வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

ஒவ்வொரு ராமாயண நூலும், “இதை ஒட்டி அல்லது வெட்டி இதனின்று வேறு பட்டு அல்லது இதனின்று முரண்பட்டு” என்ற வகையில், கதைக்களனை எடுத்துச் செல்லும் ராமாயண கதாசிரியரோ அல்லது ஆராயப்புகும் ஆய்வாளரோ அடிப்படை அலகீடாகக் கொள்ள விழைவது வால்மீகி ராமாயணம் தான். மனித சமுதாயத்துக்கு முதன் முதலில் கிட்டிய ராமாயண மூல நூல் இது தான் என்பது மறுக்கவியலாதது. அப்படி மறுப்பதற்கு ஏதுவான எந்த சான்றுகளும் இதுவரை கிடைக்கவில்லை… பல பாடாந்தரங்களை பரிசீலனை செய்தபடிக்கு பதிப்பாசிரியர் குழுவினர் சர்வ சம்மதத்துடன் இரண்டு பாடாந்தரங்களை மட்டிலும் அங்கீகாரம் செய்தனர். வடக்கு மற்றும் தெற்கு என்ற இரண்டு பாடாந்தரங்களிலும் பல விஷயங்கள் பிற்காலத்தில் சேர்க்கப்பட்டிருக்கலாம் என பதிப்பாசிரியர்கள் அபிப்ராயப்படுகின்றனர். ஆயினும் தெற்குப் பாடாந்தரம் மூலராமாயணம் என்று கருதப்படும் நூலினை அதனுடைய மூல மற்றும் தொன்மையான வடிவில் அப்படியே பாதுகாத்து வைத்துள்ளது…

View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 3

வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

ப்ராக்ருதத்திலும் மற்றும் சம்ஸ்க்ருதத்திலும் 15க்கும் மேற்பட்ட ஜைன ராமாயண நூற்கள் கிட்டுவதாகத் தெரிகிறது. ராமாயண கதாபாத்ரங்களை அடக்கியுள்ளது என்றாலும் ஜைனக் கோட்பாடான த்ரிஷஷ்டி சலாக புருஷர்கள் (அறுபத்து மூன்று சான்றோர்கள்) என்ற கோட்பாட்டினை ஒட்டி ஜைன ராமாயணக்கதை பௌமாசர்யத்தில் சமைக்கப்படுகிறது. ராமர் பலபத்ரராகவும் லக்ஷ்மணன் வாஸுதேவனாகவும் ராவணன் அவனால் அழிக்கப்பட வேண்டிய ப்ரதிவாஸுதேவனாகவும் உருவகப்படுத்தப்படுகிறார்கள். ஜைனக்கோட்பாடுகளின் படி வாழும் சீதை இறந்தபின் ஸ்வர்க்கத்துக்குச் சென்று பின்னர் மறுபிறவி எடுத்து மோக்ஷம் அடைகிறாள். அப்படி வாழாத லக்ஷ்மணன் நரகத்திற்குச் செல்லுகிறான். மறுபிறப்பில் அவன் சீர்திருத்தம் அடைந்து மோக்ஷத்தை அடைவான் என்று நூல் சொல்லுகிறது. ஜைனக்கோட்பாடுகளின் படி வாழ்ந்த உதாரண புருஷனாகிய ராமபிரான் தன்னுடைய அந்த மனிதப்பிறவியில் மோக்ஷம் அடைகிறான். .. தாய்லாந்தில் ராமகதை வெகுவாகக் கொண்டாடப்படுகிறது. அந்த நாட்டை அடுத்தடுத்து ஆளும் அரசர்களின் பெயர்கள் *ராம* என்ற விகுதியுடன் இருப்பதைக் கவனிக்க வேண்டும். அடுத்தடுத்து தாய்லாந்தினை அரசாண்ட பல மன்னர்களும் ராமகதையை அதிவிஸ்தாரமாக பற்பல நூற்களாக எழுதியுள்ளனர்….

View More வால்மீகி ராமாயணமும் “முன்னூறு ராமகதைகளும்”: ஓர் அலசல் – 2

பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும் தொடர்ச்சி…

முன்னுக்குப்பின் முரணான வகையில் நடந்துக் கொள்வதும் முன்னுக்குப்பின் முரணான வகையில் பேசுவதும் வரலாற்றைத் திரித்துக் கூறுவதிலும் ஈ.வே. ராமசாமி நாயக்கருக்கு நிகர் ஈ.வே. ராமசாமி நாயக்கர்தான்.

View More பெரியாரின் மறுபக்கம் – பாகம் 12 : முரண்பாடுகளும், திரிபுகளும் தொடர்ச்சி…