
இந்த நாட்டின் துரதிர்ஷ்டம், குண்டுவெடிப்புச் சம்பவங்கள் நடந்தவுடனே, ஆளும் கட்சியினர் சிறுபான்மையினரின் வாக்கு வங்கிக்காக குண்டுவெடிப்பின் காரணங்களை திசைதிருப்பக் கூடிய செயலும் நடைபெறுகின்றது… பயங்கரவாதச் செயல்கள் செய்வதற்கு ஆட்களைத் தேர்வுசெய்வதில் கூட இவர்கள் கடைபிடிக்கும் வழிமுறைகள் வித்தியாசமானவையாகும். பாகிஸ்தான் முழுவதும் இவர்களுக்கு அலுவலங்கள் உள்ளன… இந்தியாவிலிருந்து புலம் பெயர்ந்த இஸ்லாமியர்கள் அதாவது அரபு நாடுகளில் பணியின் நிமித்தமாகச் சென்றவர்கள், இத்திட்டத்திற்கு இசைந்து, இதில் தங்களை இணைத்துக் கொண்டார்கள். இஸ்லாமியர்களுக்கு எதிரான அமெரிக்க நிலைப்பாட்டை எடுத்து கூறியே இவர்கள் மூளைச்சலவை செய்யப்பட்டார்கள்…