனவே, இங்கு ஓட்டுப் போடுவது என்பது பரீட்சைக்குச் செல்வது போல ஏராளமான கேள்விகளைப் படித்துப் புரிந்து தேர்வு செய்வதைப் போன்றது…. இந்தத் தேர்தலில் ஏராளமான இந்தியர்கள் பல்வேறு பதவிகளுக்காக போட்டியிடுகிறார்கள்….

View More அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [3]

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

ரிபப்ளிக்கன் கட்சி மாநாட்டில் பெரும்பாலும் வெள்ளை அமெரிக்கர்களே கலந்து கொள்கிறார்கள். டெமாக்ரடிக் கட்சி மாநாட்டில் ஆப்பிரிக்க இன அமெரிக்கர்களும், தென்னமரிக்கர்களும், சீனர்களுமாக பல தரப்பட்ட மக்களும் கலந்து கொண்டனர்….இரு கட்சி வேட்ப்பாளர்களுமே உள்நாட்டுப் பிரச்சினைகளில் முக்கியமான மருத்துவக் காப்பீடு, முதியோர் சமூகப் பாதுகாப்புக் காப்பீடு, முதியோர் மருத்துவக் காப்பீடு, ஒருபாலார் திருமணம், கருக்கலைப்பு ஆகிய முக்கியமான விஷயங்கள் குறித்து பரஸ்பரம் குற்றம் சாட்டி… வெளியுறவுக் கொள்கைகள், பருவ நிலை மாற்றம் போன்ற ஏராளமான விஷயங்கள் குறித்தும் இரு தரப்பாரும் மேலும் ஊடகங்களும் பேசுவதைக் கவனமாகத் தவிர்த்து விட்டனர்.பேசிய விஷயங்களையே மீண்டும் மீண்டும் பேசினார்கள்….

View More அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [2]

அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]

ஒபாமா ஈராக்கில் இருந்து அமெரிக்க ராணுவத்தை முற்றிலும் வெளியற்றி விட்டார். போர் மூலமாக அல்லாமல் அதன் மீதான தடைகளை அதிகரிப்பதன் மூலமாக மட்டுமே ஈரானை அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடாமல் தடுக்க வேண்டும் என்கிறார்… பாதிரிகள் ஜெபித்துக் கொடுக்கும் உள்ளாடைகளையே அதன் உறுப்பினர்கள் அணிந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற ஏராளமான அடிப்படைவாத சம்பிரதாயங்கள் நிறைந்த மார்மோன் கிறிஸ்தவப் பிரிவின் உறுப்பினர் ரிபப்ளின் வேட்பாளர் மிட் ராம்னி… அமெரிக்கத் தேர்தல் அமைப்பு சற்று சிக்கலான தேர்தல் அமைப்பு. அமெரிக்கா முழுவதும் அதிக ஓட்டுக்கள் வாங்கியிருந்தாலும் கூட மாநில அளவிலான எண்ணிக்கையைப் பொறுத்த்து ஒரு வேட்பாளர் தோல்வி அடையவும் கூடும்….

View More அமெரிக்க தேர்தல் 2012: ஒரு பார்வை – [1]

முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

ஐ.மு.கூட்டணி ஆட்சியைப் பொறுத்த வரை, கட்சிக்கு சோனியா தலைவராகவும், ஆட்சிக்கு நிழல் தலைமை வகிப்பவராக முகர்ஜியும் இருந்தனர். எனவே தான் முகர்ஜியை வேவு பார்க்கும் பணிகளில் சோனியா சத்தமின்றி ஈடுபட்டுவந்தார்… பானர்ஜி மட்டும் கலாமை தனது விருப்பத் தேர்வாக முன்வைக்காமல் இருந்திருந்தால், அன்சாரியை ஜனாதிபதி ஆக்கி இன்னொரு பொம்மையை அங்கு அமர்த்தி இருப்பார் சோனியா. அதற்கு வழி இல்லாமல், இப்போது தன்னிச்சையாக இயங்கும் பிரணாப் முகர்ஜியை சோனியாவே அறிவித்திருக்கிறார்… கலாமை மீண்டும் தேர்வு செய்யும் அற்புதமான வாய்ப்பு அவர்கள் முன்பு வந்தது. ஆனால், குறுகிய அரசியல் லாபங்களுக்காகவும், தனிப்பட்ட அரசியல் அபிலாஷைகளுக்காகவும் இந்த வாய்ப்பை தவற விட்டுள்ளனர், பிராந்தியக் கட்சிகளின் தலைவர்கள்.

View More முகர்ஜியை ஜனாதிபதி ஆக்கிய பானர்ஜி

கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்

காங்கிரஸ் தரப்பில் ஜனாதிபதி தேர்தலில் களம் இறக்கப்படுபவர் யார் என்பதே ஜுனில் தான் தெரியும். அதற்குள் நமது ஊடக அறிஞர் படை தனது வேலையைத் துவங்கிவிட்டது… தான் களத்தில் இருந்து விலகி இருக்கவில்லை என்பதை அப்துல் கலாம் கோடிட்டுக் காட்டி இருக்கிறார்… மாநில தலைவர்களின் அரசியல் ராஜதந்திரம் தான் அடுத்த ஜனாதிபதியை தீர்மானிக்கும் நிலையில் உள்ளது. அதை அந்தத் தலைவர்கள் உணர வேண்டும். பாஜக, இவ்விஷயத்தில் கூடுதல் ராஜதந்திரத்துடன் செயல்பட்டால், அடுத்த தேர்தலுக்கு முன்னதாகவே ‘ஊழல்’ காங்கிரஸ் கட்சிக்கு பாடம் கற்பிக்க முடியும்…

View More கட்சிகளுக்கு ஒரு ‘லிட்மஸ் சோதனை’ : ஜனாதிபதி தேர்தல்